Pages

Sunday, July 3, 2011

குத்தாலம் vs சென்னை

மீண்டும் நான் ! நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவில், அண்ணன் ஜெய் அவர்களின் என்னத்தை நிறைவேற்ற முயல்கிறேன் !

என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் உங்கள் குறைகளையும் நிறைகளையும் கூறி என்னை மேம்படுத்துங்கள் !

இந்த பதிவின் தலைப்பு : குத்தாலம் vs சென்னை
இதுநாள் வரை சென்னையில் இருந்த நான் கடந்த இருவாரங்களாக சொந்த ஊரான குத்தாலத்தில் இருக்கிறேன்(சும்மாதான் :| )

இந்த இருவார காலத்தில் சந்தித்த நிகழ்சிகளும் காட்சிகளும் முந்தய விடுமுறையை விட குறைவுதான் ஆனால் இவ்விரு ஊர்களில் நான் அனுபவித்த இடங்களையும் குறித்து என்கருத்துக்களை பகிர்கிறேன்!

குத்தாலம் :
என் கல்லூரி காலம் முடிந்தது என் இயலாமையாலும்,அறியாமையாலும் ஏற்பட்ட யுத்தகாண்டத்தை(அதாங்க தேர்வு) முடித்து
வீடிற்கு வந்தேன் !:)

ஒவ்வொரு செயலுக்கும் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட நான்  என்னவானேன் என்று எனக்கே தெரியவில்லை ?!


விடியற் காலை எழுவதும் நடுஇரவில் படுப்பதுமாய் இருந்தேன் !

காலையில் என் ஊரில் கண்ட சில காட்சிகள் :


 எங்க ஊர் பெரிய கோயிலின் ஒரு பகுதி ! என் நண்பர்களுடன் வெட்டி பேச்சிற்கு சிறந்த இடமாக கருதுகிறேன் !


பச்சை பசேல் என வயல்வெளிகள் கண்ணிற்கு இனிமையான காட்சியுடன் உடலில் உரசி செல்லும் தென்றல் என அருமையான அமைதியுடன் ஒரு இடம் ....இது போதும் அறுவடை வரை ஒரு கவலை இல்ல !

அப்பப்போ மின்தடையுடன் பிவிசி நிறைய தண்ணீர் :)முன்பை விட இப்போது மதிப்பில்லாமல் போனாலும் ருசி மாறாத சர்பத் !காவேரி கரையினில்  நிரம்பி வழியும் தண்ணீர் எங்கும் காணாத சுத்தத்துடன் !
கரையோர மக்களை மகிழ்வித்து செல்கிறது !


இது தவிர அணைத்து அத்தியாவசிய வசிதிகளுடன்  நம் தேவைகளும் திருப்தி அடையும் வகையில் இருக்கும் எங்க ஊரை வேறு எந்த ஒரு ஊரோடும் ஒப்பிட மனமில்லை !

சென்னை :
இது வரை கூறிய எதுவும் கிடைக்காத ஒரு மாநகரம் ! 

நாம் ஒரு சாமானியறாய் இருந்து கனவு காணும் சில விஷங்கள் இங்கே சாதரணமாய் நடக்கும் !
நடுத்தர வர்கத்தின் சிறப்பு சுற்றுலா தளமும் ,உலகிலயே மில நீளமான கடற்கரையும் கொண்ட சென்னை மாநகரம் சிறப்புகள் சில
இங்கே எல்லா படங்களிலும் காட்டுவது போல் சிறப்பான சென்றல் ரயில் நிலையமும் ,அருகிலேயே மிக பெரிய அரசு மருத்துவமனையும் இருக்கிறது அனைத்தும் சாமானியர்களுக்கு உதவுவது !
   அதை தவிர சில அறிய வகையான இடங்களும் இருக்கிறது மாமல்லபுரமும்,வண்டலூர் உயிரியல் பூங்காவும் மக்கள் அதிகம் நாடும் இடங்கள் மிகவும் அருமையான இடங்கள்  !

என்ன சொல்றது இங்க இருக்குறது வேறு விதமான அனுபவம் இதுவும் நல்லா இருக்கும் தேவைக்கேற்ப  பணம் மட்டும் இருந்தால் !
:)

சென்னைகென்றே உரிய தனிசிரப்புகளும் துயரங்களும் : வெயில் ,தண்ணீர் குறை ,ஒரு நாளில் முடிக்க முடியாத சுற்றுலா தளங்கள் ! ,ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு போக்குவரத்து நெரிசல்,டி.நகர்,பிரமிப்பூட்டும் திரையரங்குகள் ,உல்லாச விடுதிகள்(pub), கண்ணெதிரே நடக்கும் விபத்துகள்,கொலைகள்,சொகுசு கார்கள்,அமைதியே இல்லாத இரைச்சல்கள்,இவையெல்லாம் இல்லை என்றால் அது சென்னையே இல்லை !!


இதுபோல் கொண்டாட்டங்களும் துயரங்களும் நிறைந்த சென்னை ஒரு தனியழகுதான் !ரசிப்பதும் வெறுப்பதும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது !
சூழ்நிலைகளும்,இக்கட்டான தருணங்களும் அவற்றை மாற்றுகின்றன !

எக்காரனதிர்க்காகவும் என் சொந்த ஊர்வாழ்கையை குறைசொல்ல மாட்டேன் ....

ஆனால் சென்னை வாழ்கையும் ஒரு தனி சுகம்தான் !

நிச்சயமாக மறுக்க மாட்டேன் ! :)

பிடித்தால் ஒரு ஓட்டும் பிடிக்கலன்னா ஒரு கமெண்ட்டும் போட்டு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன் .....

படங்கள் :
குத்தாலம் :பிரபா :)
சென்னை : கூகிள் :)

Thursday, February 17, 2011

கைபேசியும் கைக்குழந்தையும் !!!

பதிவெழுதி நீண்ட நாள் ஆச்சு !
திடீர்னு இந்த செய்தியை பதிவேழுதியே  தீரணும்னு தோனுச்சு இது பல பேருக்கு பெரிய விஷயமா தெரியல ஆனா கவனிக்க வேண்டிய செய்தி !

அண்மையில் உறவினர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது அங்கு அவர்களின் குழந்தை  விளையாடிக் கொண்டிருந்தான் . விளையாடுவதில் தவறில்லை ஆனால் அவனின்  விளையாட்டு பொருள் ஒரு கைபேசி !
கைபேசியில் இருந்து வரும் கதிர்வீச்சு பெரியவர்களையே பாதிக்கும்போது சிறுகுழந்தைகள் நிலை என்னாவது ?'
சிட்டுகுருவி இனம் இருந்ததற்கு அடையாளம் கூட குறைந்துவிட்டது ! காரணம் கைபேசி கதிர்கள்தான் !!

சன்னலை திறந்தால் பசுமையாய் தெரியும் மரங்கள் இன்று இல்லை , கைபேசி கோபுரங்கள் மட்டும்தான் தெரிகிறது !! எங்கு சென்றாலும் அமைதி இல்லை கைபேசி சிணுங்கலும் "ம்ம்" கொட்டும் சத்தமும்தான் கேட்கிறது !


""ட்விட்டர் குருவி "" தெரிஞ்சஅளவு கூட யாருக்கும் இன்னக்கி "சிட்டுகுருவி" நியாபகத்தில் இல்லை இதுதான் இன்றைய நிலை !! 


 
இதன் தாக்கம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அதிகஅளவில் இருக்கும்.நண்பன் வீட்டில் பிறந்தகுழந்தையின் அருகிலயே ஒரு கைபேசி எப்போதும் இருக்கிறது ஏன் என்று கேட்டால் பத்திரமாக இருக்குமாம் ?!


இப்படி பிறந்ததிலிருந்தே கைபேசியும் கையுமாக இருந்தால் வளர்ந்து மூன்றாம் வகுப்பு போகும் போதே கையில் கைபேசியுடன்தான்  அனுப்ப வேண்டும் .... இதன் விளைவு கண்டிப்பாக மோசமாக இருக்கும் !

சில பேர் தன குழந்தை இந்த வயசிலயே கைபேசியை கையாளுகிறான்னு பெருமைபடுகிறார்கள் ஒரு நாளாவது உணர்வார்கள் !!

சில பெற்றோர்களை  கேட்டால் அடுத்த தலைமுறை என்று சொல்கிறார்கள் !
அப்படியென்றால் அடுத்த தலைமுறையினர் அனைவரும் தலையில் கட்டியுடனும் , கான்செருடனும்தான் இருக்க முடியும் !

நாம் அலட்சியமாக இருக்கும் ஒவ்வொரு சிறுவிஷயத்திற்கும் கண்டிப்பாக விளைவு இருக்கிறது அதை உணரும்போது அது கட்டுக்கடங்காத நிலையில் இருக்கும் என்பது உறுதி !!


முடிந்த அளவு இந்த செய்தியை நாம் நம் நெருங்கியவர்களுக்காவது சொல்வோம் !
 என் பதிவை படிக்க ஆள் சேர்க்கவில்லை படிப்பவர்கள் அடுத்தவரிடம்  கூறினால் கூட போதுமானது !

(பதிவ படிச்சிட்டு இவனுக்கு யார் டா கணினிய உபயோகிக்க கத்துகொடுத்ததுன்னு நினைக்காதீங்க :) )

புதிவு பிடித்தால் நண்பர்களிடம் சொல்லுங்க பிடிக்கலன்னா பின்னூடத்தில சொல்லுங்க !!!Monday, January 31, 2011

Your support can make a difference in Indian Fishermen's Life


Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail


Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011 ,  Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy - 
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
 Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman  

4.Read and contribute articles for www.savetnfisherman.org 

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com,tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian
இன்னும் பல ஆயிரம் கையெழுத்துக்கள் தேவைப்படுகிறது...தாங்களும் பதிவின் மூலமாகவும்,மின்னஞ்சல் மூலமாகவும் இதனை தெரியப்படுத்தவும்