Pages

Thursday, August 5, 2010

கடவுள் என்னதான் பண்ணுறார் ???

இங்க நான் சொல்ல போறது எல்லாமே என்னோட கருத்து !!
காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து குளித்து புத்தகத்தை எடுத்து இரவு படித்ததெல்லாம் ஒரு முறை பார்த்து
பள்ளிக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் கடவுளிடம் மனமுருகி வேண்டி வெளியில் வந்து செருப்பு போடும் போது வந்தான் எமன் அதிவேகமாய் வந்த அந்த லாரி மரத்தில் மோதியது முன்னால் அந்த சிறுவனையும் சேர்த்து .......
 அந்த இறுதி நொடி வரை கடவுள் மேல் நம்பிக்கை வைத்த அவனுக்கு என்ன பலன் ...
அவன் கோவிலுக்கு போகாமல் பரிச்சைக்கு போனால் தேர்வில் தோற்று போவான என்ன ? இல்லை கண்டிப்பாக இல்லை
கொஞ்சம் அதிகமாக அவன் மேல் நம்மிக்கை வைத்து இருந்தால் இந்த  நொடி அவன் உயிர் போய் இருக்காது  !
(கடவுள் மேல வைக்கிற நம்பிகைய நம்ம மேல வைக்கலாம் எல்லம் சரியா நடக்கும் )

கடவுள் யாருக்குத்தான் நல்லது செய்வார் ? அவர் செய்யும் நல்லது எல்லாம் "போட்டிக்கு ஆளே இல்லாத வேட்பாலனை ஜெய்க்க வைப்பது போல் "  (இந்த இடத்தில கடவுள் இல்லனாலும் ஜெய்கலாம்)

மனிதன் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியாமல் உருவாக்கிய  உயிரில்லாத  உருவமே க(டவு)ள்  !
கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் அது நம்பிக்கை அதுவே அதிகமானால் அது மூடநம்பிக்கை !

போன வாரம் கடவுளுக்காக நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை (வெறும் செய்தியாக ) என்ன செஞ்சாங்க கொன்னவங்கள புடிச்சி உள்ள போட்டா போன உயிர் திரும்பி  வருமா இல்ல கடவுள்தான் கொடுப்பாரா
எதுமே நடக்காது அவுனுங்க இன்னும் பாதுகாப்பா அடுத்த பலி கொடுப்பாங்க ...

கடவுள் நல்லது மட்டும்தான் செயவார்ணா எதுக்கு மதம் மன்காநின்னு பிரிச்சாறு ?
அதுலயே ஆக்குறது ,அழிக்கிறது, காக்குரதுன்னு இலாக்கா வெங்காயம்லாம் ஏன்  பிரிக்கணும்
ஒரே குளம் ஒன்றே தேவைன்னு வைக்கலாம்ல !

மனிதனுக்கு மட்டும் சூப்பர் பவர்ஸ்லாம்  வந்துச்சுன்னா (கடவுள் தர தேவை இல்லை அறிவியல் இல்ல பரிநாமதுனாலையோ வரட்டும் ) கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க கண்டிப்பா சொல்றேன் !

இப்போ மட்டும் யார் சந்தோசத்துக்கு கோயிலுக்கு போறாங்க சரக்கு அடிக்கத்தான் போறாங்க !
சோகம்ன்னு வந்தா மட்டும் கடவுள் நெனப்பு வந்துடும் !
 நூத்திஎட்டு தேங்கா உடைகிறேன் முடி எடுக்குறேன்னு வேண்டிகிட்டு
(ஏன் கை எடுக்குறேன் காத எடுக்குறேன்னு வேண்டிக்க கூடாதா ? )அந்த கஷ்டம் போக அவுங்களே போராடி அந்த துன்பம் போச்சுன்னா கடவுள் பேர பினாமியா பயன்படுத்துறாங்க !

ஒ ! ஒரு வேல நல்ல வசூல் பாக்கதான் கஷ்டம் குடுக்குராரோ கடவுள் ? காணிக்கை வந்த உடனே
ctrl +z   குடுத்துடுவாரோ ?
சரி அப்டி இல்லனா அநியாயமா கஷ்டத்துக்கு ஆளாகுற மக்களை காப்பதலாம்ல ?
என்னதான் பண்றார் கடவுள் ?(இருந்தாத்தான  எதாவது பண்றதுக்கு )

"அவர் என்ன வேனா பண்ணட்டும் நாம என்ன செய்ய போறோம்ன்னு யோசிங்க  நம்பிக்கை தன்னம்பிக்கையா மாறிடும் "
(there is no god so belive in yourself !! )

கடவுள் காப்பாத்துவார் !
கடவுள் காப்பாத்துவார்னு சொல்லாம
நான் சமாளிச்சுடுவேன் !
நான் சமாளிச்சுடுவேன்னு சொல்லி பழகுங்க எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் உடைக்கலாம் !!


சரியான விடையை தேந்தெடுக்க
என்னதான் பண்றார் கடவுள் ?
அ.சன் டீவீல சீரியல் பாக்குறார்
ஆ.ஸ்டார் மூவீஸ்ல இங்கிலீஷ் படம் பாக்குறார்
இ.விஜய் டீவீ ல ரியாலிட்டி ஷோ பாக்குறார்

 சரியான விடை தெரிந்தால் கோயிலுக்கு போகாதீங்க
உங்க மேல இன்னும் அதிகமா நம்பிக்கை வைங்க !!!! 
புடிச்சா வோட்டு போடுங்க
புடிச்சாலும் புடிகலனாலும் கமெண்ட் போடுங்க !
(அதுல என்னோட தப்ப தெரிஞ்சுப்பேன்)