Pages

Sunday, July 14, 2013

டேவிட்டின் மர்மக்கொலைகள்

டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி .இவனெல்லாம் டிகிரி முடிபானென்று யாரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள் ,உண்மையில் டேவிட்ட்டை பொறுத்தவரை அது ஒரு கனவுதான் . வாரமுழுக்க படம் பார்ப்பதும் தூங்குவதுமாக இருப்பவன் வார இறுதியில் வேறு ஒருவனாக இருப்பான் (ஒரு படத்தில் ஆறு மணிக்கு மேல் வடிவேலு இருப்பாரே அது போல்),என்ன நடந்தது நடக்குது நடக்க போவது எதுவுமே தெரியாது இரண்டு நாட்களுக்கு ,எப்படியாவது ரெண்டு நாட்களுக்கான "பெட்ரோலை" உசார் பண்ணிருவான்  .

டேவிட் ஒரு ஆங்கில பட பைத்தியம் குறிப்பாக ஹார்ரர் படமென்றால் அவனுக்கு சோறு தண்ணி எதுவுமே வேண்டாம் ,அவன் வருடமுழுக்க பார்ப்பது saw  படத்தை திரும்ப திரும்ப பார்ப்பான் இல்லையெனில் final  destination  இவ்விரு படங்களின் அணைத்து பாகங்களும் அவனுக்கு மனப்பாடம் அவ்வளவு முறை பார்த்திருக்கிறான் .

அந்த இரு படங்களின் தாக்கத்தால் அவன் ரோட்டில் நடக்கும் போது பேருந்தில் பயணிக்கும் போது நண்பனுடன் வண்டியில் செல்லும்போது இப்படி அவன் பயணிக்கும் எல்லா நேரத்திலும் அதே சிந்தனையில் இருப்பான் 

யாரவது நன்றாக நடந்து செல்லும் போது அவரை கடக்கும் லாரி டயரில் அவர் சிக்கி அவர் தலை சிதறி கிடப்பது போல் ஒரு விஸ்வல் தோன்றும் ,வண்டியில் செல்லும் போது அவனையறியாமல் அருகில் செல்லும் லாரி அல்லது பேருந்து டயரை பார்த்தாலும் மண்டையில் படம் ஓடும் டேவிடுக்கு

சில நேரத்தில் யாரையாவது அதுபோல் கொள்ள வேண்டும் இல்லை கொள்வதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓடும் .

இது எண்ணத்தோடு முடிய வில்லை இதை அவன் நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் அவனை கலாய்த்தார்கள் "உன் மூஞ்சிய கிட்டகக்க பாத்தாலே ஆள் க்ளோஸ் மச்சி என்று"

ஆனால் டேவிட் கொஞ்சம் தீவிரமாகவே இருந்தான்,கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் ஆனால் தன்னை பாதித்துவிடகூடதென்பதில் தெளிவாக இருந்தான்.

அன்று அது நடந்தது ,
வழக்கம் போல், சனி இரவு செம டைட்டா இருந்த டேவிட் உருண்டு பொரண்டு அரைக்கு வந்தபோது நள்ளிரவு டேவிட்டின் சட்டை மேல் படுத்திருந்தான் அவன் டேவிட்டுக்கு கோபம் தலைகேறியது அவனிடம் சண்டையிடவில்லை பார்த்துவிட்டு உடனே வெளியே வந்து யோசிக்க ஆரம்பித்தான் போதையில் தான் பார்த்த படங்களின் காட்சிகளும் கடைசியாக பாரில் பாட்டிலால் அடித்து மண்டையில் ரத்தம் வழிய ஒருவன் சென்றதும் கண்முன் தோன்றி மறைந்தது .

மேலும்கீழுமாக மூச்சை இழுத்தவன் விறு விறுவென போய் ரோட்டோரமாக கிடந்த கறுங்கல்லை தூக்கிகொண்டு அரையை  நோக்கி விரைந்தான் கதவை தன் கை தொள்பட்டையால் மெதுவாக திறந்து அவனருகில் சென்றான்(கையில் துப்பாக்கியுடன் போலீசார் நுழைவார்களே அதுபோல் ), நன்றாக உறங்கிகொண்டிருந்தான் அவன்.  தனது தலையை  சிலுப்பி லேசான தெளிவு பெற்று  கல்லை ஓங்கி அவன் தலையில் போட்டான் ரத்தம் காலில் தெரித்தது  அவன் துடிதுடிக்க தொடங்கினான் மேலும் அவன் கை கால்கள் அடங்கும் வரை அடித்துகொண்டிருந்தான்(உரல்களில் நெல் குத்துவது போல்).
அவன் கண்கள் அதனிடத்தை விட்டு வெளியே வந்திருந்தது அதை பார்த்து பார்த்து ரசித்தான்,ரத்தம் பிசுபிசுத்தது,அவனை சாரி "அதை" இப்போ அவனரையில் ஒரு மூலையில்  யார்கண்ணிலும் படாதவாறு ஒளித்து வைத்தான்.

 இதோடு நிற்கவில்லை மேலும் டேவிட் தினம் தினம் இதை தொடர்ந்தான்  ஒருநாள் தனது அலுவலகத்தில் ஒருவனை பிடித்து அவன் முகத்தில் ஹிட் அடித்தான் அவன் சாகும் வரை மூக்கிலும் வாயிலும் அடித்தான் மூச்சுதினறி அவன் இறப்பதை கண்ணிமைக்காமல் கண்டு ரசித்தான் ,பழைய பைல்கள் மற்றும் ஓனர் வீட்டு பழைய பொருட்களெல்லாம் போடும் ஸ்டோர் ரூமில் போட்டு மறைத்தான் .ஒவ்வொன்றும் டேவிட்டிற்கு உற்சாகம் தந்தது .

தினம் தினம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என விளையாடினான் டேவிட்,  முதல் கொலையை செய்து இன்றோடு ஒரு வருடம் , இப்போதெல்லாம் டேவிட்டிற்கு கொலை செய்வது பழகிப்போயிருந்தது, ஹார்ரர் படங்களையும்  பார்ப்பதில்லை இவன் செய்தவற்றையே படம்பிடித்து வைத்திருந்தான் .

இன்றோடு நூறு கொலைகள், ஒவ்வொன்றையும் செய்ததும் பலத்டரியாவின்   ஆறு கால்களையும் பிச்சிவிடுவான் பிறகு அவை தலை இல்லாமல் இருவாரம் வாழும் என அறிந்து சிதைத்து விடுவான்,வெள்ளை ரத்தம் அரைமுழுக்க தெளித்திருக்கும்,அணுகுண்டு போட்டால் கூ ட அழியாது என்பார்கள் டேவிட் கொன்ற ஒன்று கூட அப்படி இருந்தது இல்லை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருந்தான்,இப்போதெல்லாம் அவன் அரையில் அந்த இனமே இல்லை, குடும்பம் குடும்பமாக கொன்றிருக்கிறான் எப்படி இருக்கும்.
(பலத்டரியா(Blattaria) கரப்பான்களின் இன்னொரு பெயர் )


ஆம் கரப்பான்கள் ஆனால் அவன் முதல் முதலில் செய்தது கொலைதான் ரசித்து ரசித்து செய்தான் போதையில், அந்த வெள்ளை ரத்ததை காணும்போதுதான் அவனுக்குள் இருந்த அந்த இனம்புரியாத ஆசை தீர்ந்தது .அதன் பெயர் blattaria வாக இருந்தாலும் டேவிட்டிர்க்கு இருந்த நோயின் பெயர்தான் தெரியவில்லை .

டேவிட் இப்போதெல்லாம் ஹார்ரர் படங்கள் பார்ப்பதில்லை ஒன்லி ரொமான்ஸ் :-) தவிர இப்போது டேவிட்டுக்கு வேலையும் கிடைத்துவிட்டது
அதனால் கொலை செய்ய நேரமும் இல்லை !



Sunday, July 7, 2013

திரும்ப திரும்ப எழுதுற நீ ....

அன்று சனவரி மாதம் முதல் வார சனிக்கிழமை இதே வருடம்

 அதி காலை ராமின் அரை ,

ராம் இன்று மலருக்கு காதல் கடிதம் கொடுக்க முடிவெடுத்திருந்தான் ,இன்றோடு 3 மாதம் ஆகிறது மலரை சந்தித்து , இருவரும் ஒரே கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணுகிறார்கள் பிரபல நிறுவனத்தில்,
கமா செமிகோலன் தவரை எல்லாம் சரிசெய்ய உதவி நட்பாகினான்.அவளும் ராமை நல்ல நண்பனாகவே எண்ணினாள் .

நாட்கள் செல்ல செல்ல நட்பு செடியில் காதல் பூக்க தொடங்கியது ராமிற்கு ,என்னதான் நட்பாக பழகினாலும் காதல் கடிதம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் .கொஞ்சம் பழைய ஸ்டைல்தான் என்றாலும் ராமிற்கு பிடித்தமான ஒன்று கடிதம் எழுதி காதலை சொல்வது .

நேற்றிரவே யோசித்து அதிகாலை அலாரம் வைத்து அதற்க்கு முன்பே எழுந்து திரு திருவென்று சுவரையே வெறித்து கொண்டிருந்தான் ...1 ..2...3...4...5 நிமிடம் முடிந்து அலாரம் அலறியது அதை நிறுத்த எகுறி தடுக்கி விழுந்து பெரிய காயமில்லாமல் தூக்கம் மட்டும் தெறித்திருந்தது !

முகம்கழுவி பேப்பர் பேனாவெல்லாம் எடுத்து எழுத தொடங்கினான் ஒரு மணி நேரம் யோசித்து எழுதி எழுதி கசக்கி கசக்கி கடைசியில் ஒரு 5நிமிஷத்தில் எழுதி முடித்தான் 

அன்புள்ள மலருக்கு 

 ராம் எழுதுவது , 
உன்மீதிருக்கும் என் அன்பை சொல்ல விருப்பம் ,எப்படி சொல்வதென்று தெரியாமல் கூகிளை நாடினேன் (love letter in tamil) தேடி தேடி data  pack முடிந்ததுதான் மிச்சம் ஒன்றும் கிடைத்த பாடில்லை ,கடைசியாக ஒன்று மட்டும் புரிந்தது என் அளவற்ற அன்பு கூகிளின் data centerரை விட பெரிது .உன்னை மணந்து என் வாழ்நாள் முழுவதும் உனக்கென வாழ விருப்பம் ,அவசரமில்லை நம் கோர்ஸ் முடிய இன்னும் மூணு மாதம் இருக்கிறது சிந்தித்து சொல் என்னை அழ வைக்காத ஒரு பதிலாக சொல் ,தயவு செய்து குழப்பாமல் பைனரியில் பதில் சொல் !

உன் வருங்காலத்தை என் எதிர்காலமாய் நினைக்கிறன் யோசித்து முடிவெடு !

                                                                                                  உன் நினைவுகளுடன்  
                                                                                                                  ராம் 

என்று எழுதி முடித்து வழக்கம் போல் கிளாஸ்க்கு போனான் ,மலர் இன்று இன்னும் அழகாக இருந்தாள் வெள்ளை சுடியில், மிகவும் படபடப்புடன் இருக்கிறான் ராம் ,
இன்றும்  எதற்கோ உதவ சென்று கடிதத்தை அவள் நோட்டில் செருகி வைத்து விட்டு வந்துவிட்டான் . இரவு தூக்கம் வரவில்லை பொரண்டு பொரண்டு படுத்தாலும் யாரோ அடிப்பதுபோல கனவு வருகிறது ,உண்மையிலேயே இது ஒரு ஒரு பெரிய இரவு போல் இருந்தது ராமிற்கு .

மறுநாள் காலை என்ன நடக்க போகிறதென்று யோசிக்க இயலாமல் வகுப்பில் போய் அமர்ந்திருந்தான் , மலர் வருகிறாள் ராமை நோக்கி அதுவும் முறைத்து கொண்டே , நம்மாளுக்கு அல்லு இல்ல திரு திருன்னு முளிச்சிகிட்டு அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் , வேகமாய் அருகில் வந்தவள் உனக்கெல்லாம் அறிவு இருக்கா வீட்ல யாரவது பாத்தா என்ன ஆகிருக்கும் என்றாள்

கேட்டதும் துள்ளி குதித்தான் ராம் ....
.
.
.
.
.
.
.
.

 அதி காலை ராமின் அரை

என்னங்க எழுந்திருங்க உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க,அப்படியே மலரையும் எழுப்புங்க ஸ்கூல்க்கு கிளம்பனும் ...


கலைந்த கனவுடன்(காதலுடன்) எழுந்தான் ராம் .


கேவலாமா இருக்கா ?
 ம்ம் ஆமா !
 நானும் அப்பவே சொன்னேன் இவன்ட இந்த லவ் மேட்டர் எல்லாம் செட்டாவாது மச்சின்னு கேட்டானா 
 இல்ல நான் பதிவு போட்டே தீருவேன்னு ஓத்த கால்ல நின்னான்,கத எழுதுறானாம் கத .

Sunday, June 30, 2013

நீ நான் சரக்கு மற்றும் வாட்டர் பாக்கெட் !



வெள்ளி கிழமை

ராசாவுக்கு இன்னக்கி லீவு ,காலைல இருந்து ரூம்புலதான் 
இருக்கான்,பசங்க எல்லாரும் வேளைக்கு போய்டாங்க ,துணியெல்லாம் துவைச்சிட்டு போய் நல்ல பிரியாணி தின்னுட்டு வந்தான் , அவன் கூட ரூம்புல இருந்த கரென்ட்டும் போயிருந்தது , செம காண்டாயிடான் 

சென்னையில ஒருநா கூட கரெண்ட்டு இல்லாம இருக்க முடியாது ,அதும் நம்ம ஆள் இருக்கறது பாச்சிலர் ரூம்பு மொட்ட மாடிக்கு கீழ சும்மா ஜிவ்விண்ணு இருக்கும் கோடையில நைட்டு தூங்குரப்ப குளிச்சிரனும் அப்டி ஒரு ரூம்பு அது ,

என்ன செய்யலாம்னு யோசிசிகிட்டே படுத்திருந்தவன் திடு திப்புன்னு  எழுந்து எங்கயோ கிளம்பிட்டான் .வேக வேகமா வெயில்ல நடந்தவன்  கடைசியாய் நின்ன இடம் பச்சபோர்டு கடைல  ஒரு எழுநூத்தி அம்பதையும் ஒரு இரானூத்தி அம்பதையும் இடுப்புல சொருவிட்டு விறு விறுன்னு ரூம்புக்கு வந்திட்டான்.

சாப்டுபுட்டு எப்டி தண்ணி அடிக்கிறதுன்னு யோசிச்சவன் கட கடன்னு போய் கக்கூசுல வாந்தி எடுதுபுட்டான் . பொறவு போய்  நிதானமா ஆரம்பிச்சான் ஒரே ஒரு ஊறுகா கூட , எம்.சி ல பிற ஊத்தி அமைக்கலாம் பண்ணிட்டு தனியா செவுத்துகிட்ட பேசிட்டு இருந்தான் ,

ஆபிசுக்கு போன்  அடிச்சி பங்காளி பலி வாங்கிடானுவோ டா ன்னு , ஏதோ கர்ப்ப பறிகொடுத்தா மாதிரி பொலம்புனான் போல்ட்டுகிட்ட ,பொறவு மட்டைதான் .

போல்ட்டு  ராசாவோட சின்ன வயசு நண்பன் எப்போ   பாத்தாலும் எதுனா சலம்பிகிடே திரியிவானுங்க .
போல்ட்டும் ராசாவும் அன்னக்கி நைட்டும் சரக்கட்டிக்க திட்டம் போட்டப்ப மணி சரியா 8 அப்போதான் வசமா சிக்குனான் நம்ம பாண்டி .

அவன் என்ன கடுப்புல இருந்தானோ சந்தோசத்துல இருந்தானோ சரி வா டா போலாம்னு தி நகர் லேந்து கெளம்ப, டேய் மாப்ள சோத்துகே இல்ல பஸ்சுக்கும் பாத்துகன்னு பஸ் நெம்பர் கேக்க 27c  டான்னு சொல்லிபுட்டான் ,

சரி மாப்ள நாங்க ரெண்டு பெரும் பவர் அவுசு பஸ் ஸ்டாப்ல நிக்கோம் கோடம்பாக்கம் மேம்பாலம் வந்ததும் மிஸ் கால் அடின்னு வச்சிபுட்டான் போல்ட்டு .

அடுத்த 10 நிமிஷத்துல மிஸ் கால் வந்துருச்சு ,ஒரு 3நிமிஷம் 27சி பஸ்சு வந்தது ,மச்சி டீலக்ஸ் டோய்  பாண்டி செத்தான் என்று பாண்டிக்கு பாவபட்டான் ராசா ,

எளவெடுத்த டிரைவரு 20அடி முன்னால நிறுத்த அப்டியே ரன்னிங்கு சேசிங்கு அடுத்து கட்சிங் ல பஸ்அ  புடிச்சோம் , ஏறுன உடனே கண்டக்டர் வேற ஒரு மாதிரி பாத்தான் , மச்சான் பாண்டின்னு பஸ்சு முழுக்க கதி பாத்தோம் கதறி பாத்தோம் கீழ உருண்டு கூட பதுபுட்டோம் பாண்டி இல்ல ,

போல்ட்டு அப்டியே போன் போட்டு ரொம்ப சீரியஸ் ஆ  சீன் போட்டான் கண்டக்டர் முன்னால , ஒக்காளி பய்யன் நாட் ரியச்சபல் , கொஞ்ச நேரத்துல டவுசர்  அவுர போகுதுன்னு யோசிச்சவன் கண்டக்டர்ட்ட கேட்டான் ஒரு கேள்வி

 "சார் இந்த பஸ் கோடம்பாக்கம் தான  போவுதுன்னு"

அவர் ஒரு ரியாக்சன் குடுத்தாரு பாருங்க
 ராசாவுக்குஅழுகயே  வந்துருச்சு அத பாத்து , கொடுத்துட்டு அவர்

 "தம்பி கோடம்பாக்கத்துக்கு அந்த பக்கம் பஸ் எரனும்ப்பா " ன்னு அடுத்த ஸ்டாப்ல எறக்கி வுட்டுடார் .

அப்புறம் என்ன வடபழனிக்கு நடந்தே போய்டோம் அந்த பழைய சோறு பாண்டி அடுத்து வந்த வொய்ட் போர்டு பஸ்ல வருது,நாசமா போச்சு ஒரு மணி நேரம் ,
டேய் பாடு பண்டி வாடா மணி ஆயிருச்ன்னு பக்கத்துக்கு ஒரு பாருக்கு போய் ஒரு லிட்டர் வங்கி மேசை மேல வச்சதும் தான் ஊசுரு வந்திச்சி

ஓசில கெடைச்சா பகார்டிதான் குடிப்பான் எங்க ராசா !

எல பாண்டி பகார்டி ன்னு  ஒரு புது சரக்கு பச்சை போர்டு கடைல வந்திருக்கு அத கேட்டு வாங்கு டா  நல்ல இருக்குமாம் .

அடுத்து பத்து மணி வரைக்கும் அந்த பார் எப்டி இருந்துன்னா

எல மக்கா எங்கள தவற இந்த பார்ல ஆறும் தண்ணி அடிக்க கூடாது
ஆறும் ஒம்லட் போட கூடாது ஆறும் சலம்ப கூடாதுன்றது போல இந்த மூணு பேர் மட்டும் சரக்கடிச்சிட்டு ரூம்புக்கு போக தவழ ஆரம்பிச்சப்ப மணி 11   .


மாப்ள என்னடாது சரக்கு மயிரு மாறி இருக்கு ஒரு குவாட்டர் எம்.சி  அடிச்சா எப்டி இருக்கும் தெரியுமான்னு கேக்குறப்ப ராசா ஊவ்வே ன்னான் புள்ளதாச்சி பொண்ணு மாதிரி ...

பொறவென்ன ரூம்புக்கு உருண்டு வந்து வாஸ்பேசன் வாயன் ராசவ குளுப்பாட்டி படுக்க வச்சிட்டு தூங்கலாம்னு பாத்தா ,ஒ...தா திரும்பவும் ஊவ்வே அது மேல பொரண்டு பொரண்டு வேற படுக்குறான்

சாவுடா பாடுன்னு உட்டுட்டு தூங்கிட்டான் போல்ட்டு ,
அதுக்கு முன்னாடி அவன் சொன்னது

ஒ..தா இனிமே இந்த சரக்கயே தொட கூடாதுடா சாமி ...

ஆமா பாண்டி எங்க ?? தெரில அது போதைல எங்கயாச்சும் போயிருக்கும் :)




:|
தப்பு தப்பா இருக்குன்னு பாக்காதீங்க எல்லாம் போதை !



Sunday, June 23, 2013

நளனுடன் கவியும் நலம் :)

ரவிக்கும் கல்பனாவிற்கும் ஒரே மகள் கவி(க from கல்பனா வி from  ரவி ),அவள் நினைத்தது எல்லாமே நடக்கும் ,செருப்பு அலமாரியில் இடம் இருக்கு  என்பதற்காக 1 சோடி செருப்பு வாங்குவாள் .தன்  தோழி புது துணிக்கு மேட்சாக இவளும் புதுத்துணி வாங்குவாள் . கவிக்கு பணம் அவள் அப்பா பாக்கெட்டில் முளைக்கிறது  என்று எண்ணம் .குடும்ப நிலை பற்றியெல்லாம் நொடி கூட சிந்திக்காதவள் , ரவிக்கோ தன் ஒரே மகள்  சந்தோசம்தான் முக்கியம் .

ரவி பிஸ்லேரி வாட்டர் கேன் டீலர் ,வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் ரோட்டை  சுற்றியுள்ள கடைகள் தான் எல்லாமே .சென்னையின் தண்ணீர் தேவையை பற்றி அறிதிருபீர்கள் என நினைகிறேன் , அதும் உஸ்மான் ரோட்டை வாழ வைப்பதில் பெரும் பங்கு இன்றைய இளைய சமுதயாதிர்கே உண்டு .

கவியின் கல்லூரி காலம் இனிதே ஆரம்பித்திருந்தது , கூடவே நளனுடன் காதலும் ,இருவரின் கால்தடம் படாத இடமே இல்லை மெரினாவில் ,

அவளுடன் ஒரு பேருந்து பயணம் இருவரும் கடைசியில் ஒரிருக்கையில் ,
அவனின் கைகள் அவளை தாண்டி சன்னலை பிடித்தன , வாட்ஸ் ராங் வித் யு டா ? என்றவள் அடுத்த நிறுத்தத்தில் சிணுங்கினாள் அடுத்த நிறுத்தத்தில் வெட்கத்தை கண்ணாடி  போட்டு மறைத்துவிட்டு அனுமதித்தால் அவளின் தோள்களில் அவனின் கை , இப்படியாக  காதல் வளர்த்தனர் .




அப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்லித்தான் தெரியனுமா இததான் 10வருஷமா படத்துல ,பக்கத்துக்கு வீட்டுலலாம் நடக்குது .

இப்படி போட்டு கதைய முடிக்கலாமா இல்ல ம்ம்.. இப்படி போடலாம் ....

கண்டிப்பா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க டைட்டிலை மறுபடி படிக்கவும் !!

சேரி அதுவும் வேணாம் ம்ம்ம் இத சோக கதையா மாத்திடலாம் ...

இருவரின் காதல் தெரிந்து ரவி படுத்த படுக்கையானார் ,அதை பற்றி கவலை கொள்ளாமல் நலனுடன் ஓடினாள் கவி .போகும் வழியில் லாரி மோதி சம்பவ இடத்துலயே இறந்தனர் . எ ஸ்டோரி by பாலா !

செண்டிமெண்ட் நல்லாவே இல்ல திகிலாய் ஒரு எண்டு வைக்கலாம் ....


இப்படியே கவியை மயக்கி நளன் தன் அரைக்கு அழைத்து சென்றான் அவளை, அமைதியாய் இருந்த கவி திடீரென்று அலற ஆரம்பித்தாள் , என்னவென்று புரியாமல் மேட்டர் செய்ய இருந்த நளன் மெர்சலானான் !
காற்று பலமாக வீச கவியின் செயல்கள் அனைத்தும் கட்டுக்கடங்கி போனது கட்டில் கால்களை உடைத்து அடிக்க ஆரம்பித்தாள் , எகுரிகுதித்து தலை தெறிக்க ஓடிய நளன் ,தான் நண்பர்களுடன் சரக்கடிக்கும் இடத்திற்கு போய்  அமர்ந்தான் ,உக்கார்ந்த இடத்தில எதோ முட்ட குனிந்து பார்த்த அவனுக்கு பேரதிர்ச்சி

கவிதா
தோற்றம் :1.12.1970 மறைவு : 2.11.1992

நளனுக்கு மண்டையில் பொறி தட்டியது ஒருமுறை கவியை அங்கு சந்திக்க திட்டமிட்டு அவனால் வர முடியாமல் போனது அதற்காக 2 வாரம் கவி அவனுடன் பேசவில்லை . பிறகுதான் புரிந்தது நளனுக்கு அவன் கூட்டி வந்தது கவியில்லை கவிதா !#$%@&**..,.,.

இது மிகக்கேவலாமாக இருக்கு,
 நம்ம மக்கள்  முக்கோண காதலா  இருந்தாலும் 2 பேர் தான் நல்லா இருக்கனும்ன்னு நினைப்பாங்க ,நம்மகிட்ட இருக்குறதே 2 பேர் தான் சேத்து வச்சிருவோம் ...



 நளனுடன் கவியும் நலம் :)


ரொம்ப நாள் ஆச்சு பதிவெழுதி ஏதாவது எழுதனும்னா எதுவும் ஒத்து வரல அதான் இப்டி !

பிழை இல்லாதவன் பிழைக்கவே மாட்டான்னு எங்க ஆத்தா சொல்லும்

சோ பிழை இருந்தா கண்டுகாதீங்க :)



Wednesday, July 11, 2012

த்ரிஷாவை தேடி !

நானும் திரிஷாவும் அந்த வெளி வராத படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தோம், திடீர்னு அந்த சத்தம் த்ரிஷா இப்போ இல்லை அவளையும் காணும் பாட்டு மட்டும் ஓடிகொண்டே இருந்தது இப்போ மனம் கொத்தி பறவை படத்தில இருந்து போ போ போ !



அந்த சத்தமும் நிற்காமல் அசரீரீ போல் ஒலித்துகொண்டே இருந்தது !
என்னால் அதை கவனிக்க முடியவில்லை த்ரிஷாவை வேறு தேடவேண்டும் 
, இருட்டிவிட்டது எங்கும் இருள் (தமிழகம்தான்) தேடி அலுத்து அரைக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசித்துகொண்டே தூங்கிபோனேன் ,என் காதுகளுக்குள் அந்த சத்தம் கேட்பது நிற்கவேயில்லை அதோடு இப்போ ஜல் ஜல் ஜலோசை பாடல்   !

கனவில் நேற்று பார்த்த அந்த வெளிவராத படத்தின் நாயகி இரண்டே ஆடைகளுடன் ஆடிகொண்டிருந்தாள் ,திடீரென சத்தம் அதிகமாகியது !
அந்த சத்தத்துடன் என் பெயரும் ஒலித்தது !



விழித்து து த்ரிஷாவை தேடுவதில் தீவிரமானேன் எந்த சத்தத்தையும் சட்டை செய்யாமல் பாடல்களையும் கண்டுகொள்ளாமல் தேடினேன் !
நாங்கள் இருவரும் சேர்ந்து போன இடமெல்லாம் ,பிறகு அவளின் தோழியின் வீடு ,பூங்கா ,அவளுக்கு பிடித்த அணைத்து இடங்களிலும் , தேடி தேடி என ரணம் சுகம் பாடல் வேறு என்னை வெறுப்பேற்றியது அந்த சத்தத்தையும் பாடல்களையும் எப்படி நிறுத்துவது இப்போ கலியுகம் எடா கூட பாடல்  !

சத்தம் வலுத்தது என்னால் தாங்க முடியவில்லை , த்ரிஷா வேறு யாரிடம் மாட்டிகொண்டாளோ  தெரியவில்லை , பயமும் வெறியும் அதிகரித்தது - 

இந்த சத்தம் தாங்க முடியாமல் ஓடினேன் நிற்காமல் ஓடினேன் ,இரவுக்கு பேர் போன அந்த நெடுஞ்சாலையில் தலைதெறிக்க ஓடினேன் என்னை பின்தொடர்ந்து ஒரு இருசக்கரவாகனம் அதில் என் நண்பன் அருணும் த்ரிஷாவும் !


த்ரிஷா என்னை இப்படி ஏமாற்றுவாள்  என்று எதிர்பார்கவே இல்லை !
என்னை கடந்து என்னை கண்டுகொள்ளாமல் சென்றார்கள் இருவரும் !
எனக்கு இப்போ த்ரிஷாவை விட அந்த சத்தம் தான் அதிக கோபத்தை அதிகரித்தது , இவ்வளவு பிரச்சனைகளில் மழை வேறு ,முட்டாள் தனமாக ஓடினால் தப்பித்து விடலாம் என ஓடிக்கொண்டே இருந்தேன் இப்போ மயக்கம் என்ன பட ஓடி ஓடி தூரம் பாடல் !


 ,எதுவோ வந்து என் தலையில் விழுந்தது , பயங்கரமான வலி , இப்போது மயக்கம் என்ன தீம் பாடல் !



மயக்கமானதுபோல் உணர்ந்தேன் !

உண்மையாகவே நனைந்து காலில் பயங்கரமான வலியை உணர்தேன் 
கண் விழித்து  பார்த்தால் நண்பன் அருண் என் அறைக்கு வெளியே!
 பதறி போய்  திறந்தேன் வண்டை  வண்டையாய் கேட்டான் !

அதன் பிறகு தெரிய வந்த தகவல்கள் பின்வருமாறு 


1.நண்பன் அருண் இருபது நிமிடமாய் கதவை தட்டி இருக்கிறான் 
2.காதில் ஹெட் செட் இருந்ததால் எனக்கு கேட்கவில்லை 
3.இரவு படுக்கும்  முன் த்ரிஷாவின்  எடா கூட பாடல் பார்த்தது நினைவிற்கு வந்தது 
4.திறக்காததால் தண்ணி எடுத்து ஊற்றி பார்த்திருக்கிறான் -திராணி இழந்ததுதான் மிச்சம் 
5.கடைசியாய் எங்கிருந்தோ கற்களை எடுத்து வந்து அடித்திருக்கிறான் 
6.த்ரிஷாவை எங்க டா கூட்டிட்டு போன என்று கேட்டு அவன் கோபத்தை இன்னும் 2 வாங்கி கட்டி கொண்டேன் !
7.மேல் கண்ட அணைத்து பாடல்களும் என் ப்ளேலிஸ்ட்டில் உள்ளவை !


உடையை மாற்றி கொண்டு திரும்பவும் வந்து தூங்க தொடங்கினேன் கைபேசியை தூர எறிந்துவிட்டு !

என்ன கொடாம சார் இது !






Tuesday, May 29, 2012

யாரும் படிக்காதீங்க !

படிக்காதீங்க !



































































































படிக்காதீங்க!


























































வேணா படிக்காதீங்க !































































வளர்மதி வயசுக்கு வந்துடுச்சு :)



திட்டாதீங்க ! 



Saturday, May 26, 2012

அவள் !

காண துடிக்கிறேன்  !
தேடி அலைகிறேன் ! 
எழுதி தீர்க்கிறேன் !
என்னுள்
வரைந்து பார்கிறேன் !
ஒளியில் ரசிக்கிறேன் !
ஒலியில் கேட்கிறேன்  !
காற்றில் நுகர்கிறேன் !
ஒன்றிற்கு இருமுறை
கண் முன் தோன்றி மறைகிறாய் !
தேடினால் கிடைக்க மறுக்கிறாய்  !
உன் நிழல் கூட கேலி பேசுதே !
என் திருடு போன இதயத்துடன் தொலைந்து சிரிக்கிறாய் !
நீ கூட வேண்டாம் உன்னையே பொழுதுக்கும் முனகும்
என்  இதயம் வேண்டுமே !
தேடி அலுத்து வெறுத்து போகிறேன்
கூட நடக்க கால்கள் தவிக்குதே !
நொடிக்கொருமுறை கண்முன் தோன்றி இருளில் மறைகிறாய் !
அனைத்தையும் தேடும் கூகுளும் தேட மறுக்குதே !
முகநூளில் என் ஸ்டேடஸ் உம்   மொக்கையாகுதே !
என் கண்களில் ஜூமிங் இல்லையே !
கூகிள் எர்த்தில் கூட உன்னை காணவில்லையே !
இருகைகளும் இயங்க மறுக்குதே
உன் விரல் தேடி காற்றில் வண்ணம் தீட்டுதே !
இறுதியில்
அவள் வருவாளா என பாடி திரிகிறேன் !
என் மனமும் என்னை போடா காமெடி பீசு
என ஹர்ட் பண்ணுது !
 செகண்ட் ஹான்டில் இதயம் வாங்கும் ஆப்ஷன் இல்லையே !
தினமும் உனையே கூவி திரிகிறேன் !
இதை பார்த்து சிரிக்க என்னை சுற்றி கூடம் கூடுது
கூட்டத்திலும் என் கண்கள் உன்னை தேடுது !
அருகில்  இருந்த குப்பை தொட்டியில் உன் சத்தம் கேக்குது !
ஓடிசென்று எட்டி பார்கையில் என் இதயம் துடிக்குது
தூக்கிபோட்ட உடன் சொல்லியிருக்கலாம்
நீ இல்லையென்றால் இறக்க மாட்டேன் !
சத்தியமாய் !
உன் பக்கத்துக்கு வீட்டில் மலர் இருக்கிறாள் !
உன்னை போல் அவளுக்கு அண்ணன் இல்லை !
உன்னை போல் அவளுக்கு அழகு இல்லை ,
இனி அவளுக்கு உயிராய் நான் இருக்கிறேன்
என் இதயத்தை மட்டும்தான் எடுத்தேன்
நீ இன்னும் அந்த குப்பையில்தான் !
எனக்கு  மலர் இருக்கிறாள் !
அவளும் கூட தேட வைக்கிறாள்
இனியும்  எவளும் தேவை இல்லை !
இறுதியில் நான் திருந்த போகிறேன்
பெண்களே வேண்டாம் என முடிவு செய்கிறேன் !
இன்று முதல் படிக்க போகிறேன் :)






உன்னிடம் நான் கற்ற பாடம் போதுமே
ஒன்பதிற்கு மேல் என் அரியர் இருக்குது !
அனைத்தையும் முடிக்க திராணி இருக்குது !


இது நாளை முதல் குடிக்க மாட்டேன் போல் ஆகக்கூடாது
நிச்சயம் ஆகவிடமாட்டேன் !
 
"தாத்தா" சொன்ன வசனம் தெரியுமா ?

"கூட நட்பு கேடாய் முடியும்"

 #நிச்சயம் தவறு இருக்கும்
எதுவானாலும் கூறி செல்லவும் !
மறுமுறை தவிர்க்க முயல்கிறேன் !




கொசுறு :
தாத்தா இந்த வசனம் கூறிய இடம் :
பத்திரிக்கையாளர்கள் கனிமொழி வழக்கு பற்றி  கேட்ட கருத்திற்கு கூறியது
 :)