Pages

Monday, January 31, 2011

Your support can make a difference in Indian Fishermen's Life


Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail


Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011 ,  Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy - 
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
 Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman  

4.Read and contribute articles for www.savetnfisherman.org 

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com,tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian
இன்னும் பல ஆயிரம் கையெழுத்துக்கள் தேவைப்படுகிறது...தாங்களும் பதிவின் மூலமாகவும்,மின்னஞ்சல் மூலமாகவும் இதனை தெரியப்படுத்தவும் 

Thursday, December 30, 2010

புத்தாண்டை கொண்டாடுவோம் கத்ரீனாவுடன் ...[:-)

என்ன பதிவு போடலாம் என்று யோசித்து யோசித்து மண்டை வீங்கியதுதான் மிச்சம்
நண்பனிடம் கூறினால்" b +ve "என்கிறான் என்னடா சொல்றன்னு கேட்டா

தெளிவா சொல்றான்னு சொன்னா "think possitive " என்ன போடலாம்னு யோசிக்காம எதாவது போடணும்னு யோசின்னு சொன்னான்

சரி அதையே ஒரு பதிவா  போடலாம்னு முடிவு பண்ணி ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன் ...

சரி இத மட்டும் சொன்னா போதுமா ?

இல்ல ரெண்டு நாள்ள புது வருடம் பிறக்க போகுது சரி இதுதான் வாழ்த்த  சரியான நேரம்னு இந்த பதிவுல என் புதுவருட வாழ்த்த எப்படி சொல்லலாம்னு யோசிச்சப்ப

நம் பதிவுகல்கிர்க்கு
உச்சத்தில் புகழுடன் திகழும் அணைத்து பதிவரசர்களுக்கும்
கம்மண்டே வராத பழைய பதிவுகளை மறந்து
புதிய பதிவை புதிய பொலிவுடன் பிரதிபலிக்க முயற்சி செய்யும்
புதிய பதிவர்களுக்கும் என் புதிய பதிவுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!


பிறகு நம் பதிவர்களுக்காக ஒரு சிறிய பாடலையும் இணைத்திருக்கிறேன் புடிச்சா இன்ட்லில ஒரு குத்து குத்துங்க :)

[அட எனக்காக இல்லனாலும் பரவில்ல மேடம்காகவாச்ச்சும் ஒரு கமெண்ட் போடுங்க :) ]


இந்த காட்சியை பார்த்து கொஞ்சம் சிரிச்சிகிட்டே கமெண்ட் போடுங்க :)




அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

1 )சைவம்


அணைத்து துயரங்களையும் மறந்து
சந்தோஷமாய்  கொண்டாட என் வாழ்த்துக்கள் :)

2 )அசைவம்   


இந்த புத்தாண்டை குடியும் கூத்துமாய் சந்தோசமாய் கொண்டாட என் வாழ்த்துக்கள்


கடைசியா என்னோட  இந்த தலைப்புக்காக ஒரு படம் :)




think possitive

Sunday, December 12, 2010

டிக்கெட் டிக்கெட் .....


இந்த பதிவில்  பேருந்தில் நான் சந்தித்த அனுபவங்களையும் கேட்ட செய்திகளையும் உங்களிடம் பகிர்கிறேன் .......


சாதாரணமாக டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் கூட்டமாக இருந்தாலும் கூட்டம் இல்லாவிட்டாலும் அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் வழக்கம் மறைந்தே போய்விட்டது .. குறிப்பாக சென்னையில் மற்ற ஊர்களில் கூட இப்படி இல்லை .

அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை விட்டு அவர் நகருவதே இல்லை அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் மிகவும் சிலரே உள்ளனர் .

ஆனால் மீதம்மிருக்கும் நடத்துனர்களால் எல்லார் மேலும் ஒரு வெறுப்பு வருகிறது .

கூட்டமா இருக்கு அப்டியே பாஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டு உக்காந்திருப்பார் பயணிகளும் வேறு வழியின்றி பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிகொல்கிறார்கள்.
 
சில சமயம் டிக்கெட் வரும் சில்லறை வருவது இல்லை 
சில சமயம்  சில்லறையா கொடு இல்ல அடுத்த நிறுத்தத்துல இறங்கிக்கோன்னு  சொல்லிடுறாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு பயணிகள் மேல வெறுப்பா ?

ஆனா பல சமயங்கள்ல இதுக்கு பயணிகளும் ஒரு காரணமா இருக்காங்க நடத்துனர்கள் உட்காந்திருந்தா அவங்க கிட்டயே போய் டிக்கெட் வாங்கிட்டு வாரங்க !
சரி அவங்களும் எவ்ளோ நேரம்தான் நடபாங்கன்னு நினைக்கலாம் ஆனா வேலைநேரம் முழக்க உகார்ந்தே  வேலை செய்ய அவுங்க ஏன் நடத்துனர் வேலைக்கு வரணும் ?

சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் :
ஒரு பள்ளிச்சிறுவன் பேருந்தில் முன் பக்கத்தில் ஏறியிருக்கிறான் பேருந்து கூட்டமாக இருந்ததுனால நடத்துனர் வருவார்ன்னு காத்திருக்க அடுத்த நிறுத்தத்துல பரிசோதகர் எறியிருக்கார் இவனிடம் டிக்கெட் இல்லை . அவன் சிறுவன் என்றும் பார்க்காமல் அவனை உலுக்கி இருக்கிறார்கள் அவன் நடத்துனர் வருவார்ன்னு இருந்தேன் அவர் வரல என்கிட்டே பணம் இருக்குன்னு சொல்லி காட்டின பிறகும் அவர்கள் அவனை அந்த கூட்டத்துலயும் சட்டைப்பையில் துலாவி இருக்கிறார்கள் பிறகு ஒன்னும் "தேராததால்"  திட்டி விட்டு சென்றுவிட்டனர்  பிறகு நடத்துனர் வந்து அவர் பங்குக்கு நாலு திட்டு திட்டிவிட்டு  டிக்கெட் கொடுத்து செல்ல அவன் கூனி குறுகி அழுதுகொண்டே சென்றிருக்கிறான் .

அவர்களுக்குள்ளயே பல சங்கங்களாக இருகிறார்கள் , அதிலும் திமுக மற்றும் ஆதிமுக என இரு சங்கங்கள் போன மாதம் போக்குவரத்து கழகதுகுள்ளயே தேர்தல் போல் வைத்து உறுபினர்களை தேர்ந்தெடுத்தார்கள் அதில் தவறில்லை ஆனால் அந்த பரபரப்பில் பேருந்தை ஒரு சிலமணிநேரம் இயக்கவில்லை இதனால் பல பயணிகள் வேறு வழியின்றி ஆடோவிலும் லாரியிலும் சென்றனர் .

கேட்பதற்கு ஆள் இல்லாமல் ,இது போல் தினம் தினம் பல சம்பவங்கள் நடக்கிறது .
 மக்களின் நிலை ஒரு குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டுள்ளது அதிலும் ஒவ்வொரு
துறையினரும் விளையாடுகிறார்கள் .

இது போல் பல ரணங்களை சந்திக்கும் மக்களின் நிலை


                                                                    ?


இங்கு உங்களுடன் பகிர்ந்த அனைத்தும் எனது அனுபவங்கள் மட்டும்தான் ..

பிடித்திருந்தால் இன்ட்லியிடம் சொல்லுங்கள் பிடிக்கலன்னா  பின்னூட்டத்துல சொல்லுங்க மறக்காம !

Thursday, October 28, 2010

பயடேட்டா

ஏங்க நீங்களே கேளுங்க, குத்தாலத்தானுக்கு செமஸ்டர் வந்துட்டாம் அதனால ஒரு ரெண்டு மாசத்துக்கு ட்விட்ட மாட்டானாம்,யார் பதிவும் படிக்க மாட்டானாம், கேட்டா சின்சியரா படிக்கிறானாமா(உன்னய பத்தி எனக்கு தெரியும்டி)

தீபாவளிக்குகூட ஊருக்கு வந்து கொண்டாடமாட்டானாம், ஏண்டான்னு கேட்டா இந்த முறை பரிட்சையே தீபாவளியா கொண்டாவேங்கிறான்(முடியலடா சாமீ)

சரி அவன் தான் இந்த பக்கம் வரமாட்டேனே, அவன பத்தி புட்டு புட்டு வக்கிறேன் கேளுங்க :)


உண்மையான பெயர்     :     பிரபாகரன்(விடுதலை புலி இல்ல)

வயசு                                     :        வாலிப வயசு 21

தற்போதைய தொழில்       :  பொறியியல் படிப்பை கருமமே கண்ணாக
                                                        படிப்பது(மச்சி படிக்கிற தானே)

பொழுதுபோக்கு                   :      இணையத்தோடு இனைந்தே இருப்பது,                                                                                     என்னோடும்   நண்பர்களோடும் மொக்கை                                                                             போடுவது

நண்பர்கள்                               :        என்னையும் சேத்து ஒரு ஆயிரம் பேராவது                                                                           இருப்பாங்க

எதிரிகள்                                  :        பூச்சிகள்(உன்னைய கடிக்காத பூச்சே                                                                                        இல்லல்ல   மாமா )

ஊருக்குள்                              :        நான் அவன் இல்ல


ரொம்ப பிடித்தது                  :         சோனி எரிக்சன் மொபைலும் வகை                                                                                             வகையாய்   டீ-சர்ட்டுகளும்

பிடிக்காதது                              :         சீன் போடுவது,உண்மையையே                                                                                                 பேசுவது(இது   உண்மை இல்லீங்கோ)

அடிக்கடி செய்வது               :       தன்னையே வித்யாசம் வித்யாசமாக போட்டோ                                                                 எடுப்பது

இதுவரை செய்யாதது         :      செய்யாத தில்லாலங்கடியே இல்ல

செய்ய நினைப்பது                :       ஊருக்கு எதாவது நல்லது செய்யனும்னு                                                                               நினைக்கிற நல்ல மனசு

சமீபத்திய சாதனை              :       சுழிய  சுருட்டிகிட்டு படிக்க உட்கார்ந்திருப்பது                                                                       (படிக்க புத்தகத்த எடுத்துட்டான் அடுத்த ப்ளான்                                                                   புத்தகத்த திறக்கனும்)

நீண்டகால சாதனை          :        ஊருக்குள் நல்லவன் போலவே நடமாடுவது

வருங்கால சாதனை          :         மச்சி இந்த மைக்ரோசாஃப்ட்,கூகுள் போன்ற                                                                         சின்ன கம்பெனிகளை ஓரங்கட்ட ஒரு பெரிய                                                                       கம்பெனி நீதான் ஆரம்பிக்கனும்டா

பெண்கள்                      :                  எல்லா இளம் பெண்களும் இவனுக்கு அக்கா                                                                          தங்கச்சி  மாதிரி(மச்சான் எப்புடி)

காதல்                                    :         வந்துச்சி ஆனா போகல (என்ன வாந்தியா)

கவிதை                                 :         இவன் கிறுக்குறது கூட கவித                                                                                  ( கழுத இல்ல கவித கவித )

ஏமாந்தது                               :         ட்விட்டர் மீட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்து ஏமாந்தது

புதுசு                                       :    டெல் லேப்டாப்

பழசு                                       :     பழசையெல்லாம் தூர போட்டுட்டு எல்லாம்                                                                           புதுசுதான் (எல்லாமே தான்)

கடைசியா  உனக்கு         :     மச்சி நீ கேளேன் , நீ கேளேன்



                                    

Sunday, October 17, 2010

நான் பார்த்து மிரண்டு போன நிழற்படங்கள் !!



என்ன ஒரு ரௌடித்தனம் :)





இந்த உடம்பு இதையெல்லாம் தங்குமா ?





டைம் போகலைன்னா இப்டியெல்லாம் யோசிப்பாங்களா ?




ஆஹா அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு சீக்கிரமே நடக்க போகிறது ! :)





இத அடிச்சு முடிச்ச உடனே அவருக்கு கான்செர் வந்துரும்ன்னு நெனைக்கிறேன் என்ன சொல்றீங்க ?

Wednesday, October 13, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- அரசுக்கு வேண்டுகோள்





சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்டஆளுருட்டி மலை
 
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
 
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
 
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்
 
நண்பர் ஆருரான் வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு....
 
To
The Collector,
Pudukottai Dist.
 
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.

Sunday, October 10, 2010

சரக்கு அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்க என்னக்கி சரக்கு அடிச்சாலும் ஒரு காரணம் இல்லாம அடிக்க மாட்டாங்க !
என் நண்பர்கள் சரக்கு அடித்த சில கரணங்கள் !!

*போன வருடம்  விபத்தில் இறந்த ஆந்திர முதல்வருக்காக சரக்கடிதனர் !

* நண்பன் 1 :மச்சி அவ திட்டிட்டா  டா....
நண்பன் 2 : சரி வா சரக்கடிக்கலாம் :)

*எங்க கல்லூரி முதல்வரின் தாயார் இறந்ததற்கு :(

*எங்க வகுப்புல ஒரு பத்து பேருக்கு அபராதம் போட்டதற்கு :|


*பாஸ் ஆனா சந்தோஷ சரக்கு இல்லனா  துக்க சரக்கு ..:)

*புது கைபேசி வாங்குனா சரக்கு தொலைஞ்சு போனாலும் தான் ...,


*பரிச்சை முடிஞ்சா சரக்கு ,


*வாரக் கடைசி  நாள் சரக்கு ,


* பிறந்தநாள் சரக்கு ,

*சளி புடிச்சாகூட சரக்கு  
கேட்டா ரம் அடிச்சா சளி போயிருமாம் :|


  இப்டி எவ்ளோவோ சொல்லிக்கிட்டு  போகலாம் ஆனா என்ன காரணத்துக்காக சரக்கு அடிச்சாலும் அவுனுங்க பேசறது இந்த விஷயம்தான் இருக்கும் !

*நீ ரொம்ப நல்லவன் டா மாப்ள :)  (வாங்கி தர மாட்டேன்னு சும்மா சொன்னதுக்கு வண்ட வண்டையா கேட்டியே  டா )

*டேய்  சரக்குல இருக்கேன்னு நெனைக்காத நானே வண்டி ஓட்டுறேன் :|(வேணாம் டா வண்டி என்னுது  :( )

*ஏன் மச்சி இன்னக்கி எவ்ளோ அடிச்சாலும் ஏற மாட்டுது (டேய் அவன் பக்கத்துல இருக்குற சோடா பாட்டல எடுரா நாய் சோடா மட்டும் குடிச்சுட்டு எரலன்னு மொக்க போடுது :)

*நான் போதைல ஒளர்ரெண்ணு நினைக்காத டா  எப்போதுமே போதைல இருக்குறவன் தான் உண்மைய பேசுவான்
(அய்யே சொல்லிடாரு அரிச்சந்திரன் தம்பி ! ஓடி போயிரு டா அடி வாங்கம )

*மச்சி இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும் டா !
(உங்க மாமனார் கடையா  மச்சி ! )

*மச்சி எடுத்துக்கோ என் உயிரே உனக்குத்தான், உனக்காக என்ன வேணும்னாலும் கொடுப்பேன் டா (நீ அடிச்ச சரக்குகே நான்தான் கொடுக்க போறேன் கொய்யால பேச்சை கொறடா வந்துடாரு அம்பானி பேரன் )

*மச்சி என்னடா இது சரக்கு, நாளைலேந்து சரக்கே அடிக்க கூடாது டா (அடப்பாவி போன வாரமும் இதத்தான சொன்ன )

*இருந்தாலும் அவ அப்டி சொல்லியிருக்க  கூடாது டா ! புடிகிலன்ன விட வேண்டியதுதான அசிங்க படுத்திட்டா மச்சி (டேய் நீ லவ் சொல்லி 3  வருஷம் ஆகுதுடா )


அதுவும் இவணுங்க அடிச்சிட்டு பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியாது ....
ஓம்லெட் போட்டுட்டு டார்ச்சர் பண்ணிருவானுங்க !
அவன் சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் பக்கத்துல இருக்குரவந்தான்  கரணம் மாதிரி பேசுவானுங்க '
புதுசா வந்து சரக்கு அடிச்சுட்டு அதுவும் 2  கட்டிங் அடிச்சுட்டு  ஒரு புல் அடிச்சா மாதிரி  சீன் விடுவானுங்க  !

ஒன்னு நம்மளும் சரக்கு அடிக்கணும் இல்லனா சரக்கு அடிகிரவன் கூட போக கூடாது !

நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !
 







சரி நான் சரக்கு அடிக்க போறேன் !(போன பதிவுல யாருமே இண்ட்லில  ஓட்டுப்போடலை அதுக்காகதான் :(  )
அடுத்த பதிவுல பாப்போம் !

சரக்கு பத்தி பதிவு போட்டதும் படிச்சுட்டு கேளம்பிடதீங்க கமெண்ட் போடுங்க அப்புறம் இந்த பதிவு எல்லா குடிமக்களுக்கும் சேரனும் அதுக்காக வோட் போடுங்க :) அப்பத்தான் சந்தோசமா சரக்கு அடிக்க முடியும் !! :)