Pages

Saturday, July 31, 2010

மச்சி ட்ரீட்...(இன்பத்திலும்! துன்பத்திலும்! )

என்னங்க நமீதா எப்டி இருந்தாங்க (முந்தய பதிவு )?
இப்ப வரைக்கும் என்ன எழுதபோறேன்னு தெரியல கடந்த ஒரு மாசமா என்னோட எல்லா வேலையும் இப்படிதாங்க போகுது முன்னாடியே முடிவு பண்ணினா நாசமா போய்டுது அதான் எதுமே முடிவு பண்ணாம எரங்குறதா  முடிவு பண்ணிட்டேன் !!

இந்த ட்ரீட் மேட்டர் கூட நம்ம சில்லோட பதிவ படிச்சப டொய்ங் நு மண்டகுள்ள ஒரு புலப் எரிஞ்சது வேற என்ன எல்லாம் ஒரு பிளாஷ்பாக்தான்
(தலைவரோட பாடு கூட இருக்கே "நினைவோ ஒரு பறவை அது டொய்ங் நு  அடிக்கும் சிறகை !!")


கல்லூரி  சேந்த பிறகு மூனாமாண்டு நிறைவுலத்தான் நிறைய லீவே விட்டாங்க ஒரு மாசம் வீட்டுக்கு போய் உட்கார்ரதுகுள்ள மச்சி ட்ரீட்னு வந்துட்டானுங்க வேற யாரு உயரிலும் மேலான நண்பர்கள் !!

வீட்டுக்கு தெரியாம சுட்டு வச்ச துட்டுலாம் "தண்ணியா" போகுது பாஸ் என்ன செய்ய !!
சரி விடுன்னு வச்சா தினம் தினம் தீபாவளியா இருக்கு நல்ல வேல தினமும் நான் இல்ல சங்கத்துல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் டௌசெர் அவுக்குரானுங்க !!!

இதுல என்ன ஒரு கொடுமைனா இதுக்கு இவங்க சொல்ற காரணம்தான் பாஸ் !
(கான்செப்ட் கிடைச்சுடுச்சு  யே.......)


இதுக்காக ரூம் இல்லங்க வீடு புடிச்சி யோசிக்கிறாங்க !!

நண்பன் : மச்சி இன்னக்கி உன்  ட்ரீட்டு டா லைசென்ஸ் எடுத்ததுக்கு !
நான்: சரி மச்சி !
நண்பன்:அப்ப நாளைக்கும் நீதான் மச்சி ட்ரீட்டு !
நான் :எதுக்கு டா ?
நண்பன் :இன்னக்கி ட்ரீட் வைக்கபோறல்ல அதுக்கு டா !
நான் : ?! :(\

அட அத விடுங்க சந்தோசமான விஷயம் அட சோகத்துக்கும் கேக்குறாங்க பாஸ்! 

வண்டில இருந்து கீழ விழுந்தா ட்ரீட்டு  !
நான் :மச்சி இன்னக்கி வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்டா :(

நண்பன்:சரி கவலை படாத டா சாங்காலம் ட்ரீட் வச்சிபோம் எல்லாம் சரியா போய்டும் !
நான் : என்ன கொடும சார் இது ?!
நண்பன்:சரி கோச்சுக்காத டா நாளைக்கி வச்சா கூட  பரவாஇல்ல !

Wednesday, July 28, 2010

நான் எடுத்த நமீதா போட்டோ !!!

இன்னக்கி ஒரு படபதிவு போடலாம்னு தோனுச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் நம்ம நமி படம் நினைப்பு வந்துச்சு

இப்டியெல்லாம் டிரையல் ரூம்ல போட்டோவ வச்சா...நாங்க எப்டி நம்பி உள்ள போறது...


நான் ட்ரெஸ்ஸே போட்டு பாக்கல போட்டோவ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் : )

நீங்க கூட நமீதான்னு டைட்டில் பாத்துட்டுதான வந்தீங்க அதுக்குதான் கம்பி விளம்பரத்தில் கூட நமிதாவ போடுறாங்க அதே ஐடியாதான்
__________________________________________________________________________

அடுத்து நம்ம "நோ பார்கிங்தான்"


இது என்னவோ தனி கலைன்னு நம்ம ஆளுங்க நினைக்கிறாங்க  போல அந்த அறிவிப்புக்கு ரெண்டு பக்கமும் இடம் இருக்கும் ஆனா பாருங்க முட்டிதான் வச்சிருக்காரு தல !!

கேட்டா "தடைகளை  தடை  செய்யும் சங்கம்னு " ஒரு பேர் வேற !
இதுகல என்ன செய்ய மாதவன் மாதிரிதான் கேக்கணும் 
இப்ப என்ன செய்ய
 
________________________________________________________________________

அட எங்க ஊர்தான்பா ஒரே பேர வித விதமா எழுதுற தெரம இவங்களுக்குதான் இருக்கு நெறைய ... இந்த ஊர் பக்கம் வராதவங்க வந்தா அருவி எங்க இருக்கு கொரங்கு எங்க  இருக்குனு கேக்குறாங்க பாஸ் என்ன செய்ய முடியும் அதான் என்னோட சோகத்த  இங்க சொல்றேன் ....நீங்களாச்சும் எங்க ஊருக்கு வந்தா தெளிவா இருங்க !
_____________________________________________________________________

போன வாரம் பக்கத்துல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனேன்
அங்கதான்  இந்த கொடுமைய பாத்தேன் என்னதான் சின்ன கொழந்த அடம் புடிச்சாலும் பார்சல் பண்றதெல்லாம் ஓவர்
புரியலையா பாருங்க


திடீர்னு பாத்துட்டு ஷாக் ஆய்ட்டேன் கார்கோ போட்டி குள்ள போட்டு விளையாடுறாங்களாம் கொய்யால

இப்டியடா விளையாடுவீங்க உட்டா பார்சல் பண்ணி வேய்ட் போட்டு அனுபிருவாங்க  போல ...

_____________________________________________________________________

த்ரீ இடியட்ஸ்  படம் பாத்துட்டு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல எங்க வகுப்பு ஒரு மூணு பேர் பேசிட்டு இருந்தாங்க நான் எப்போதுமே கடைசி பெஞ்ச்தான் அவுங்கல பாத்தா நம்ம  த்ரீ இடியட்ஸ் மாதிரியே இருக்கு அங்கயே புடிச்சிடேன்ல படத்த(எங்களுக்கு கிட்னி அதிகம்)

படத்தோட ஸ்டில் பாத்தீங்கன்னா தெரியும் !!!
அப்டி இல்லனா என்ன கேக்காதீங்க !

சரி கடைசியா ஒரு தகவல்
உங்களுக்கு தெரிஞ்ச நம்ம ஜில்தண்ணி யோட போட்டோ ஒன்னு மாட்டிருக்கு
பாத்து பயந்துடாதீங்க அப்புறம் ரகசியமா வச்சிகோங்க !!!அட தத்ரூபமா இருக்குல்ல என்ன போஸ் என்ன போஸ் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்  !!!!

Tuesday, July 27, 2010

எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1

நம்ம தமிழ் பதிவுலகம் மிகப் பெரியதுங்க,தினம் தினம் பல புதியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நிறைய திறமைசாளிகள் இருக்கின்றனர்,வல்லுனர்கள் இருக்கின்றனர் நமக்கு வழிகாட்ட,பிரபலங்கள் இருக்கிறார்கள்.

இந்த
பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க,அதனால் கொஞ்சம் புதியவர்களில் இருந்து தொடங்குகிறேன்

தங்களுக்கு
நேரம் கிடைத்தால் இவர்களை படியுங்கள்,பின்னூட்டமிடுங்கள்,அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்

குத்தாலத்தான் - பிரபாகர்

என் நண்பன் பிரபா,இந்த பதிவோட ஓனரும் இவர்தாங்க,செமயா மொக்க போடுவானுங்க,நீங்களே படித்து பாருங்களேன்

கொசு பிடிக்க spiderman!!!
பக்கத்துக்கு வீட்டு சண்டை !!

மனோ- A baby from coimbatore

கோவையில் இருக்கும் நண்பர்,பதிவர் மனோ

இவரின் டைரி குறிப்புகளையே நம்முடன் பகிர்பவர்,அத்தனையும் அருமையாக இருக்கும் நினைவுக் குறிப்புகள், நல்ல விமர்சகரும் கூட

இவரின்
சில பதிவுகள்

ஒரு காதலின் டைரி குறிப்புகள் - 6
நான் மகான் அல்ல - இசை விமர்சனம்

தமிழ் தலைமகன் - வில்சன்


இவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிரும் விதமே அற்புதமாக இருக்கும்,இவரையும் படித்துப் பாருங்கள்

கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)
கடவுள் இருக்கிறார்
இயந்திரப் பறவை - பாகம் 1


சிவதரிசன் - காரைத்தீவு

காரைத்தீவு என்ற தெரியாத ஊரிலிருந்து எழுதும் நண்பர்,விலங்குகளை பற்றிய அரிதான பதிவுகளை எழுதும் பதிவர்,இவர் பதிவுகள் சில

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்


மீண்டும் சந்திப்போம் !!!!