Pages

Sunday, June 23, 2013

நளனுடன் கவியும் நலம் :)

ரவிக்கும் கல்பனாவிற்கும் ஒரே மகள் கவி(க from கல்பனா வி from  ரவி ),அவள் நினைத்தது எல்லாமே நடக்கும் ,செருப்பு அலமாரியில் இடம் இருக்கு  என்பதற்காக 1 சோடி செருப்பு வாங்குவாள் .தன்  தோழி புது துணிக்கு மேட்சாக இவளும் புதுத்துணி வாங்குவாள் . கவிக்கு பணம் அவள் அப்பா பாக்கெட்டில் முளைக்கிறது  என்று எண்ணம் .குடும்ப நிலை பற்றியெல்லாம் நொடி கூட சிந்திக்காதவள் , ரவிக்கோ தன் ஒரே மகள்  சந்தோசம்தான் முக்கியம் .

ரவி பிஸ்லேரி வாட்டர் கேன் டீலர் ,வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் ரோட்டை  சுற்றியுள்ள கடைகள் தான் எல்லாமே .சென்னையின் தண்ணீர் தேவையை பற்றி அறிதிருபீர்கள் என நினைகிறேன் , அதும் உஸ்மான் ரோட்டை வாழ வைப்பதில் பெரும் பங்கு இன்றைய இளைய சமுதயாதிர்கே உண்டு .

கவியின் கல்லூரி காலம் இனிதே ஆரம்பித்திருந்தது , கூடவே நளனுடன் காதலும் ,இருவரின் கால்தடம் படாத இடமே இல்லை மெரினாவில் ,

அவளுடன் ஒரு பேருந்து பயணம் இருவரும் கடைசியில் ஒரிருக்கையில் ,
அவனின் கைகள் அவளை தாண்டி சன்னலை பிடித்தன , வாட்ஸ் ராங் வித் யு டா ? என்றவள் அடுத்த நிறுத்தத்தில் சிணுங்கினாள் அடுத்த நிறுத்தத்தில் வெட்கத்தை கண்ணாடி  போட்டு மறைத்துவிட்டு அனுமதித்தால் அவளின் தோள்களில் அவனின் கை , இப்படியாக  காதல் வளர்த்தனர் .




அப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்லித்தான் தெரியனுமா இததான் 10வருஷமா படத்துல ,பக்கத்துக்கு வீட்டுலலாம் நடக்குது .

இப்படி போட்டு கதைய முடிக்கலாமா இல்ல ம்ம்.. இப்படி போடலாம் ....

கண்டிப்பா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க டைட்டிலை மறுபடி படிக்கவும் !!

சேரி அதுவும் வேணாம் ம்ம்ம் இத சோக கதையா மாத்திடலாம் ...

இருவரின் காதல் தெரிந்து ரவி படுத்த படுக்கையானார் ,அதை பற்றி கவலை கொள்ளாமல் நலனுடன் ஓடினாள் கவி .போகும் வழியில் லாரி மோதி சம்பவ இடத்துலயே இறந்தனர் . எ ஸ்டோரி by பாலா !

செண்டிமெண்ட் நல்லாவே இல்ல திகிலாய் ஒரு எண்டு வைக்கலாம் ....


இப்படியே கவியை மயக்கி நளன் தன் அரைக்கு அழைத்து சென்றான் அவளை, அமைதியாய் இருந்த கவி திடீரென்று அலற ஆரம்பித்தாள் , என்னவென்று புரியாமல் மேட்டர் செய்ய இருந்த நளன் மெர்சலானான் !
காற்று பலமாக வீச கவியின் செயல்கள் அனைத்தும் கட்டுக்கடங்கி போனது கட்டில் கால்களை உடைத்து அடிக்க ஆரம்பித்தாள் , எகுரிகுதித்து தலை தெறிக்க ஓடிய நளன் ,தான் நண்பர்களுடன் சரக்கடிக்கும் இடத்திற்கு போய்  அமர்ந்தான் ,உக்கார்ந்த இடத்தில எதோ முட்ட குனிந்து பார்த்த அவனுக்கு பேரதிர்ச்சி

கவிதா
தோற்றம் :1.12.1970 மறைவு : 2.11.1992

நளனுக்கு மண்டையில் பொறி தட்டியது ஒருமுறை கவியை அங்கு சந்திக்க திட்டமிட்டு அவனால் வர முடியாமல் போனது அதற்காக 2 வாரம் கவி அவனுடன் பேசவில்லை . பிறகுதான் புரிந்தது நளனுக்கு அவன் கூட்டி வந்தது கவியில்லை கவிதா !#$%@&**..,.,.

இது மிகக்கேவலாமாக இருக்கு,
 நம்ம மக்கள்  முக்கோண காதலா  இருந்தாலும் 2 பேர் தான் நல்லா இருக்கனும்ன்னு நினைப்பாங்க ,நம்மகிட்ட இருக்குறதே 2 பேர் தான் சேத்து வச்சிருவோம் ...



 நளனுடன் கவியும் நலம் :)


ரொம்ப நாள் ஆச்சு பதிவெழுதி ஏதாவது எழுதனும்னா எதுவும் ஒத்து வரல அதான் இப்டி !

பிழை இல்லாதவன் பிழைக்கவே மாட்டான்னு எங்க ஆத்தா சொல்லும்

சோ பிழை இருந்தா கண்டுகாதீங்க :)