நான் என்ன எழுத போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை !!!!
எழுதவேண்டும் என்ற உந்துதல் மட்டும் மனதில் தோன்றும்
சமீபத்தில் என்னை மிகவும் தாக்கிய சம்பவம் என் நண்பனின் மரணம்
என்னை மிகவும் சோகத்துக்கு உள்ளாகியது அவனுடன் இருத்த நாட்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்
ஒவ்வொரு நாளும் அவனை நினைவுபடுத்த ஆயிரம் நிகழ்சிகள் வருகிறது !!
21 வயது உலகில் அனைத்தையும் அனுபவிக்க நினைக்கும் வயது !!
நாம் அனுபவிக்கும் அனைத்தும் நிரந்தரம் இல்லை என்று எனக்கு தோன்றும்படியாக அவன் இவுலகில் இல்லை
நாம் பார்க்கும் ,அனுபவிக்கும் ,உணரும்,உண்ணும் எதுவும் நிலையானது இல்லை !!!
இருக்கும் நாட்களில் நம் நேரத்தை கடவுளுக்கும், காவிகளுக்கும் செலவிடாமல் நம் உலகிற்கு ஏதும் செய்வோம்
மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமே !!!
Nellai Anbudan Ananthi - Book Release - March 16 2025
-
*பகுதி 2:*
https://youtu.be/OvgqQy8sUqI?si=KIsI8AVyBBic_UpD
*பகுதி 1:*
https://youtu.be/VMJGGHnXkrA?si=hf6c_NGuMb7VkaQo
கடந்த மார்ச் மாதம் 16ஆம் நாள் தமி...
1 week ago
3 comments:
நண்பருக்கு வணக்கம் . உங்களின் வார்த்தைகளின் வலி வாசித்த எனக்குள்ளும் நிரப்பப் பட்டுவிட்டது .உங்களின் முதல் பதிவே நட்பின் உறவிற்குள் என்னையும் நீந்த செய்துவிட்டது . உங்களைப் போன்ற ஒரு சிறந்த நட்பு கிடைப்பதற்கு உங்களின் நண்பர் மிகவும் கொடுத்து வைத்தவர்தான் . உங்களின் சோகங்களுக்கும் , சந்தோசங்களுக்கும் தோள் கொடுக்க இந்த பனித்துளி சங்கர் இருக்கிறேன் .!
தொடர்ந்து எழுதுங்கள் .
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று . காலப்போக்கில்
உங்களின் எழுத்துக்களும்
உங்களைப் போன்ற
பல நண்பர்களின் கண்ணீர் துடிக்கும் கைக்குட்டையாக மாறட்டும் !.
உன் விரல்கள் துடைக்கும் கண்ணீர் துளிகளில் புன்னை பூக்கள் மலரட்டும் .
வாழ்க்கை கொஞ்சம்தான் அதையும் அழுதுகொண்டே கழித்தது போதும்
இன்று முதல் சிரித்துகொண்டே வாழ்ந்து பார் .
உன்னை பிரிந்து சென்ற நட்பை என்னை போன்று ஏதேனும் ஒரு உறவு உச்சரிக்கப் போகும் வார்த்தைகளில் காண்பாய் விரைவில் !
மீண்டும் வருவேன் தொடரட்டும் உங்களின் எழுத்துப்பயணம் !
எனக்கு தெரியும் நண்பா உன் மனதில் இருக்கும் அந்த சோகம்
காலம்தான் அதை மறைக்க வேண்டும்
உன்னால் முடியும்டா
நன்றி தோழரே .....
Post a Comment