Pages

Monday, September 27, 2010

நமீதாக்கு நன்றி !!!

இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு ...எழுத நேரம் இல்லன்னு சொல்லமாட்டேன் ஆனா ஏன்னு தெரில !
இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு நினைகிறேன் !

இந்த தலைப்புக்கு காரணம் கடைசியா சொல்றேன் :)

போனா வாரம் வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு கல்யாணத்துக்காக போற வழில நிறைய சுவரொட்டி ஒட்டிருந்தாங்க
கல்யாண மண்டபத்துலேயும் வாழ்த்து அட்டைலாம் கொடுத்து தடபுடலாக இருந்தது ...
இதெல்லாம் அவசியம் செய்யனுமா ?
செய்யக்கூடாதுன்னு நாம போய் சொல்ல வயசில்ல அதான் இங்க கொட்டிட்டேன்

நான் என்ன சொல்றேன்னா இப்ப சுவரொட்டி வாழ்த்து அட்டைகெல்லாம் பண்ணின செலவ வந்தவங்களுக்கு ஒரு மரக்கன்று கொடுக்கலாம் . ஏதோ ஒரு வகைல நாமளும் குளோபல் வார்மிங்கை தடுக்கலாம் . எனக்கு அத பத்தி ரொம்ப தெரியாது ஆனா ஓரளவுக்கு தெரியும் . இது போல மரக்கன்று கொடுக்குற பழக்கம் நடைமுறைல இருக்கு ஆனா நிறைய பேருக்கு தெரியல !

இந்த பதிவு இத நிறைய பேர்கிட்ட கொண்டுபோகும்ன்னு நம்புறேன் . இத படிச்சிட்டு வாய்வழி செய்தியா கூட நிறைய பேருக்கு தெரியவரும் நினைகிறேன் .
அதுவும் நமக்கு உதவுற மாதிரி மரக்கன்று கொடுதோம்னா (கொய்யா,மான்கன்னு,....) வாங்கிட்டு போறவங்க ஒரு ஆர்வத்தோட வளபாங்க . இந்த செடி எல்லாம்  ஒன்னும் அதிக விலையும் கிடையாது . அதனால இந்த செய்திய நாமளும் நமக்கு தெரிஞ்சவங்ககிட்டையும் சொல்லி நடைமுறை படுத்தலாம் .

 ரெண்டு நாளைக்கு முன்னாடி என்  நண்பனுக்கு பிறந்தநாள் அவன் ஒரு சாக்கலேட் மட்டும் கொடுத்தான் நாங்க எல்லாம் சேர்ந்து ட்ரீட் கேட்டோம் முடியாதுன்னு சொல்லிட்டான் அப்புறம் அவன்ட தனியா நான் கேட்டேன் "என்னடா நாம பண்ணாத செலவா பசங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்ல ? " அதுக்கு அவன் இல்ல டா நீயே சொன்ன நாம பண்ணாத செலவான்னு அதுதான் எப்போதும் பன்றோம்ல அதான் இந்த முறை வீட்ல ட்ரீட்டுக்கு கொடுத்த பணத்த ஒரு குழந்தைகள் இல்லத்துக்கு ஒரு  வேலை சாப்பாடுக்கு கொடுத்துட்டேன் .. அவன் சொன்னதும் ட்ரீட் கொடுத்தமாதிரி ஒரு சந்தோசம் ..
வெட்டியா எவ்வளவோ செலவு பண்றோம் ஒரு வேலை சாப்பாடு நமக்கு சாதாரண விஷயமா இருக்கலாம் அந்த குழந்தைகள் இல்லத்துல இருக்குற பசங்களுக்கு அது ஒரு பெரிய விஷயம் தான் ..
எல்லா ஊர்லயும் இது போல பல இல்லம் இருக்கு ........யோசிங்க !!

தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தெரியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்ம ஆளுங்க ஷேவிங் கிரீம் கூட விளம்பரத்துல வர நடிகைய பாத்துதான் வாங்குறாங்க ..
அதுமட்டும் இல்ல என்னோட "நான் எடுத்த நமீதா போட்டோ !!! " பதிவு இன்னக்கி வரைக்கும் பேஜ் வீயுஸ்ல முதல் இடமா இருக்கு அதான் அவுங்களுக்கு நன்றி சொல்லி  இந்த பதிவுக்கும் போட்டுட்டேன் !! :)




 இந்த பதிவும் ஹிட்லிஸ்ட்ல முதல் இடம் புடிக்கணும் அப்டி வந்ததுன்னா நான் எழுதுற எல்லா பதிவுக்கும் உங்க பேர்தான் !!!!
சரி சரி படத்த பாத்து போதும் கமெண்ட் போடுங்க !!!!!

Thursday, September 2, 2010

என்னயா கல்வி ?

 அனைவருக்கும் என் வணக்கம் !
 இன்னக்கி  நான் கல்லூரி முடிஞ்சு வருகிறபோது   என்னை  மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி   அதன் மூலமே இந்த பதிவு !

என்னவோ குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்ன்னு அறிக்கைலாம் விடுறாங்க tollfree  நம்பர்லாம் குடுக்குறாங்க
எந்த அளவுக்கு அதுல வேல நடக்குதுன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னக்கி பாத்த அந்த சம்பவத்த பொருக்க முடியல !!!

என்னடா இவன் சம்பவம் சம்பவம்ன்னு சொல்றானே என்ன சம்பவம்ன்னு ரொம்ப யோசிக்காதீங்க இதுதான் ........
கல்லூரி முடிஞ்சு வீடு திரும்போது பேருந்தை விட்டு இறங்கி பத்தடி வைத்திருப்பேன் ஒரு 13 இல்ல 14 வயசு இருக்கும் ஒரு சிறுவன் "அண்ணா ஆப்பிள் வேணுமான்னா ?"

ஒரு சிறிய சாலையோர பழக்கடை வழக்கம்போல் நானும் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன் !
ஒரு நொடி திரும்பிய நான் கடையருகில் சென்று பார்த்தேன் அவனை பார்த்தால் தெளிவான சென்னை சிறுவன்
"காதில் கடுக்கனும் , முக்கால் டௌசரும் ,டி.ஷர்ட்டும் " அணிந்து ஏனென்று தெரியவில்லை அவனை கண்டதும் எதாவது வாங்க தோன்றியது அவனிடம் வாழைபழம் கேட்டுவிட்டு "என்ன படிக்கிறாய் என்று கேட்டேன் "
 அதற்கு  அவன் "இல்லன்னா நான் நிறுத்திட்டேன் !" என்றான் . ஏன் என்றேன் ? "இல்ல படிக்கல !" என்றான் .
எதனாலன்னு கேட்டேன் ? "நான் பள்ளிகூடதிர்க்கே போனதில்ல !" என்றான் ஒரு நொடி அதிர்ந்தேன் !

எனக்கு வார்த்தை வரவில்லை ! அங்கிருந்து என் உடல் மட்டும் நகன்றது .... மனதை விட்டு !
 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாம் ?!
 எத்தனையோ பேர் கல்வி அமைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆனாலும் இந்த அவல நிலை ஏன் ?
எனக்கு யோசிக்க பொறுமையில்லை திட்டிதீர்த்துவிட்டேன் !

இலவச ஆரம்ப கல்வின்னு சொல்றாங்க ....
இலவச சாப்பாடுன்னு  சொல்றாங்க.....
இலவச சீருடை , நோட்டு புத்தகம்,செருப்பு ,முட்டை ,.
இவ்ளோ இருந்தும் இன்னும் இப்டி நிறைய பேர் இருக்காங்க !

இதுல்லாம் கொடுத்தா இன்னும் நிறைய பேர் படிக்க வருவாங்கன்னு நினைச்சேன் ...
ஆனா நம்ம ஆளுங்க என்னக்கி  சாப்பாடு போடுறாங்களோ அன்னகி மட்டும் போய் சாப்டு வராங்க ?!
சரி கொடுக்குறது தான் ஒழுங்கா கெடைக்குத இல்ல!
எங்க ஊர்ல முட்டைலாம் பக்கத்துக்கு கடைல விதுடுறாங்க !
எல்லா துறையும் இப்டிதானா ?
(எப்டி பாத்தாலும் அவுங்க குடும்பம் மட்டும் கோடிகள்ள வளருதே  ?)

இன்று உலகில் எல்லா மூலையிலும் கல்வி மட்டும் தான் நட்டமில்லா தொழில் !
சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !





இதுக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க ?

Sunday, August 29, 2010

ட்விட்டலாம் வாங்க.. #குத்தாலத்தான்

இங்க முதல் முதலா நானும் பதிவெழுத போறேன்னு இருந்த சந்தோசம் இன்னும் எனக்கு குறையாம  இருக்க காரணமே நீங்க போடுற பின்னூட்டம்தான்  ...

அந்த பின்னூட்டம் எனக்குள்ள ரத்தஓட்டமா இருக்கு...
(ரொம்ப ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கா யோசிக்காதீங்க ஐஸ்தான் இதுக்காகவே நீங்க பின்னூட்டம் போடணும் பின்னாடி பக்கமா ஓடிராதீங்க !)
பின்னூட்டம் போடுற அனைவரும் இல்லனாலும் ஒரு இருபது பேர் பின்தொடரவும் செய்கிறார்கள் அது இரட்டிப்பு மகிழ்ச்சி எப்டி சொல்றது நம்ம சச்சின் சமீபத்துல போட்டாரே ரெட்டை சதம் ஒரே நல்ல இந்தியாவே சந்தோசபட்டுச்சே   அது மாதிரி !!!
(இதுக்கு ஜன்னியே வந்துருக்கணுமே !:))


என்ன தலைப்புல ட்விட்லாம்னு போட்டுட்டு இங்க மொக்க போடுறானேன்னு நினைகிறீங்க புரியுது !!
நான் ட்விட்டுனது மட்டும் போடுலாம்னு நினெச்சேன் இப்போ திட்டம் ஆ) செயல்படுத்தபடுகிறது .....

ஏன் ப்ளாக்ல ட்விட்ட கூடாது ?
அப்டின்னு தோனுச்சு அதான் ...

காலைல எந்துருச்சு பல்லு கூட வெளக்கமா இந்த டப்பா முன்னாடி உக்கார்றதுதான் இப்ப ட்ரெண்டு !
(பல்லு வெளக்காம இருக்குறத எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு  )

உண்மைதான் நம்ம ஆளுங்க பாதிபேர் இப்டித்தான் இருக்காங்க ..
பேஸ்புக்கில் மொக்கை !
ட்விட்டரில் கொடூர மொக்கை !
அடுத்த லெவல் என்னன்னா
ஜி சாட்டில் பெர்சநெல் மொக்கை !
(ஏன்டா இப்டின்னு கேட்டா "இது கம்பிட்டர் டிசென் எச்போர்ட் குவாலிட்டி ன்னு " செந்தில் டோன் போடுறானுங்க )

ரெண்டு நாள் முன்னாடி   ட்வீட் மீட்ன்னு  அண்ணன் @ksawme ஒரு update போட்டார்  என்னன்னு தெளிவா புரியாட்டியும் ஒரு அளவுக்கு அவர் சொன்னது புரிஞ்சுது!! சரி போலாம்னு முடிவெடுத்துருக்கேன் !

அங்க என்ன நடந்துதுன்னு நாளக்கி  எழுதுறேன் இப்ப கொஞ்சம் மொக்க போடா போறேன் தயாரா இருங்க !~!

நேத்துதான் பாஸ் என்கிற பாஸ்கரன் ட்ரைலர் பாத்தேன் செம்ம சிரிப்பு டைரக்டர் நம்ம "சிவா மனுசுல சக்தி" படம் பன்னவர்தான் அது மாதிரியே சந்தானம் தாறு மாருப்பா ! அவர் ட்ரைலர்ல  சொல்லுவர் "நன்பேண்டா" ன்னு ஒரு டயலாக் .. செம செம ....
தரவிரக்கலாம்னு கூகுள்ல டைப் பண்ணா பாட்டு வந்துருச்சு !!
சரி ஒடனே அதையும் எறக்கி கேட்டேன்
யுவன் திரும்பவும் நம்மள திரும்ப வச்சிருக்கார் ..
அ) அட பாஸ்சு  பாஸ்சு .. பாட்டுதான் intro ன்னு நெனைக்கிறேன் ஹீரோவ பத்தி சொல்றாங்க
அதுவும் எங்க கும்பகோணத்துல எடுத்து இருக்காங்க படத்த !

ஆ) ஐலே ஐலே ... ன்னு அடுத்த பாட்டு
ஹீரோயின பாத்த ஹீரோ பாடுற பாட்டுன்னு தெளிவா தெரிது ... 

இ)மாமா  மாமா ... ன்னு ஒரு பாட்டு செம குத்து !
தாளம் போடா வைக்குது ..... இந்த பாட்டுல கும்பகோணம் அப்புறம் பக்கத்துக்கு ஊற பத்தியெல்லாம் வருது எப்டினா
கும்பகோணத்து வெத்தல, பட்டுகோட்டையில் பாக்கு ,தஞ்சாஊர் தவில்ன்னு ஆரம்பிச்சு கிளிச்சுருகாங்க ....

ஈ)தத்தி தாவும் பேப்பர் நான் .. ன்னு ஒரு பாட்டு வழக்கம் போல யுவன் பாடுற பாட்டு காதல் ஏக்கத்துல பாடுற மாதிரி இருக்கு  ...யுவன் பாடுனாலே எப்டி இருக்கும்ன்னு தெரியும் நல்லாத்தான் இருக்கு .....

கடைசியா ஒரு பீலிங் பாட்டு பாஸ் !!
உ) யாரிந்த பெண்தான் என்று கேட்டேன் .. ன்னு தொடங்குது காதல்ல உருகி பாடுறாங்க !!

மொத்தத்துல பாஸ் pass !!

அடுத்து ஒரு மேட்டர் ....
நேத்துதான் நான் மகான் அல்ல படம் பாத்தேன்
படம் சூப்பர்ன்னு சொல்ல முடியாது !!
பரவால்லன்னு  சொல்லலாம்  ...
முதல் பாதில கொஞ்சம் ஜாலியா இருக்கு அதுலயும் நான் தூங்கிட்டேன் கொஞ்சம் பாத்ததுல வழக்கமா கார்த்தி செய்யுற நக்கல்தான்ன்னு தெரிஞ்சுது !!
இதுல ஹீரோ குடும்பத்த நல்லா காட்டிருக்காங்க அதுக்கு ஒரு செம ...
ஹீரோ தங்கச்சி தாறு மாருப்பா வாய்ப்பே  இல்ல அடுத்த ஹீரோயின் ரெடின்னு கூட சொல்லலாம் ..
அப்பாவா நடிச்சவர் நல்லா பன்னிருகார் ...
அப்புறம் ரெண்டாம் பாதில விருவிருப்பா இருக்கு கடைசியா  சண்டை காட்சிகள் செம ...
ஆனா ஒரு மனநிறைவு வரல திடீர்ன்னு முடிஞ்சமாதிரி இருக்கு பாதிக்கு மேல ஹீரோயின் காண போய்டுறாங்க ...
அவ்ளோதான் சொல்லலாம் ம்ம் நம்ம யுவன் இசை செம ......
மாயாஜால்ல பாத்தேன் தியேட்டர் மொக்கதான் என்ன ஒரு பிளஸ்ன்னா எப்ப போனாலும் டிக்கெட் கிடைக்கும் ... 
(காதலியோட போறதுக்கு சரியான இடம்... )


நான் ட்விட்டுறது எல்லாம் பேஸ்புக்குளையும் போடுவேன் அதுக்கு என் நண்பர்கள் கொஞ்சம் நல்ல கமெண்ட்ஸ் குடுத்தாங்க
நீங்களும் சொல்லுங்க எப்டி இருக்குன்னு .......



அ)  
வாழ்கை முழுக்க வாழும் என்று நீ சொன்ன நம் காதல்
வார இறுதியில் முடியும் என எதிர்பாக்கவில்லை !

#ஒரு வார காதல்

ஆ) 
வார இறுதி நாட்களில் பூக்கும் பூக்கள் மட்டும் நரகத்திற்கு செல்கின்றன என் வீட்டில்
#அவளின் பள்ளி விடுமுறை

இ) 
பேருந்தில் பயணித்த உன்னை பின்தொடர்ந்த நான் ! 
அவனுடன் வாழ்கையில் பயணிக்கும்போது என் செய்வேன் ?
#வழியில் வலியுடன் பயணித்தேன்

ஈ) 
கவிதையின் முகவரி தொலைந்தால் 
    வாக்கியமெல்லாம் கவிதையாகும் !

உ ) 
 சிறுவயதில் வைத்ததாலோ என்னவோ தெரியவில்லை இன்னும் பூக்கவே இல்லை
#என் காதல்

ஊ) 
என் நட்பில் 
பாரம் இல்லை தூரம் இருந்தது !
பார்த்தாலும்... 
அரட்டை இல்லை அமைதி இருந்தது !
பேசினாலும் 
வெறுப்பு இல்லை மௌனம் இருந்தது !
என் காதலை கூறியபோதும்  
கடுப்பு இல்லை கையில் செருப்பு இருந்தது ! :)
(இது நம்ம ஜில்லு கேடான்னு எழுதுனது கடைசியா வேணாம்னு சொல்லிட்டான் ஆனா பேஸ்புக்கில் நல்ல கமெண்ட்ஸ் கிடைச்சுது )

எ) இரவில் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
இன்று நான் எழுதிய கவிதை "நட்பு" 
#ஏக்கத்தில்
  

இதுக்கெல்லாம்  மட்டும் தான் கொஞ்சம் கமெண்ட்ஸ் கிடைச்சுது ......
அவ்ளோதான் ரொம்ப மொக்கயா இருந்தா விட்ருங்க உங்களுக்கு புடிச்சி இருந்தா பின்னூட்டம் இடுங்க ....
பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் 
(பின்னூட்டமே வராதோ!!!!)     
இதுவரை இல்லைனாலும் பரவால்ல இப்போ கூட நீங்க பின்தொடரலாம் 
ஏன்னா எனக்கு ரொம்ப பெரிய  மனசு எல்லாரும் வாங்க !!!!

Wednesday, August 25, 2010

க்ளிக்கியது - 26/08/2010

எங்க ஊர் பெரிய கோவில் - மாலை நேரத்தில் செம செம !


ஆற்றங்கரை சூரியன்....


எங்க வீட்டு மகாலட்சுமி !

பச்சை பசேலென்ற வயல்கள் !!
 

என்ன அழகான படைப்பூ !!!



 
ம்ம்ம்ம் இன்னும் நிறைய இருக்கு...அதெல்லாம் அப்பரம் :)

Wednesday, August 18, 2010

எனக்கு உங்க complan வேணும் !!!

அட ஒன்னும் இல்ல பாஸ் !
நான் இந்த தமிழ் பதிவுக்கு வந்ததுக்கு காரணமே தமிழ் மேல ஒரு சின்ன ஈர்ப்புதான்...
ஆனா இதுல இதுவரைக்கும் எழுதுனதுல எவ்ளோ பிழைன்னு பாத்தா நான் போட்டா பதிவோட பத்து மடங்கு அதிகமா இருக்கு !
அதனால எழுத ஆரம்பிச்சா  நிறைய யோசிச்சி பாதில மூடிட்டு போய்டுறேன் !!
நான் போடுற பதிவு எப்படியோ ஆனா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க மிக்க மகிழ்ச்சி !!
அவுங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ எப்டி எழுதுறாங்கன்னு யோசிப்பேன் !
அதுக்குத்தான் இந்த பதிவு
உங்க complan  எனக்கு கொஞ்சம் கொடுங்க !!!
ஒண்ணுமில்ல கொஞ்சம் "ஊக்கம்+ஆதரவு+அன்பு+அப்புறம் பின்னூட்டம்" அவ்ளோதான்
கூடவே தப்பு இருந்தா சொல்லுங்க !(அதான்பா feedback :) )


எதுக்கு complan ன்னு  கேக்குறீங்களா  வளரனும்ல அதுக்குத்தான் !!
(நண்பர்கள் complan  கொடுத்தாதான் இங்க வளர முடியும்னு கேள்விபட்டேன் )



உங்களை எல்லாம் நான் ஒரு hamam சோப்பாதான் பாக்குறேன் ஏன்னா "நீங்க இருக்க பயம் ஏன் ?"
colgate ஆ கூட இருங்க "annonymous கமெண்ட்ஸ் எதிர்த்து போராட"
எனக்கு maggie செய்ய கத்து கொடுங்க "ரெண்டு நிமிஷத்துல new post "
நீங்க என் ப்ளாக்ல ஒரு airtel லா  இருங்க "express yourself "
நா கண்டிப்பா vodafone ஆ இருப்பேன் "wherever  you  go i will follow you "(அதன்பா twitter ,facebook ,gmail : )
எப்படியாவது என்ன horlicks ஆ மாத்திடுங்க "sharper , stronger , taller "
நமக்கு இந்த ப்ளாக் ஒரு nokia வா இருக்கும்ன்னு நம்புறேன் "connecting people "
என் மேல sony ericsson ஆ இருங்க "make believe "
நான் கண்டிப்பா aquafina வா இருப்பேன் "purity guaranteed "
கடைசியா நான் 3 idiots ன்னு சொல்லி கெளம்புறேன் "all is  well "
எண்ட ஒருத்தர் apple  ன்னு சொன்னார் அதான் இப்டி யோசிச்சேன் "think different "
அப்துல் கலாமே addidas ன்னு சொல்றார் தெரியுமா "immpossible is nothing " நம்ம அத பின்தொடர்வோம்ன்னு
முடிவெடுத்து nike ஆ செஞ்சுட்டேன் "just do it "
சரி உங்க கிட்ட kodak  ஆ இருக்கனும்ன்னு நெனச்சேன் அதான் "share moments share life "


"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)

உங்க விளம்பரம் இங்கே இடம் பெற அணுக வேண்டிய முகவரி "Post a Comment"

 
இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு .....

எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
சரி சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன் !!!

இப்ப dell மறந்துடாதீங்க "yours is here  " (அதான்பா கமெண்ட்ஸ் !!)

Monday, August 9, 2010

ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள் !!!

என்ன கொடும இது !
நம்ம  ஜில்லு என்ன விட்டுட்டு டூர் போய்ட்டான் பாஸ் !!
அப்படா
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
 சந்தோசமா இருக்கலாம்ன்னு பாத்தா செம்ம காண்டுப்பா !



அதான் ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள்ன்னு இந்த சோகமான நேரத்த உங்க கூட பகிர்ந்துகிறேன் !
  
நீ இல்ல !
நிஜம் இல்ல ! 
நிழல் கூட துணை இல்ல !
ஜில்தண்ணி ஊர்ல இல்ல !
மொக்க போடா கம்பெனி இல்ல !
ப்ளாக் பாக்கவே  பிடிக்கல !
ட்விட்டர்ல   ட்விட்டவும் தோனல !
வெட்டியா மெயில் செக் பண்ணல !
அட இன்னக்கி கலூரிக்கே  போகல !
உன் புது பதிவு பாக்காம என் கண்ணு ரெண்டும் தூங்கல !
 உன் மொக்கைய படிக்காம நான் இன்னக்கி பல்லே விலக்கல !
 நீ அங்க குளிக்க  மட்டும் தான் போயிருக்க (குற்றாலம்)
நான் இங்கு குளிக்கவே இல்ல !
நீ அங்க எப்பவும் தண்ணில ஜில்தண்ணியா இருப்ப
நான் தனியா "ஒரு குவாட்டர் தண்ணில இருக்கேன் "! 
 நீ ஒரு கூட்டமா அங்கயும் மொக்க போட்டுக்கிட்டு இருப்ப
 நான் இங்க தனியா குப்ப கொட்டிகிட்டு இருக்கேன் !

நீ இல்லாமல் என் உடல் .....

உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட  சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது ................


இதனால நான் என்ன சொல்ல வரேன்னா 
 நீ அங்கயும் ஜில்தண்ணியாவே இரு
நீ சீக்கிரம் வரலன்னா நா இங்க பயங்கர சூடா சுடுதண்ணியா மாறிடுவேன் !














தம்பி ஜில்தன்னியை சீக்கிரம் வரும்படி கேட்டுகொள்கிறேன் !
(பின்குறிப்பு வந்ததும் ட்ரீட்டு !)
  நாள் தாமதம் ஆனா அடி உதை ஆகிய அனைத்தும் இலவசமகா ஜில்லுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்  !!!

இந்த பதிவு புடிச்சா கீழ ஒரு குத்து குத்துங்க (நம்ம ஜில்ல குத்துறதா நெனசுகிட்டு )
இது என் லேப்டாப் ல எழுதுற முதல் பதிவு !:)

Thursday, August 5, 2010

கடவுள் என்னதான் பண்ணுறார் ???

இங்க நான் சொல்ல போறது எல்லாமே என்னோட கருத்து !!
காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து குளித்து புத்தகத்தை எடுத்து இரவு படித்ததெல்லாம் ஒரு முறை பார்த்து
பள்ளிக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் கடவுளிடம் மனமுருகி வேண்டி வெளியில் வந்து செருப்பு போடும் போது வந்தான் எமன் அதிவேகமாய் வந்த அந்த லாரி மரத்தில் மோதியது முன்னால் அந்த சிறுவனையும் சேர்த்து .......
 அந்த இறுதி நொடி வரை கடவுள் மேல் நம்பிக்கை வைத்த அவனுக்கு என்ன பலன் ...
அவன் கோவிலுக்கு போகாமல் பரிச்சைக்கு போனால் தேர்வில் தோற்று போவான என்ன ? இல்லை கண்டிப்பாக இல்லை
கொஞ்சம் அதிகமாக அவன் மேல் நம்மிக்கை வைத்து இருந்தால் இந்த  நொடி அவன் உயிர் போய் இருக்காது  !
(கடவுள் மேல வைக்கிற நம்பிகைய நம்ம மேல வைக்கலாம் எல்லம் சரியா நடக்கும் )

கடவுள் யாருக்குத்தான் நல்லது செய்வார் ? அவர் செய்யும் நல்லது எல்லாம் "போட்டிக்கு ஆளே இல்லாத வேட்பாலனை ஜெய்க்க வைப்பது போல் "  (இந்த இடத்தில கடவுள் இல்லனாலும் ஜெய்கலாம்)

மனிதன் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியாமல் உருவாக்கிய  உயிரில்லாத  உருவமே க(டவு)ள்  !
கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் அது நம்பிக்கை அதுவே அதிகமானால் அது மூடநம்பிக்கை !

போன வாரம் கடவுளுக்காக நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை (வெறும் செய்தியாக ) என்ன செஞ்சாங்க கொன்னவங்கள புடிச்சி உள்ள போட்டா போன உயிர் திரும்பி  வருமா இல்ல கடவுள்தான் கொடுப்பாரா
எதுமே நடக்காது அவுனுங்க இன்னும் பாதுகாப்பா அடுத்த பலி கொடுப்பாங்க ...

கடவுள் நல்லது மட்டும்தான் செயவார்ணா எதுக்கு மதம் மன்காநின்னு பிரிச்சாறு ?
அதுலயே ஆக்குறது ,அழிக்கிறது, காக்குரதுன்னு இலாக்கா வெங்காயம்லாம் ஏன்  பிரிக்கணும்
ஒரே குளம் ஒன்றே தேவைன்னு வைக்கலாம்ல !

மனிதனுக்கு மட்டும் சூப்பர் பவர்ஸ்லாம்  வந்துச்சுன்னா (கடவுள் தர தேவை இல்லை அறிவியல் இல்ல பரிநாமதுனாலையோ வரட்டும் ) கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க கண்டிப்பா சொல்றேன் !

இப்போ மட்டும் யார் சந்தோசத்துக்கு கோயிலுக்கு போறாங்க சரக்கு அடிக்கத்தான் போறாங்க !
சோகம்ன்னு வந்தா மட்டும் கடவுள் நெனப்பு வந்துடும் !
 நூத்திஎட்டு தேங்கா உடைகிறேன் முடி எடுக்குறேன்னு வேண்டிகிட்டு
(ஏன் கை எடுக்குறேன் காத எடுக்குறேன்னு வேண்டிக்க கூடாதா ? )அந்த கஷ்டம் போக அவுங்களே போராடி அந்த துன்பம் போச்சுன்னா கடவுள் பேர பினாமியா பயன்படுத்துறாங்க !

ஒ ! ஒரு வேல நல்ல வசூல் பாக்கதான் கஷ்டம் குடுக்குராரோ கடவுள் ? காணிக்கை வந்த உடனே
ctrl +z   குடுத்துடுவாரோ ?
சரி அப்டி இல்லனா அநியாயமா கஷ்டத்துக்கு ஆளாகுற மக்களை காப்பதலாம்ல ?
என்னதான் பண்றார் கடவுள் ?(இருந்தாத்தான  எதாவது பண்றதுக்கு )

"அவர் என்ன வேனா பண்ணட்டும் நாம என்ன செய்ய போறோம்ன்னு யோசிங்க  நம்பிக்கை தன்னம்பிக்கையா மாறிடும் "
(there is no god so belive in yourself !! )

கடவுள் காப்பாத்துவார் !
கடவுள் காப்பாத்துவார்னு சொல்லாம
நான் சமாளிச்சுடுவேன் !
நான் சமாளிச்சுடுவேன்னு சொல்லி பழகுங்க எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் உடைக்கலாம் !!


சரியான விடையை தேந்தெடுக்க
என்னதான் பண்றார் கடவுள் ?
அ.சன் டீவீல சீரியல் பாக்குறார்
ஆ.ஸ்டார் மூவீஸ்ல இங்கிலீஷ் படம் பாக்குறார்
இ.விஜய் டீவீ ல ரியாலிட்டி ஷோ பாக்குறார்

 சரியான விடை தெரிந்தால் கோயிலுக்கு போகாதீங்க
உங்க மேல இன்னும் அதிகமா நம்பிக்கை வைங்க !!!! 
புடிச்சா வோட்டு போடுங்க
புடிச்சாலும் புடிகலனாலும் கமெண்ட் போடுங்க !
(அதுல என்னோட தப்ப தெரிஞ்சுப்பேன்)