Pages

Saturday, July 24, 2010

பொடிப்பையனின் கவித !!!


 நாலஞ்சு நாளா யோசிச்சதுல என்ன பதிவு போடலாம்னு கடைசி வரைக்கும்  தோனல !
இன்னக்கி காலைல பழைய பொட்டிய நோன்டுனதுல கெடச்சுது பாருங்க ஒரு பேப்பர் !!
அட வேற ஒன்னுமில்லப்பா ஸ்கூல்ல படிக்கும்போது நான் எழுதுன கவித !
(அப்டின்னு நான் நேனைசுகிட்டு இருக்கேன் அது கவிதையா இல்ல அதுக்கு  வேற பேரான்னு நீங்கதான் சொல்லணும் )


புதிய பதிவில் தட்டச்சின் உதவியோடு பதிக்கிறேன் என் கவிதையை !

அழகான கவிதை
"அம்மா"
அழகான  உறவு
"நட்பு"


நெருப்பிலும் நிற்கலாம் 
நீரிலும் ஓடலாம் 
தரையிலும் மிதக்கலாம் 
வானிலும் பறக்கலாம் 
தோழனின் துணை இருந்தால் !

உயிர்தந்த கருவறையை நினைவிலயே கொண்டிரு 
உயிரற்று கல்லறை செல்லும்வரை

உன்னை  ஆளாக்கியவளுக்கு
உண்மையை இரு  !
சுமையாய் கருதி எமனாய் இராதே !


துன்பத்தில் தோல்தர 
இன்பத்தில் கலந்திர 
இரவு முழுக்க பேசிட
ஒன்றாய் உணுன்ன
ஒன்றாய் உறங்க 
அனைத்திலும் உடனிருந்த நீ 
என்னை தனியே விட்டுசென்றதேன் ?
மரணத்துடன் கைகோர்த்து !

இன்னும் அந்த வெள்ளைத்தாளில்
தெளிவாக தெரிகிறது
"என்ன மறந்துடு"
மச்சி இன்னொரு குவாட்டர் சொல்லுடா !!


மூன்றுசக்கர சைக்கிளில் விளம்பரம்
"புகையில்லா சென்னை"
ஓட்டும் தொழிலாளியின் கையில்
"கணேஷ் பீடி"


முற்றாது!

குற்றம் கூறினால்
திருத்திக்கொள்ள தயாராக
"குத்தாலத்தான்"

என்ன எல்லாம் தனி தனி வரில இருக்குன்னு நீங்க நெனச்சா ஒரு சின்ன தகவல்
அது பேர் கவிதை !!!
அட நம்புங்கப்பா !!

பொடிப்பையனின்  கவித சின்னத்துக்கு ஒட்டு போடுங்க
அதுக்கு பணம் தரணுமோ !!!!
சரி நல்லா இருந்தா !
உங்களுக்கு என்பதிவு புடிச்சா ஒட்டு போடுங்க
ஒட்டு போடுங்க
ஒட்டு போடுங்க 
என்று சொல்லி என் மொக்கையை நிறுத்திகொள்கிறேன் !!