Pages

Sunday, July 3, 2011

குத்தாலம் vs சென்னை

மீண்டும் நான் ! நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவில், அண்ணன் ஜெய் அவர்களின் என்னத்தை நிறைவேற்ற முயல்கிறேன் !

என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் உங்கள் குறைகளையும் நிறைகளையும் கூறி என்னை மேம்படுத்துங்கள் !

இந்த பதிவின் தலைப்பு : குத்தாலம் vs சென்னை
இதுநாள் வரை சென்னையில் இருந்த நான் கடந்த இருவாரங்களாக சொந்த ஊரான குத்தாலத்தில் இருக்கிறேன்(சும்மாதான் :| )

இந்த இருவார காலத்தில் சந்தித்த நிகழ்சிகளும் காட்சிகளும் முந்தய விடுமுறையை விட குறைவுதான் ஆனால் இவ்விரு ஊர்களில் நான் அனுபவித்த இடங்களையும் குறித்து என்கருத்துக்களை பகிர்கிறேன்!

குத்தாலம் :
என் கல்லூரி காலம் முடிந்தது என் இயலாமையாலும்,அறியாமையாலும் ஏற்பட்ட யுத்தகாண்டத்தை(அதாங்க தேர்வு) முடித்து
வீடிற்கு வந்தேன் !:)

ஒவ்வொரு செயலுக்கும் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட நான்  என்னவானேன் என்று எனக்கே தெரியவில்லை ?!


விடியற் காலை எழுவதும் நடுஇரவில் படுப்பதுமாய் இருந்தேன் !

காலையில் என் ஊரில் கண்ட சில காட்சிகள் :


 எங்க ஊர் பெரிய கோயிலின் ஒரு பகுதி ! என் நண்பர்களுடன் வெட்டி பேச்சிற்கு சிறந்த இடமாக கருதுகிறேன் !


பச்சை பசேல் என வயல்வெளிகள் கண்ணிற்கு இனிமையான காட்சியுடன் உடலில் உரசி செல்லும் தென்றல் என அருமையான அமைதியுடன் ஒரு இடம் ....



இது போதும் அறுவடை வரை ஒரு கவலை இல்ல !

அப்பப்போ மின்தடையுடன் பிவிசி நிறைய தண்ணீர் :)



முன்பை விட இப்போது மதிப்பில்லாமல் போனாலும் ருசி மாறாத சர்பத் !



காவேரி கரையினில்  நிரம்பி வழியும் தண்ணீர் எங்கும் காணாத சுத்தத்துடன் !
கரையோர மக்களை மகிழ்வித்து செல்கிறது !


இது தவிர அணைத்து அத்தியாவசிய வசிதிகளுடன்  நம் தேவைகளும் திருப்தி அடையும் வகையில் இருக்கும் எங்க ஊரை வேறு எந்த ஒரு ஊரோடும் ஒப்பிட மனமில்லை !

சென்னை :
இது வரை கூறிய எதுவும் கிடைக்காத ஒரு மாநகரம் !



 

நாம் ஒரு சாமானியறாய் இருந்து கனவு காணும் சில விஷங்கள் இங்கே சாதரணமாய் நடக்கும் !
நடுத்தர வர்கத்தின் சிறப்பு சுற்றுலா தளமும் ,உலகிலயே மில நீளமான கடற்கரையும் கொண்ட சென்னை மாநகரம் சிறப்புகள் சில




இங்கே எல்லா படங்களிலும் காட்டுவது போல் சிறப்பான சென்றல் ரயில் நிலையமும் ,அருகிலேயே மிக பெரிய அரசு மருத்துவமனையும் இருக்கிறது அனைத்தும் சாமானியர்களுக்கு உதவுவது !
 



  அதை தவிர சில அறிய வகையான இடங்களும் இருக்கிறது மாமல்லபுரமும்,வண்டலூர் உயிரியல் பூங்காவும் மக்கள் அதிகம் நாடும் இடங்கள் மிகவும் அருமையான இடங்கள்  !

என்ன சொல்றது இங்க இருக்குறது வேறு விதமான அனுபவம் இதுவும் நல்லா இருக்கும் தேவைக்கேற்ப  பணம் மட்டும் இருந்தால் !
:)

சென்னைகென்றே உரிய தனிசிரப்புகளும் துயரங்களும் : வெயில் ,தண்ணீர் குறை ,ஒரு நாளில் முடிக்க முடியாத சுற்றுலா தளங்கள் ! ,ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு போக்குவரத்து நெரிசல்,டி.நகர்,பிரமிப்பூட்டும் திரையரங்குகள் ,உல்லாச விடுதிகள்(pub), கண்ணெதிரே நடக்கும் விபத்துகள்,கொலைகள்,சொகுசு கார்கள்,அமைதியே இல்லாத இரைச்சல்கள்,இவையெல்லாம் இல்லை என்றால் அது சென்னையே இல்லை !!


இதுபோல் கொண்டாட்டங்களும் துயரங்களும் நிறைந்த சென்னை ஒரு தனியழகுதான் !



ரசிப்பதும் வெறுப்பதும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது !
சூழ்நிலைகளும்,இக்கட்டான தருணங்களும் அவற்றை மாற்றுகின்றன !

எக்காரனதிர்க்காகவும் என் சொந்த ஊர்வாழ்கையை குறைசொல்ல மாட்டேன் ....

ஆனால் சென்னை வாழ்கையும் ஒரு தனி சுகம்தான் !

நிச்சயமாக மறுக்க மாட்டேன் ! :)

பிடித்தால் ஒரு ஓட்டும் பிடிக்கலன்னா ஒரு கமெண்ட்டும் போட்டு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன் .....

படங்கள் :
குத்தாலம் :பிரபா :)
சென்னை : கூகிள் :)