Pages

Sunday, July 7, 2013

திரும்ப திரும்ப எழுதுற நீ ....

அன்று சனவரி மாதம் முதல் வார சனிக்கிழமை இதே வருடம்

 அதி காலை ராமின் அரை ,

ராம் இன்று மலருக்கு காதல் கடிதம் கொடுக்க முடிவெடுத்திருந்தான் ,இன்றோடு 3 மாதம் ஆகிறது மலரை சந்தித்து , இருவரும் ஒரே கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணுகிறார்கள் பிரபல நிறுவனத்தில்,
கமா செமிகோலன் தவரை எல்லாம் சரிசெய்ய உதவி நட்பாகினான்.அவளும் ராமை நல்ல நண்பனாகவே எண்ணினாள் .

நாட்கள் செல்ல செல்ல நட்பு செடியில் காதல் பூக்க தொடங்கியது ராமிற்கு ,என்னதான் நட்பாக பழகினாலும் காதல் கடிதம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் .கொஞ்சம் பழைய ஸ்டைல்தான் என்றாலும் ராமிற்கு பிடித்தமான ஒன்று கடிதம் எழுதி காதலை சொல்வது .

நேற்றிரவே யோசித்து அதிகாலை அலாரம் வைத்து அதற்க்கு முன்பே எழுந்து திரு திருவென்று சுவரையே வெறித்து கொண்டிருந்தான் ...1 ..2...3...4...5 நிமிடம் முடிந்து அலாரம் அலறியது அதை நிறுத்த எகுறி தடுக்கி விழுந்து பெரிய காயமில்லாமல் தூக்கம் மட்டும் தெறித்திருந்தது !

முகம்கழுவி பேப்பர் பேனாவெல்லாம் எடுத்து எழுத தொடங்கினான் ஒரு மணி நேரம் யோசித்து எழுதி எழுதி கசக்கி கசக்கி கடைசியில் ஒரு 5நிமிஷத்தில் எழுதி முடித்தான் 

அன்புள்ள மலருக்கு 

 ராம் எழுதுவது , 
உன்மீதிருக்கும் என் அன்பை சொல்ல விருப்பம் ,எப்படி சொல்வதென்று தெரியாமல் கூகிளை நாடினேன் (love letter in tamil) தேடி தேடி data  pack முடிந்ததுதான் மிச்சம் ஒன்றும் கிடைத்த பாடில்லை ,கடைசியாக ஒன்று மட்டும் புரிந்தது என் அளவற்ற அன்பு கூகிளின் data centerரை விட பெரிது .உன்னை மணந்து என் வாழ்நாள் முழுவதும் உனக்கென வாழ விருப்பம் ,அவசரமில்லை நம் கோர்ஸ் முடிய இன்னும் மூணு மாதம் இருக்கிறது சிந்தித்து சொல் என்னை அழ வைக்காத ஒரு பதிலாக சொல் ,தயவு செய்து குழப்பாமல் பைனரியில் பதில் சொல் !

உன் வருங்காலத்தை என் எதிர்காலமாய் நினைக்கிறன் யோசித்து முடிவெடு !

                                                                                                  உன் நினைவுகளுடன்  
                                                                                                                  ராம் 

என்று எழுதி முடித்து வழக்கம் போல் கிளாஸ்க்கு போனான் ,மலர் இன்று இன்னும் அழகாக இருந்தாள் வெள்ளை சுடியில், மிகவும் படபடப்புடன் இருக்கிறான் ராம் ,
இன்றும்  எதற்கோ உதவ சென்று கடிதத்தை அவள் நோட்டில் செருகி வைத்து விட்டு வந்துவிட்டான் . இரவு தூக்கம் வரவில்லை பொரண்டு பொரண்டு படுத்தாலும் யாரோ அடிப்பதுபோல கனவு வருகிறது ,உண்மையிலேயே இது ஒரு ஒரு பெரிய இரவு போல் இருந்தது ராமிற்கு .

மறுநாள் காலை என்ன நடக்க போகிறதென்று யோசிக்க இயலாமல் வகுப்பில் போய் அமர்ந்திருந்தான் , மலர் வருகிறாள் ராமை நோக்கி அதுவும் முறைத்து கொண்டே , நம்மாளுக்கு அல்லு இல்ல திரு திருன்னு முளிச்சிகிட்டு அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் , வேகமாய் அருகில் வந்தவள் உனக்கெல்லாம் அறிவு இருக்கா வீட்ல யாரவது பாத்தா என்ன ஆகிருக்கும் என்றாள்

கேட்டதும் துள்ளி குதித்தான் ராம் ....
.
.
.
.
.
.
.
.

 அதி காலை ராமின் அரை

என்னங்க எழுந்திருங்க உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க,அப்படியே மலரையும் எழுப்புங்க ஸ்கூல்க்கு கிளம்பனும் ...


கலைந்த கனவுடன்(காதலுடன்) எழுந்தான் ராம் .


கேவலாமா இருக்கா ?
 ம்ம் ஆமா !
 நானும் அப்பவே சொன்னேன் இவன்ட இந்த லவ் மேட்டர் எல்லாம் செட்டாவாது மச்சின்னு கேட்டானா 
 இல்ல நான் பதிவு போட்டே தீருவேன்னு ஓத்த கால்ல நின்னான்,கத எழுதுறானாம் கத .