ஆனா எந்திரன்க்கு எதிர்மறை பதிவு போட்டு நல்லா ஹிட்ஸ் வாங்குனாங்க !
அவுங்க எல்லாரோட பதிவுலயும் காலநதி மாறன் , சன் பிக்சர்ஸ் மேல இருக்கும் கோவத்தை கட்டுறாங்கன்னு தெளிவா தெரியுது அத ஏன் படத்து மேல கட்டுனாங்கன்னு புரியல ! அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற அளவுக்கு நான் இன்னும் வளரல :) . நானும் ஒத்துகிறேன்
டீவீல அவுனுங்க பண்ணுறது கொஞ்சம் ஓவர்தான் ஆனா படத்துல குறை சொல்ல முடியாது ! சில பேர் எதிர்மறை பதிவு ஹிட்சுகாக போடுறதையும் சில பேர் சன் பிக்சர்ஸ்க்காக போடுறதையும் தெளிவா பாக்க முடியுது !
சரி அத விடுங்க எனக்கு படம் புடிச்சிருக்கு . நேத்து எந்திரன் பாக்குறதுக்கு முன்னாடியே நான் மந்திரன் பாத்தேன்
இங்க எதனை பேர் போரூர் பக்கம் போனீங்கன்னு தெரியல போனா பாத்திருக்கலாம் !
போனா வாரம் புதன் கிழமை மாலை போருர்ல பேருந்துக்கு நின்னபோ என்னையறியாம ஒரு பெரிய சைஸ் கட்அவுட் என்ன கவர்ந்துச்சு "அது என்னன்னா நம்ம தளபதி அதான்பா நம்ம துணை முதலமைச்சர் அவுரோட கட்அவுட்தான் அது" செம காமெடி பாஸ் !
எந்திரன் பட ரஜினி ஸ்டில்ல போட்டோஷாப்ல மாத்தி தளபதி போட்டோவ போட்டு இருந்தாங்க ! உடனே எடுத்துடோம்ல கிளிக்கு :)
இத அவரே பாத்துட்டு கடுப்பாகி எடுக்க சொல்லிருப்பார்ன்னு நினைக்கிறேன் அடுத்தநாளே இந்த ஒரு கட்அவுட் மட்டும் காணமல்போச்சு !! நமக்கு ஒரு மேட்டர் மாட்டுச்சு அது போதும் !!:)
அப்புறம் இன்னக்கி என் நண்பனோட பிறந்தநாள் !
போன வருஷம் ரொம்ப சிறப்ப கொண்டாடினோம் ஆனா இந்த வருஷம் சில காரணங்களால் சிறுசா கொண்டாடபோறோம் ! என் பிறந்தநாள் வாழ்த்த முதல் முறையா பதிவுமூலமா தெரிவிக்கிறேன் :)
அவனுக்காகதான் பதிவின் பெயரில் நம்பர் !
அப்புறம் சில கமெண்டுகளை பெற்ற என் மொக்கைகளை இங்கு போட்டு உங்களோட கம்மேன்டையும் வாங்கனும்னு ஒரு ஆசை !