அனைவருக்கும் என் வணக்கம் !
இன்னக்கி நான் கல்லூரி முடிஞ்சு வருகிறபோது என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி அதன் மூலமே இந்த பதிவு !
என்னவோ குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்ன்னு அறிக்கைலாம் விடுறாங்க tollfree நம்பர்லாம் குடுக்குறாங்க
எந்த அளவுக்கு அதுல வேல நடக்குதுன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னக்கி பாத்த அந்த சம்பவத்த பொருக்க முடியல !!!
என்னடா இவன் சம்பவம் சம்பவம்ன்னு சொல்றானே என்ன சம்பவம்ன்னு ரொம்ப யோசிக்காதீங்க இதுதான் ........
கல்லூரி முடிஞ்சு வீடு திரும்போது பேருந்தை விட்டு இறங்கி பத்தடி வைத்திருப்பேன் ஒரு 13 இல்ல 14 வயசு இருக்கும் ஒரு சிறுவன் "அண்ணா ஆப்பிள் வேணுமான்னா ?"
ஒரு சிறிய சாலையோர பழக்கடை வழக்கம்போல் நானும் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன் !
ஒரு நொடி திரும்பிய நான் கடையருகில் சென்று பார்த்தேன் அவனை பார்த்தால் தெளிவான சென்னை சிறுவன்
"காதில் கடுக்கனும் , முக்கால் டௌசரும் ,டி.ஷர்ட்டும் " அணிந்து ஏனென்று தெரியவில்லை அவனை கண்டதும் எதாவது வாங்க தோன்றியது அவனிடம் வாழைபழம் கேட்டுவிட்டு "என்ன படிக்கிறாய் என்று கேட்டேன் "
அதற்கு அவன் "இல்லன்னா நான் நிறுத்திட்டேன் !" என்றான் . ஏன் என்றேன் ? "இல்ல படிக்கல !" என்றான் .
எதனாலன்னு கேட்டேன் ? "நான் பள்ளிகூடதிர்க்கே போனதில்ல !" என்றான் ஒரு நொடி அதிர்ந்தேன் !
எனக்கு வார்த்தை வரவில்லை ! அங்கிருந்து என் உடல் மட்டும் நகன்றது .... மனதை விட்டு !
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாம் ?!
எத்தனையோ பேர் கல்வி அமைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆனாலும் இந்த அவல நிலை ஏன் ?
எனக்கு யோசிக்க பொறுமையில்லை திட்டிதீர்த்துவிட்டேன் !
இலவச ஆரம்ப கல்வின்னு சொல்றாங்க ....
இலவச சாப்பாடுன்னு சொல்றாங்க.....
இலவச சீருடை , நோட்டு புத்தகம்,செருப்பு ,முட்டை ,.
இவ்ளோ இருந்தும் இன்னும் இப்டி நிறைய பேர் இருக்காங்க !
இதுல்லாம் கொடுத்தா இன்னும் நிறைய பேர் படிக்க வருவாங்கன்னு நினைச்சேன் ...
ஆனா நம்ம ஆளுங்க என்னக்கி சாப்பாடு போடுறாங்களோ அன்னகி மட்டும் போய் சாப்டு வராங்க ?!
சரி கொடுக்குறது தான் ஒழுங்கா கெடைக்குத இல்ல!
எங்க ஊர்ல முட்டைலாம் பக்கத்துக்கு கடைல விதுடுறாங்க !
எல்லா துறையும் இப்டிதானா ?
(எப்டி பாத்தாலும் அவுங்க குடும்பம் மட்டும் கோடிகள்ள வளருதே ?)
இன்று உலகில் எல்லா மூலையிலும் கல்வி மட்டும் தான் நட்டமில்லா தொழில் !
சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !
இதுக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க ?
என்னவளே...அடி...என்னவளே...
-
*அத்தனை அழகையும்*
*மொத்தமாய்க் கொண்டவள்*
*நித்தமும் என்னையே*
*நீங்காது வெல்பவள்!*
நெல்லை அன்புடன் ஆனந்தி
2 days ago