என்ன கொடும இது !
நம்ம ஜில்லு என்ன விட்டுட்டு டூர் போய்ட்டான் பாஸ் !!
அப்படா
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
சந்தோசமா இருக்கலாம்ன்னு பாத்தா செம்ம காண்டுப்பா !
அதான் ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள்ன்னு இந்த சோகமான நேரத்த உங்க கூட பகிர்ந்துகிறேன் !
நீ இல்ல !
நிஜம் இல்ல !
நிழல் கூட துணை இல்ல !
ஜில்தண்ணி ஊர்ல இல்ல !
மொக்க போடா கம்பெனி இல்ல !
ப்ளாக் பாக்கவே பிடிக்கல !
ட்விட்டர்ல ட்விட்டவும் தோனல !
வெட்டியா மெயில் செக் பண்ணல !
அட இன்னக்கி கலூரிக்கே போகல !
உன் புது பதிவு பாக்காம என் கண்ணு ரெண்டும் தூங்கல !
உன் மொக்கைய படிக்காம நான் இன்னக்கி பல்லே விலக்கல !
நீ அங்க குளிக்க மட்டும் தான் போயிருக்க (குற்றாலம்)
நான் இங்கு குளிக்கவே இல்ல !
நீ அங்க எப்பவும் தண்ணில ஜில்தண்ணியா இருப்ப
நான் தனியா "ஒரு குவாட்டர் தண்ணில இருக்கேன் "!
நீ ஒரு கூட்டமா அங்கயும் மொக்க போட்டுக்கிட்டு இருப்ப
நான் இங்க தனியா குப்ப கொட்டிகிட்டு இருக்கேன் !
நீ இல்லாமல் என் உடல் .....
உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது ................
இதனால நான் என்ன சொல்ல வரேன்னா
நீ அங்கயும் ஜில்தண்ணியாவே இரு
நீ சீக்கிரம் வரலன்னா நா இங்க பயங்கர சூடா சுடுதண்ணியா மாறிடுவேன் !
தம்பி ஜில்தன்னியை சீக்கிரம் வரும்படி கேட்டுகொள்கிறேன் !
(பின்குறிப்பு வந்ததும் ட்ரீட்டு !)
நாள் தாமதம் ஆனா அடி உதை ஆகிய அனைத்தும் இலவசமகா ஜில்லுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் !!!
இந்த பதிவு புடிச்சா கீழ ஒரு குத்து குத்துங்க (நம்ம ஜில்ல குத்துறதா நெனசுகிட்டு )
இது என் லேப்டாப் ல எழுதுற முதல் பதிவு !:)
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
1 week ago