Pages

Sunday, May 17, 2015

டேவிட்டின் தொடரும் கொலைகள் !

                        வழக்கம் போல் கவனக்குறைவால் அன்றும் டேவிட் தன் வேலையில் ஏதோ சொதப்பிடான் ,அவன் மேனேஜர் அவனை எல்லார் முன்னாடியும் ....

அன்று மதியஉணவு கொஞ்சம் அதிகமாகி போனதால்  நடந்திருக்கக்கூடும்,உண்டமயக்கமெல்லாம் நாலாபக்கமும் சிதறி ஓட ,டேவிட்டும் அவைகூடவே அலுவலகத்திக்கு வெளியே வந்து அந்த 5இன்ச் தொடுதிரையில் தன் நண்பனுக்கு கால் செய்ய உத்தரவிட்டான் ,உத்தரவு செயல்படதொடங்கியது .
""மச்சான்  இன்னிக்கும் அவ முன்னாடி அசிங்கபடுத்திடாண்டா அந்த  டேமேஜர்(மேனேஜர்) ! ""
எதிர்முனையில் டேவிட் ப்ரண்ட்டு அமைதியாய் மொத்த கதையையும் கேட்டபின் கலாய்ச்சி வெறுப்பேத்திட்டான் !
அலுவலக அருகில் அண்ணாச்சி கடையில் அப்போது வந்து  ஸ்டாக்கை நிரப்பிய நிகோடின் இப்போது டேவிட்டின் நுரைஈரலை  நிரப்பிகொண்டிருந்தது !
அவ்வளவு நேரம் அமைதியாய்  இருந்த அது இப்போது விழித்து கொண்டது டேவிட் முகம் சுருங்கி,கோபம்,வெறுப்பு நிரம்பி  அந்த நிகோடின் குச்சியின் முனையின் எரிதழலாய், பார்க்கும் முகங்களை எரித்து கொண்டிருந்தது ஆனால் அவர்கள் சாம்பலாகவில்லை , அது இன்னக்கி அவன முடிக்கணும் என்றதும் ,டேவிட் முணுமுணுத்தான் ஆமா அவன இன்னக்கி கண்டிப்பா முடிச்சே ஆகணும் !அந்த வெறி  யாரையும் எரிக்காமல் நிகோட்டின் குச்சியை மட்டும் விழுங்கி விரல்களில் அனலை கக்கியது .
சூடு தாங்காமல் நிகோடின் குச்சியை தூர எரிந்து,"அது"தந்த வெறியை சற்று அசுவாசபடுத்தி,விறுவிறுவென்று அலுவலகம் சென்று சற்று அமைதியாய் தன் இருக்கையை அடைந்தான் !
தான் செய்த அந்த தவறை சரிசெய்து மேனேஜருக்கு மெயில் அனுப்பி , கணினி திரையின்  மூலையில்ஆராய்ந்த அவன் கண்களுக்கு கணினி  மணி ஆறானதை காட்டியது !
இந்த வாரத்துல ரொம்ப நாளா அவன் எதிர்பார்த்த அந்த சீரியல் கில்லர் படம் இன்னக்கி ரிலீஸ் அத பாத்துட்டு இரவை உறவுகொள்ள எதாவது ஒரு  0.1875 லிட்டர் அல்ககாலும் தயார் செய்திருந்தான் !
அதோடு இன்னக்கி டேமேஜருக்கும் ஒரு திட்டம் கொடுத்திருந்தது அவனின் அது !
கடகடவென சட்-டவுன் கொடுத்து வேகமாய் கிளம்பும் பொது எதிரில் சாரா !
டேவிட் வேலைக்கு சேர்த்து கடந்த 8 மாதத்தில் சாரா தான் ஒரே ப்ரண்ட்டு  இந்த சிடுமூஞ்சி டேமேஜர் கொடுக்கும் கடுப்புகளை குறைக்க உதவிய ஒரே ஜீவன் !
"டேவிடிற்கு சாராமேல் ஒரு இது :)
(கம்பை வெறிகொண்டு தேடிய  காஞ்ச மாட்டிற்கு தென்பட்ட கம்பங்கொல்லை) "
என்ன டேவிட் உன்னோட  favorite  படம் இன்னக்கி ரிலீஸ் போல டிக்கெட் புக் பண்ணிட்டியா ? என்றதும் பண்ணிட்டேன் என்பதுபோல் 32 பற்களுடன் தலையை இரு முறை ஆட்டினான் டேவிட்!உடனே டேவிடின் romantic mode activate ஆகி அவள் விடைபெற முயன்ற போது சண்டே ப்ரீயா phoneix mallல "luxe opening ceremony " போகலாமா என்றதும் ,ஆமா நிறைய ஸ்டார்ஸ்லாம் வருவாங்கல்ல போகலாம் can  you pick  me from my home ? என்றாள்
sure  சாரா ! என்று சண்டே திட்டத்தை உறுதிசெய்து இருவரும் அவரவர் வழியில் சென்றனர் .
சாராவிடம் விடைபெற்றத்தும்  மறுபடியும் அது வந்து டேவிட்டை ஆக்கிரமித்தது ,டேவிட்டிற்கு திரும்ப திரும்ப கேட்ட "அவன இன்னக்கி தீக்கணும் " ,அவனை இன்னும் வேகமாய் செயல்பட செய்தது !

மாலை அந்த சீரியல் கில்லர் படத்தை முடித்து அல்ககாலை குடித்து இரவோடு பொரண்டுகொண்டிருந்தான் !
அந்த அலறிமணி அடித்ததும் சட்டென்று எல்லாம் தெளிந்தவனாய் மூர்க்கத்தோடு எழுந்து கைபேசியை தடவி மணியை பார்த்துகொண்டு கிளம்பினான்

""இன்னக்கி செத்த டா நீ"" என்று முனவிகொண்டு வேகமாய் பல்சரை திருகி ரூமிலிருந்து கிளம்பிய டேவிட் நின்ற இடம் அவன் டேமஜரின் வீடு !

வரும்போது மறக்காமல் தேவையான அனைத்தையும் கொண்டுவந்திருந்தான் டேவிட் !
யாரும் பார்கதை உறுதி செஞ்சு காம்பௌண்ட் எகுறி நிசப்தமாய் இரவோடு மறைந்தான் !
டேவிட் இப்போது வெறியின் உச்சத்தில் இருந்தான் !
அவனுக்கு அன்றிரவு பாத்த படத்தில் வரும் அவன் மிகவும் விரும்பிய ஒரு கொடூரமான கொலை நினைவில்கொண்டு

அதை செய்ய தொடங்கினான் .......
தரைவிரிப்பு போல் தான் கொண்டுவந்த பிளாஸ்டிக்கை விரித்து ,மயக்க நிலையில் இருந்த  டேமேஜரை அதன்மேல் கிடத்தி விருப்பபட்டவாறு வெட்டி தீர்த்தான் !  அவன் பார்த்த அந்த படத்தில் வருவது போலவே கொடூரமாய்  கொன்றுவிட்டான் !
டேவிட் கைகள் ரத்தத்தால் பிசுபிசுத்தது ,ஒரு நிமிடம்கூட இல்லாமல் வந்த வேகத்தில் பல்சரில் பறந்தான் !
ரூமுக்கு வந்து குளிச்சி ஸ்டாக்கில் இருந்த இன்னொரு  0.1875 லிட்டர் அல்ககாலை உள்ளிறக்கி இரவோடு மாய்ந்து போனான் !

அடுத்த நாள் காலை வெயில் அனலில் வியர்வை வழிய தரையோடு கிடந்த டேவிட்டிற்கு அழைப்பு வந்தது !
விழிப்பு வரும்முன்பே அழைப்பு வந்ததால் கட் ஆகி போனது அந்த அழைப்பு,கைபேசியில் கோலம்போட்டு  யாரென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ,அழைப்பு வந்ததது டேமேஜரிடமிருந்து ....

தெறித்த  தூக்கம் அடுத்து கைகள் தேடி எடுத்தது நிகோடின் குச்சி ,டேவிடிற்கு ஒரே குழப்பம் நேற்று அதை செய்வதற்கு முன் அந்த டேமேஜருக்கு கால் ஏதாவது பண்ணிதொலைச்சிடனா என்று நிகோடின் குச்சியிடம் வினையவாரே அதை கரைத்திரிந்தான் .
டேவிட்டை சுற்றி வினாக்களும் குழப்பங்களும் நிரம்பி வழிந்தன சில நிகோடின் குச்சிகளை கரைத்த பின் ,சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என அழைப்பு வந்த டேமேஜர் எண்ணுக்கு அழைத்தான் ,

"ரிங் போயிட்டு இருக்கு யார் எடுக்க போராங்களோ ? ,ஒரு வேல போலீஸ் டேமேஜர் நம்பர் லேந்து கால் பண்ணிருபான்களோ ,தெரில பாக்கலாம் "என மனதுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருக்க மறுமுனையில்
ஒரு பெண் குரல் ,பம்மியவாறு இந்த நம்பெர்லேந்து எனக்கு மிஸ் கால் வந்துது என்றான் டேவிட் ,ஒரு நிமிஷம் இருங்க என்று பதில் கூறி அந்த குரல் "ஏங்க  யாரோ கால் பண்ணிருக்காங்க பேசுங்க" இன்று கைபேசியை யாரிடமோ கொடுத்தது .

டேவிட் எத்தன தடவ சொல்றது வேலை செய்றப்போ கவனமா செய்யணும்ன்னு ,அதே டேமேஜர் குரல் !
உனக்கு ஏதும் சந்தேகம் இருந்த என் கேபினுக்கு வந்து கேட்டு தெரிஞ்சிக்கோ இப்படி பண்ணா எனக்கு தோற்றத தவிர வேற ஒன்னும் செய்யமுடியாது
டேவிட்  திகிலால் உறைந்திருந்தான் !
சரி நேத்து எல்லார் முன்னாடியும் வச்சி உன்ன திட்டிட்டேன் ஏதும் மனசுல வச்சிக்காத,உற்சாகம் வந்தவனாய் இல்ல சார் நேத்து ராத்திரியே என் கோவம்லாம் போயிருச்சு என கூறி நேற்றிரவு நடந்ததை நினைவுக்கூர்கிறான்

தன சேகரிப்பில் இருந்த ஒரு பெரிய அருவருப்பான பலத்டரியா(Blattaria) (கரப்பான்களின் இன்னொரு பெயர் ) எடுத்துகொண்டு டேமேஜர்
வீட்டில்  அதை வதம் செய்து டேமேஜர் மேல் இருந்த கோவத்தை  செய்து தீர்த்துக்கொண்டான் .

டேவிட்டின் "அது" அந்த வெள்ளை ரத்தத்தை கண்டு மகிழ்ச்சியில் குதூகலித்தது.மீண்டும் அது சத்தமேதும் இல்லாமல் அவனுள் நிசப்த்தமானது .

டேவிட் தன 5இன்ச்  தொடுதிரையில்  சாராவை அழைக்க தொடங்கினான் :)
Romantic mood startrd !

யார் டேவிட் ?
http://last3rooms.blogspot.in/2013/07/blog-post_14.html

Sunday, August 25, 2013

கூரைய பிச்சிகிட்டு ...


          பொழுது சாய்ந்த நேரம் மதி அறக்க பறக்க ஓடி வந்தான் ,கொலையை கண்டவனைப்போல் தலைதெறிக்க உள்ளே நுழைந்தவன்,அறையினுள் நுழையும்போதே படியில் கால் இடறி சமாளித்து மேலேறினான், ரவியை கண்டதும் சற்று நிதானமாகி ரவியிடம் அந்த விஷயத்தை கூறினான் , கூறும் போதே அவசரத்தில் உளறினான் மதி. அவசரம்,பயம்,வெறி என கலந்த மனநிலையில் கூறினான்.இதுவரை அமைதியாய் இருந்தவன், மதி கூறியதை கேட்டதும் பயந்து போனான் முகமெல்லாம் அதிர்ச்சியில் வெளுத்து வேர்த்துபோயிருந்தது  ரவிக்கு ,தீவிரமானான் என்ன செய்வதென்று சிந்திக்க தொடங்கினான் பத்து விரல்களிலும் உள்ள நகங்கள் அனைத்தும் கடித்து துப்பப்பட்டன ,நிரப்பி வைத்த 1 லிட்டர் தண்ணீரும் காலியானது,100கவிதைகள் எழுதும் அளவு யோசித்திவன் போல் அமர்ந்திருந்தான் அமைதியாய்,வெற்று சுவற்றை வெறித்து பார்த்தவாறு .மதியும் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி புகைத்துகொண்டிருந்தான் .
 
 திடீரென்று ரவியின் முகம் பிரகாசமானது குண்டுபுல்ப்பு போல முகமலர்ச்சியோடு சிரித்தான் மதியை கண்டு, இருவரும் கலந்தாலோசித்து அவரவர் கைபேசியில் சேமித்து இருந்த எண்களையெல்லாம் வரிசையாக அழைக்க ஆரம்பித்தனர்,ரவி அவன் கைபேசியில் மேலிருந்து கீழும்,மதி கீழிருந்து மேலும் தொடங்கினர் .ஒவ்வொரு அழைப்பை தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் பேசிய சில நொடிகளில் முகம் வாடிவதங்க தொடங்கும்,தொடர்ந்து தொர்புகொண்டு பேசினர் இடைவிடாமல் உயிர்நண்பன்,மச்சி,மாப்ள,நண்பன்டா என்று  சொன்னவனெல்லாம் தடம் தெரியாமல் போனார்கள்,ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் கோவமும்,ஏமாற்றமும், எரிச்சலும், வெறுப்பும்  மட்டும்தான் கிடைத்தது இருவருக்கும்.கூடவே ஒரு பாக்கெட் சிகரெட்டும் தீர்ந்து போனது மதிக்கு,கேட்பது பணம் என தெரிந்தால் பொனமும் தெறித்து ஓடாதா என்ன :)

கடைசியாக கைபேசியில் இருந்த தொகையும் காலியாகி போனது .எரிச்சலுடன் ரவி கைபேசியை தூக்கி வீசினான் எதிரில் தலையணை இருக்கும் தையிரியத்தில் ஆனால் சுவற்றில் அடித்த பந்து போல் தலையணையில் பட்டு தரையில் தாறுமாறாக பல்டி அடித்தது ரவியில் தொடுதிரை கைபேசி, சுதாரித்து எடுப்பதற்குள் கைபேசியில் ஒரு முனை தரையில் பலமாக பட்டு விரிசல் விட்டிருந்தது கடுப்பில் தலையில் அடித்து கொண்டவன் கைபேசியை எடுத்து வேலை செய்கிறதா என ஆராய தன் திரையை கோலம் போட்டு திறந்ததும் தானாக ஒரு எண் அழைக்கப்பட்டது அது சேமிக்கபடாத எண்,நம் பழைய பொத்தான்கள் உள்ள கைபேசி என்றால் டக்டக்டக் என அழுத்தி நிறுத்திவிடலாம் தொடுதிரைகள் திடீர் திடீரென தன்னிச்சையாக செயல்படுகிறது என்ன தொட்டபோதும் தேய்த்தபோதும் தவிற்க்க முடியாமல் அந்த எண் அழைக்கபட்டிருந்தது எதிர்முனையில் ஒருவர் மிகவும் கரகரப்பான குரலில்
ஹலோ என்றார் ஒரே இரைச்சலாய் இருந்தது அந்த எதிர்முனை, விமானம் பக்கத்தில் பறப்பதுபோலும்,காற்று பலமாக அடிப்பது போலும் இருந்தது ,ரவி விழிபிதுங்கி செயலற்று போனான்,எதிர்முனையில் இருந்து பல ஒலிகள் கேட்டது, சற்றும் எதிர் பாராமல் மதி அந்த கைபேசியை பிடுங்கி குரலை சற்று கோரமாக்கி கணீரென பேசதொடங்கினான்.

தெரிந்த நபரிடம் பேசுவதுபோல் யார் எவர் என்று கேட்காமல் இவ்வளவு நேரம் தெரிந்த நபர்களிடம் பேசியதை கட கடவென மூச்சி விடாமல் பேசிமுடித்தான் மனப்பாடமாய்
எதிர்முனை என்ன நினைத்ததென்று தெரியவில்லை அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது  ....

சோகமாய்  ரவியை பார்த்து நமக்குமட்டும்தானா இல்ல எல்லாருக்கும் இப்படிதான் நடக்குதா புரியல என்று புலம்பினான் எல்லாத்தையும்  மேல இருக்குறவன் பாத்துப்பான் என்றான் ரவி,தற்செயலாய் கைபேசியில் அந்த எண்ணை கண்டு அதிர்ச்சியானான் அதில் கண்பித்த எண் +0000000000000,இதை பார்த்து யார்தான் அதிர்ச்சியாக மாட்டார்கள், மதியும் அதிர்ச்சியானான் எப்படி இதுபோல் ஒரு எண் உபயோகத்தில் இருக்கிறது ,அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டது தான் இப்படி ஒரு தருணத்தில் சற்று நிம்மதியான செய்தியாக இருந்தது .

திடுதிடுவன கதவை யாரோ தட்டும் சத்தம்,இல்லை யாரோ கதவை உடைக்கும் சத்தம், கூடுதல் அதிர்ச்சியாய் கட கடவென நடந்தது அனைத்தும்
யோசிக்க விடாமல் தாக்குவதுபோல் இருந்தது இருவருக்கும் .

கதவை திறக்காமல் வெறிக்க பார்த்து கொண்டிருந்தனர் அதே நேரத்தில் அந்த மர்ம எண்ணிலிருந்தும் அழைப்பு வருகிறது ரவிக்கு ,ரவியில் விழி இரண்டும் சற்று நேரத்தில் கிழே விழுந்துவிடுவது போலிருந்தது ,சற்றும் எதிர்பாராமல் சத்தமும் அழைப்பும் ஒருசேர நின்று போனது ,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் .இருவரின் இதயதுடிப்பும் சத்தமாக கேட்டது இருவருக்கும்.

சற்று நேரத்தில் திரும்பவும் கதவை இடிக்கும் சத்தம் "டேய் கதவ தொரங்கடா " என்று குரலும் கேட்டது மிகவும் பரிச்சயமான குரல் மதி சுதாரித்தான் டேய் நம்ம ரகு டா என்று கதவை திறந்தான் , ரகு கையில் இரண்டு பெரிய பாட்டில்கள் வைத்திருந்தான் "நெப்போலியன் பைநெஸ்ட் பிராண்டி" என  பெயர் பொரித்திருந்தது மதி அதை வாரி அள்ளி கொஞ்சி பொறுமையாக அறையின் ஒரு மூலையில் போர்வை மேல் வைத்துவிட்டு ஓடிவந்து ரகுவை கட்டி அணைத்தான் மச்சான் நீ தெய்வம்டா என்றான் ,ரகுவும் சிரித்துகொண்டே என்ன மச்சி இதுக்குபோய் என நெளிந்தான் ரவி நடந்ததை ஏதோ கனவு போல் பார்த்துகொண்டிருந்தான்  .

கடந்த ஒரு மணி நேரமா ஒரு குவாட்டர் வாங்க ஒருத்தன் ஒருத்தனுக்கா கூப்ட்டு அசிங்கபட்டோம்,இந்த வருஷம் சுகந்திரதினமே வீனா போய்டுமேன்னு  பயந்துகிட்டு இருந்தோம் மச்சான் நீ தெய்வம் டா , என்ன மச்சான் திடீர்னு ரகுவிடம் கேட்க, ரகு வெக்கபட்டுகொண்டே அவ ஒத்துகிட்டா மச்சான் என்றான் ,மதி ,ரவி இருவரும் ரகுவை வாழ்த்திவிட்டு சற்று நேரத்தில் ஒரு நெப்போலியனை சிறப்பாக முடித்து மூவரும் காற்றில் மிதக்க ஆரம்பித்தனர் .

ரவி கண்ணை சுருக்கி கொண்டே இமைகளை விரித்தான் சூரிய ஒலி சன்னல் வழியாக சுகந்திரமாய் கண்களில் அடித்தது பொறுமையாக எழுந்து கைபேசியை தேடினான் அது மதியின் வயிற்றிற்கு அடியில் இருந்தது அவனை உருட்டி கைபேசியை எடுத்து தொடுதிரையில் கோலம் போட்டு நேரத்தை பார்த்தான் சரியாக பத்து மணி ரகுவை காணவில்லை சரி கலையிலே  எழுந்து சென்றிருப்பான் என்று மத்த வேலைகளை பார்த்துவிட்டு பக்கத்து டீ கடைக்கு நடந்தான் ,ரவிக்கு புகைக்கும் பழக்கம் இல்லை அதனால் டீ அடித்துவிட்டு மதிக்கு ஒரு சிகரெட் வாங்கி வைத்துகொண்டு பத்து  ரூபாய் கைபேசிக்கு கொஞ்சம் சோறு போட்டுகொண்டு அரைக்கு வந்தான் ,மதியை காலால் எத்தி எழுப்பி விட்டு சிகரெட்டை அவன் மூஞ்ஜியில் எறிந்தான்  மூகினருகே விழுந்த இரு புகையிலை துகள்கள்  தும்மலை வரவழைத்தது எழுந்ததும் ரவியை அசிங்கமாய் கேட்டான் ,பின் சிகரெட்டுடன்  காலைகடனை முடித்தான்,
 ஏதோ யோசித்தவனாய் வந்து ரவியிடம் டேய் ரகுவுக்கு கால் பண்ணு என்றதும் ரவி கைபேசியை எடுத்து தடவ ஆரம்பித்தான் மணி அடித்து கொண்டே இருந்தது துண்டித்து விடலாம் என என்னும்போது ஹெலோ என்றான் ரகு ,டேய்  எப்படா கெளம்புன என்றான்,ரகு கூறியதை கேட்டு ரவி அதிர்ச்சியில் உறைந்து போனான் அழைப்பை துண்டித்துவிட்டு பேய் பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் ,மதி அசிங்கமாய் திட்டி கூப்பிட்டதும் தான் திரும்பினான் .

என்னடா சொன்னான் ரகு என்னாச்சு உனக்கு சொல்லிதொலை

இல்ல மச்சான் ரகு ஊருக்கு போய் நாலு நாள் ஆச்சாம்,சொந்த ஊர்ல இருக்கானாம்,அவன் ஆள பாத்து ரெண்டு வாரம் ஆகுதாம், இன்னும் அவ ஒத்துக்கல !

மதியும் அதிர்ச்சியில், அப்போ நேத்து வந்தது யாரு டா ?

பேசிகொண்டிருக்கும்போதே மறுபடியும் அந்த மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வந்தது ,ரவி பயந்து போனான் மதியிடம் கொடுத்துவிட்டான் கைபேசியை

மதியும் அந்த தொடுதிரையில் கை நடுங்கியவாறே தடவி காதில் வைத்தான் எதிர்முனையில் அதே சத்தம் இறைச்சல் கூடவே அந்த குரலும்

"நீங்கதான மேல இருக்குறவன் பாத்துக்குவான்னு சொன்னீங்க அதான் பாத்துகிட்டேன்" என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

திரும்ப அழைத்தபோது தவறான எண் என்று ஒரு பெண்ணின் குரல் .

அரையெங்கும் அமைதி !
டேய் ரவி அந்த இன்னொரு பாட்டில எடு !

Sunday, August 11, 2013

சொன்னா நம்பமாட்டீங்க !


             வீட்டுக்கு போயி 15 நாள் ஆச்சு , மனசு ரொம்ப பாரமா இருந்தது ,ரோட்டுல எல்லாரும் வேகவேகமாய் வீட்டுக்கு போறாங்க, மேகம் பூரா பக்கத்து வீட்டு குட்டி பாப்பா சுவத்துல கரிய வச்சி கிறுக்குனதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாய் கரு மேகமா ஆங்காங்கே இருட்டினதுபோல் இருந்தது ,மழை வர்ற மாதிரியும் வராத மாதிரியும் ,காத்து பலமா அடிச்சது கண்டிப்பா எதிர் வீட்டு தம்பிதத்தா மழைக்காக காத்திருப்பார்,நீண்ட நாள் கோடை வெயிலுக்கு நடுவுல இதுபோல் மழை வந்தா நல்லா இருக்கும்ன்னு அடிக்கடி சொல்லுவார்.

அதிலும் இந்த வருசம் வெயில் கண்டிப்பா சரித்திரத்தில இடம் புடிச்சிருக்கும், நம்ம கருப்பு கோயில் கம்மாவே காஞ்சு போச்சு,தொண்ணூறு வருசமா கருப்பு கோயில் கம்மால தண்ணி வத்துனதே இல்லன்னும் தனக்கு நெனவு தெரிஞ்சு கம்மால தண்ணி இல்லாம பாத்ததே இல்லன்னு பொலம்பிட்டே இருப்பாரு தத்தா.

போன வாரம் கூட கம்மாகரையில கருப்பு கோயில்ல படையல் போட்டாங்க மழைக்காக,அன்னிக்கே தம்பிதாத்தா சொன்னார் கருப்புகிட்ட சொல்லியாச்சி மழை கண்டிப்பா வந்திரும்ன்னு ,ஊரு சனங்க கடமைக்காதான் இந்த படயலயே போட்டுச்சுங்க,ஆனாலும்  தம்பி தாத்தா சொன்னதுல எனக்கு முழு நம்பிக்கை இருந்தது , அதனாலையோ என்னவோ இன்னக்கி மேகம் கறுத்துகிட்டு  வர்ரத பாத்த உடனே கருப்பு கோயிலுக்கு போகனும்ன்னு தோனுச்சு எனக்கு,நம்ம ஊரு கருப்பு ரொம்ப சக்தி உள்ளதுன்னு தம்பிதாத்தா அடிக்கடி சொல்லுவார்,நானும் இன்னக்கி கருப்புகிட்ட போய் என் கஸ்டத்த யெல்லாம் சொல்ல போறேன் .

ஆனா நான் அங்க போறது மணிக்கு சுத்தமா புடிக்கல ஒரு 10 நாளாதான் அவன எனக்கு தெரியும் ஆனா வேற நண்பர்கள் இல்லாததால மணி என்ட்ட சீக்கிரமே பழகிட்டான் ,மணி ரொம்ப நல்லவன் ஆனா அவனுக்கு சாமியே புடிக்காது ஏன்னு கேட்டா பதில் பேசாம கம்மாவயே பாத்துகிட்டு இருப்பான்.நானும் அடிக்கடி சொல்லுவேன் கருப்பு சாமி சக்தயுள்ளது டா நாம மனசார வேண்டுணா நடக்கும்டான்னு.அவன் உடனே கடுப்பா எந்துருச்சு போயிருவான்.அவனுக்கு ஏதோ சோகம்ன்னு நானும் கண்டுக்காம வுட்டுடுவேன் .

அந்தன்னைக்கும் நான் எங்க தெரு முக்குல போய் நின்னுகிட்டு எங்கூட்டயே பாத்துகிட்டு நின்னேன் யாருக்கும் தெரியாம, ஆனா என் செல்ல அப்புகுட்டி என்ன பாத்துட்டு ஒரே அடம் பண்ணிருச்சு,உடனே யாருக்கும் தெரிஞ்சுரும்ன்னு திரும்பி வந்துட்டேன் .எங்க அப்புச்சு மட்டும் சொன்னாரு வேணாம் கண்ணு அங்க போவாதன்னு என் மனசுதான் கேக்கல.இனி அந்த ஊட்டு பக்கம் போவக்கூடாதுன்னு தோணும் ஆனா ஆத்தாவ பாக்க ஒரு எட்டு போய்ட்டு வர கால் பற பறக்கும்,நானும் மனச  படுத்திக்கிடுவேன் .ஆனா இன்னக்கி ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் வேற வழியே இல்ல தம்பி தாத்தா சொன்னது மாதிரி கருப்பு சக்தியுள்ளதுதான் இன்னக்கி மழ வர போகுது ,நானும் போய் மனசார என் கஸ்டத்த சொல்ல போறேன்.    

விறுவிறுன்னு கருப்புகோயில் பக்கம் நடக்க ஆரம்பிச்சிட்டேன்,கருப்பு கோயில் பூசாரிய நெனைச்சா தான் பீதியா இருக்கு,ஆமா அங்க இருக்குற கருப்பு சாமிய விட அந்த பூசாரி  பயங்கரமா இருப்பான்,கரகரன்னு கொரலு ,பெரிய மீசை மூஞ்ச மறைக்கும் , நீலதலைமயிர முடிஞ்சி வச்சிருப்பான்,இடுப்புல எப்போதும் துண்டு அத்தோட ஒரு கட்டு பீடியையும் மறைச்சு வச்சிருப்பான் மேலாக்க பாத்தா தெரியாத மாதிரி, பொங்கலுக்கு வெள்ளையடிச்சது போல நெத்தி  முழுக்க கருப்புசாம்ப பூசிருப்பான்,சத்தமா சிரிப்பான் அப்படி சிரிச்சா கம்மாய்க்கு அந்தபக்கம்  இருந்து பாத்தாலும் பளீர்ன்னு தெரியும் அவன் பல்லு பளிச்சின்னு,கட்டுமஸ்தான ஆளு வந்தாலும் பூசாரிய பாத்தா கலங்கி போயிருவாக வர்ரவுக, கோயிலுக்கு வர்ரவுக கருப்புக்கு படைக்க வாங்கிட்டு வர்ர பட்ட சாரயமெல்லாம் அந்தண்ணகி ராவுல பூசாரி  குடிச்சிருவான் ,காலைல ஊரு சனமெல்லாம் கருப்பே குடிச்சிட்டதா  பக்த்தில உருகுவாக .பல நேரம் பூசாரிக்கு மிலிட்ரி சாராயம் வெள்ளகார சாரயமெல்லாம் கெடைக்கும் ,ஒண்டியா ஒக்காந்து ஒரே ராவுல குடிச்சிபுடுவான்.புள்ள இல்லாத குர மட்டும்தான் அவனுக்கு ,கண்ணுமண்ணு தெரியாம சாரயத்த குடிக்கிறதும் அதனாலதான் .

அந்தண்ணகி பொழுதுக்கு அப்புறம் மணி ஊட்டு ஆளுங்க எல்லாம் கும்பலா வந்து கருப்பு கிட்ட படச்சி கருப்பு சாம்பலும் முடிகயிறும் வாங்கிட்டு போனாக அதுக்கு பொறவு மணி என் கூடெல்லாம் முன்னமாதிரி பேசறது இல்ல .எப்போ பாத்தாலும்  கருப்பு கோயில் கம்மாலே உக்காந்திருப்பான் ,தம்பிதாத்தாட்ட எங்க அப்புச்சிட்ட யார்ட்டயும் பேச மாட்றான் .கருப்பு கோயிலுக்கு போறப்ப அவனுக்கும் சேத்து வேண்டனும் .

பூசாரிய பாத்து பீதி பயம் இருந்தாலும் இன்னக்கி நான் அங்க போயே ஆகணும் என் பிரச்சனைக்கி ஒரு தீர்வு வேணும்,கருப்பு கோயில நெருங்கிட்டேன் ,பூச நடந்துகிட்டு இருக்கு என் பயம் அதிகாமாகுது பூசாரி என்னையே பாக்குறான்,கோயில நெருங்க நெருங்க வேர்த்து கொட்டுது,சுரம் வந்தது மாதிரி உடம்பெல்ல்லாம் சுடுது பயத்துல.

பூசாரி வேற என்னயவே குறு குறுன்னு பாக்குறாரன், கருப்பு சாமிய பாத்து பூசாரி ஏதோ மொனவுரார் அப்புறம் என்ன நேனைசான்னு  தெரில,என்னைய பாவமா பாத்துபுட்டு அந்த எடத்த விட்டு போய்டான் ,அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு  ,அந்தன்னைக்கி ராவு முழுக்க எனக்கு தூக்கமே வரல கருப்புகிட்ட என் கஸ்டத்த எல்லாம் சொல்லி ஒரு மணி அழுதேன் அப்புறம்தான் லேசானதுபோல இருந்தது .இப்பவும் ஆத்தா நெனப்பாவே இருக்கு அதுக்கு வேற உடம்பு சரியில்ல எப்போ பாத்தாலும் லொக்கு லொக்குனு இருமிகிட்டே கெடக்கு ,ம்ம்ம் எல்லாம் அந்த கருப்புக்குதான் வெளிச்சம் .
வீட்டுக்கு போவனும் போல இருக்கு ,பயமாவும் இருக்கு ,எங்கூட்ட வுட்டு இத்தன நாள் நான் வெளில இருந்ததே இல்ல ஆனா இன்னக்கி ரொம்ப நம்பிக்கையா இருக்கு கருப்புகிட்ட சொன்னதும் மணியும் சொன்னான் காலைல கவலை படாத டா உன்கூட்ட்ல உள்ளவங்க உன்ன கூப்டு போவாங்கன்னு,தம்பிதாத்தாவும் சொல்லிருக்கார் கருப்புகிட்ட சொல்லிட்டா நீ நெனைச்சது நடக்கும்ன்னு ,காலைல இருந்து சந்தோசமா இருக்கேன், யாரோ கூப்ட்ட சத்தம் கேட்டு முழிச்சேன், பொழுது சாஞ்சு போச்சு, தூரத்துல இருந்து அந்த சத்தம் கேக்குது எங்கூட்டுபக்கமாதான் சத்தம் வருது ,

வழி நெடுக வெளிச்சமா இருக்கு எந்திருச்சு நடக்குறேன் ஊட்டுபக்கமா ,எங்க மாமா,அத்த,ஆச்சி எல்லாரும்  வந்திருக்காக ,என்னதான் கூபுடுதுக ,மனசுக்குள்ளயே கருப்பு சாமிக்கு நன்றி சொல்லியாச்சு ,மணி தம்பிதாத்தா எல்லார் வாயிலயும் சக்கர போடணும் ,இவ்ளோ சந்தோசமா என் வாழ்க்கைல இருந்ததே இல்ல.பக்கத்தூட்டு குட்டி பாப்பா ,என் செல்ல அப்புகுட்டியும் தெருவுல வந்து நின்னுகிட்டு அடம் பண்ணிட்டு இருக்கு யாரோ சங்கிலியே அவுத்துடாங்கன்னு நெனைக்கிறேன், என்கூட சண்ட போட்டு திரிஞ்ச ரவி பயகூட வந்திருக்கான் ,
இத்தன நாள் கழிச்சி ஊட்டுக்குள்ள போறது அப்பா ! தனி சுகம்தான் ,  சொன்னா நம்பமாட்டீங்க ஆலம் எடுத்து என்னய உள்ள கூட்டியாந்து உக்கார வச்சி சோறு போடுறாங்க எல்லாமே எனக்கு புடிச்ச பண்டமா இருக்கு கோழி,நண்டு,ரொம்ப புடிச்ச ராலு
முட்ட ,அவ்வளவும் ஒண்ணா இருந்தாலும் தனி தனியா மணக்குது ,
அய்யோ! ஆத்தா வச்ச வடையும் பாயசமும் இருக்கு ,எனக்காக ஆத்தா பாயசத்துல காஞ்சதிராச்ச நிறைய போடும்,
எங்காத்தா சமாச்சா வாசல்ல கட்டிஇருக்கும்அப்புக்கு நீர் வடியும் ,அம்புட்டு வாசமா கொழம்பு வைக்கும்.  எல்லாத்தையும் சாப்புடனும் இல்லனா ஆத்தா வையும் .

முடிஞ்ச அளவு தின்னுட்டேன், அவ்ளோதான் முடில, ஆத்தா வையபோது ஏன் எல்லாரும் என்னையவே பாக்குறாங்க யாருமே சாப்புடல,  பின்னாடி எதையோ பாத்து எங்காத்தா அழுவுது ஆச்சி சமாதான படுத்துது என்னனு தெரிலயே  ,அப்படி என்னதான் இருக்கு பின்னாடி என்ன இது என் போட்டால யாரோ போட்டு வச்சிருக்காங்க ,இந்த ரவி பயலாதான் இருப்பான் என்ட்ட சண்ட வளக்குறதே அவனுக்கு வெள்ளையா போச்சு ,என்ன சத்தம் அது , கொல்ல பக்கமா யாரோ கூப்டுறாங்க,

தம்பிதாத்தா குரல் கேக்குது ..

வரேன் இரு தாத்தா ,இவரு ஏன் கொல்லபக்கம்  வந்து நிக்கிறாரு ,

என்னதாத்தா சொல்லுங்க

வாப்பா போகலாம் !

எங்க போகணும் 15 நாள் கழிச்சி இன்னகிதான் எங்கூட்ல என்ன கூப்டாக
இன்னகிதான் நானும் சந்தோசமா இருக்கேன் இப்ப என்ன எங்க வர சொல்லுற தாத்தா  , என்னால வர முடியாது ஆத்தா வந்து சொல்லு ஆத்தா
ஆச்சி நீயாச்சும் சொல்லு..

நா பேசுறத யாருமே கவனிக்கல வாசபக்கமா கருப்பு கோயில் பூசாரி வந்தான் ஆச்சிதான் போய் என்னான்னு கேக்குது

அந்த கரகர கொரலு எனக்கும் கேக்குது , ஆச்சி, புள்ள பாவம் ஒரே ஏக்கமா இருக்கு போல நேத்து பொழுதுக்கு முன்னாடி கருப்பு கோயில் பக்கம் பாத்தேன், புள்ளைக்கி புடிச்சதா சமச்சி வச்சி படைங்க,பொழுதுக்கு அப்புறம் கோயிலுக்கு வாங்க ஒரு பூச பண்ணி கொடுக்குறேன் ஊட்ட சுத்தி கருப்பு சாம்பல போட்டு வைங்க ,சின்ன புள்ள அது என்ன தெரியும் அதுக்கு ,யாரும் பயப்படாதீங்க நம்ம ஊட்டு புள்ள அது நமக்கு ஒன்னும் செஞ்சுராது ,நா கெளம்புறேன் ஆச்சி, இப்பவும் புள்ள உங்க கூடத்தான்  இருக்கு ,சந்தோசமா இருக்கு சொல்லுரப்பவே பூசாரி கண்ணு ரெண்டும் விரிஞ்சு பரவசமா சொல்லுறான்,ஆச்சிக்கு கண்ணு ரொம்பி வழிய ஆரம்பிச்சிருச்சு ,இண்ணமும் புள்ளைக்கு புரிஞ்சுருக்காது ரயிலு வண்டில அடிபட்டுடோம்ன்னு , ரெண்டு மூணு வாரத்துல எல்லாம் தெரிஞ்சிரும்  நமகெல்லாம் தெய்வமா இருந்து வழிநடத்தும் நம்ம புள்ள !

ஆச்சி என்ன பேசரதுன்னு தெரியாம அழுவ ஆரம்பிச்சிருச்சு ஊட்ல இருந்த எல்லாரும் அழுவ ஆரம்பிசிடாக !

அத கேக்கும்போதே தம்பிதாத்தா என் தோள்ள கைவச்சி இழுக்குறார்,கண்ணுமுழுக்க தண்ணி கோத்து நிக்கிது  என்ன பேசறதுன்னு தெரியாம அவர் பின்னாலயே போறேன் .

ரோட்டுல தம்பட்ட அடிக்கிறவன் சொன்ன விஷயம் எனக்கு கேட்க்குது
 டம் டம் டம் டம் .........."ஊர் சனங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறது என்னன்னா இன்னக்கி ராவுல முருகாத்தா பேரன் மகேசுக்கு  பதினாறு படைக்கிறாங்க எல்லா தலகட்டும் வந்து கலந்துக்கணும்னு கேட்டுகிறாங்க" டம் டம் டம் டம் ..........

 அத கேட்டதும் மீனாச்சி அக்காவும் அவுங்க ஊட்டுகாரரும் என்னைய பத்தி பேசிக்கிறாங்க "பாவம் அந்த பய துரு துருன்னு இங்கயும் அங்கயும் சுத்திகிட்டு இருப்பான் அவனுக்கு எழுதிவச்சது அவ்ளோதான் போல, அடுத்தவாரம் நம்ம கீழதெரு மணிக்கும் பதினாறு படைப்பாங்க மச்சான் ,இவ்ளோ சின்னதுலேயே போவனும்ன்னு இருக்கு பாரு "

கம்மா பக்கமா போற முனுசும் அவன் கூட்டாளியும் என் பேர சொல்லி பேசிக்கிறாங்க
 "டேய் முனுசு பூசாரி சொன்னான் டா, நம்ம மகேசு பயலும் மணி பயலும் கம்மா பக்கம் திரியிறாங்கன்னு,நீ வாங்குன சாரயத்த வேணுன்னா எங்கூட்ல வச்சி கூட குடிச்சிக்கலாம் டா கம்மா பக்கம் வேணாம் டா,
டேய் முட்டா பயலே அவன் சொன்னனாம் இவரு பம்முராராம் மூடிட்டு வாடா எல்லாம் தெரியும் ,தம்பிஅய்யா  போனப்பவும் அப்படிதான் சொன்னான் அந்த பூசாரி அதெல்லாம் சும்மா கெளப்பி விடுறாண்டா அவுனுக்கு சாரயத்துக்கு வழி பண்ணிக்கிறான் அவ்ளோதான்"

அந்த டம் டம் டம் டம் சத்தம் என் மண்டைக்குள்ள அடிக்கிறமாதிரி இருக்கு,எனக்கு இப்ப ஒடம்பு இல்ல ஆனாலும் எல்லாம் இருக்குற மாதிரியே இருக்கு.

ஆனா இப்போ மனசு பாரமா இல்ல ,திருப்தியா இருக்கு கூடவே கொஞ்சம் ஏக்கமும் .....

நா இனிமே எங்கூட்டுக்கு போக மாட்டேன் !
Sunday, July 28, 2013

செருப்படி வாங்குவ !

ஹரி சற்றும் எதிர்பாராமல் ஒரு அரை சுஜாவிடமிருந்து,நட்டநடு பார்க்கில் அமைதியான அந்த இடத்தில இந்த சத்தம் அங்கே தொப்பையை குறைக்க ஓடும் அங்கில்களும் நடக்கும் ஆண்ட்டிகளும் மறைவில் அமர்ந்து காதலிக்கும் ஜோடிகளும் பள்ளியை கட்டடித்து கதையடிக்கும் மாணவர்களும் பேரனை விளையாட அழைத்துவந்து இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் பணிஓய்வு பெற்ற தாத்தா என அனைவரும் ஹரியை பார்த்துகொண்டிருந்தனர் . மவுண்ட் ரோடு சிக்னலில் ஜட்டி கூட இல்லாமல் நிற்பதுபோல் இருந்தது ஹரிக்கு .எதையும் கண்டுகொள்ளாமல் விறு விறுவென பார்க்கின் கேட்டை தாண்டியிருந்தாள் சுஜா .பள்ளிகளின் ஒரு நிமிட மௌன அஞ்சலி போல் அந்த ஒரு நிமிடம் ஹரி தன்னிடம்  பொறுமை,வெட்கம்,மானம்,சூடு,சொரணை இவையெல்லாம் இருப்பதாய் உணர்ந்தான்,தலை குனிந்தபடி வேக வேகமாய் நடந்தாலும் பார்க்கை கடக்க ஒரு ஜென்மம் ஆனது ஹரிக்கு .

இதோடு ஆறு மாதமாக சுஜாவை பின்தொடர்ந்து அவள் போகுமிடமெல்லாம் சென்று  கடிதம் கொடுப்பது,ஜொள் வடிப்பது,செய்கைகளை தூர நின்று ரசிப்பது,கவிதை எழுதுவது,அருகே செல்லாமல் எப்படியெல்லாம் காதல்  செய்வதென்று ஹரிக்கு நன்றாக தெரியும்,சரியாக அவள் நேரத்திற்கு முன்பாகவே பேருந்துநிறுத்தம் வந்தடைந்து அவள் ஏறும் பேருந்தில் ஏறி அவள் இருங்குமிடம் வரை சென்று வழி அனுப்பிவைத்து அரைக்கு திரும்புவான் ,அன்றிரவு அவள் வீட்டை கடக்கும்போதுதான் அவள் பெயர் சுஜா என கண்டுபிடித்தான்,அவள் வீட்டை சுற்றி லோக்கல் கைகள் அதிகம்அவைகளை கடக்கும்போதெல்லாம் ஹரியின் இதயத்துடிப்பு அதிகமாகும், ஹரியின் மிக பெரிய சாதனை முதல் நாளே  அவள் வீட்டை கண்டுபிடித்ததுதான்,அவளின் இதழோர சிரிப்பில் மயங்கி கண்களில் காதலை கண்டான், ஹரியின் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அவளை கண்டதிலிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது.

கல்லூரியை கனவுகளில் மட்டுமே காண முடிந்தது,ஏனெனில் கடைசி பருவ தேர்வின் கடைசி தேர்வு முடிந்து தனது முதல் வருட மிச்ச சொச்சங்களை முடிக்க அரையில் தான் மட்டும் படிக்க முடியாமல் (மூடில்லாமல்) தூங்கி கழித்திருந்தான் நேரத்தை,இப்போதெல்லாம் பெண்களின் மேல் நாட்டம் கொண்டிருந்தான் ஹரி ,நாட்டம் அதிகமாக தொடங்கிய நேரம் முக்கிய பொழுது போக்காக பேருந்து நிறுத்தத்தில் போய் ஒரு மணி நேரம் போல் சைட் அடிப்பது வழக்கப்படுத்தி கொண்டிருந்தான், கடைசி பருவ தேர்வு ஆரம்பித்ததிலிருந்தே ஹரிக்கு பீதியும் ஆரம்பித்திருந்தது,இந்த தேர்விற்காக தன் நண்பர்கள் சென்ற சுற்றுலாவிற்கு கூட செல்லவில்லை ,தன் நண்பர்களுடன் சேர்ந்து கடைசியாக பரிசோதனை தேர்வை முடித்து வகுப்பின் அனைத்து ஆண்மக்களும் ஒன்றுகூடி தண்ணி அடித்ததுதான் கல்லூரியின் கடைசி சந்தோசமான நாளாக கருதினான்.இந்தமுறையும் வீட்டில் தன் பாடங்களில் மிச்ச சொச்சம்மாக 21 பேப்பர் இருப்பதை மறைத்து ஹால்டிக்கெட் வாங்க வழக்கம்போல் 4 பேப்பர் என்று பொய் சொல்லிதான் பணம் வாங்கினான் ஹரி .

கல்லூரியின் கடைசி பருவம் தொடங்கியிருந்தது அன்று தனது விடுதி நண்பர்களுடன் தண்ணி அடித்து அனைவரும் பொலம்பி ஓலம்பிகொண்டிருந்தனர் மிகவும் சூடாக பேசி முடித்த பிறகு கடைசியாக "மூன்றரை  வருஷம் எப்டி போச்சுன்னே தெரில மச்சி "என ஹரி கேக்க டேய் வெண்ண போன வருஷமும் இததான டா சொன்ன என்று ஹரியின் வாயை மூடினான் நண்பனொருவன் .எல்லா பழக்கத்தையும் தெரிந்து கொண்டு விட்டுவிடத்தான் திட்டம் ஆனால் அவனையறியாமல் அதனுள் மூழ்கிபோயிருந்தான் ஹரி , எல்லாவற்றிற்கும் காரணம் தன் மிச்ச சொச்சம் தான் என நண்பர்களிடம் அடிக்கடி பொலம்புவான் ஹரி , "மிச்ச சொச்சம்" கல்லூரியின் முதல் பருவ தேர்விலிருந்தே ஹரியை தொரத்தி தொரத்தி கடித்துகொண்டிருக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத மிருகம் ஏன் எதனால் எதற்கு என கண்டறிய முடியாத தாக்குதல்கள் அனைத்தும் .பயம்தான் ஹரிக்கு கல்லூரி தொடங்கிய நாட்களிலிருந்தே தன் புத்தகங்களை பார்த்து,பள்ளியில் இருந்தது போலவே.

அவ்வளவு சிறந்த படிப்பாளியெல்லாம்  இல்லை ஹரி பள்ளியிலும் ,தப்பி தவறி கும்பலோடு கும்பலாக தேர்ச்சி பெற்று வந்தவன்தான் ,ஒவ்வொரு பொதுதேர்வும் ஒவ்வொரு உலகப்போர்தான் யாரோ ஒரு நல்ல தேரோட்டி கிடைத்ததால்தான்  தேர்ச்சிபெற்றான் ஹரி பன்னிரெண்டிலும் பத்திலும் தேர்ச்சிபெற்றது அனைத்துமே ஒரு கனவுதான்,படிப்பின் மேல்தான் ஆர்வம் இல்லையென்றால் எதன் மீதும் ஆர்வம் இல்லாமலிருந்தான் ,ஒரு பெண்ணை சும்மா கூட பார்க்க மாட்டான் ,தேவை இருந்தால் மட்டும் தேவையானதை மட்டும் பேசுவான், செய்வதெல்லாம் பெண்களுக்கு தான் தீங்கிழைப்பதாய் நினைப்பான்,ஒரு முறை ஹரியின் வகுப்பறையில் ஹரியின் நண்பனொருவன் அந்த முன் பெஞ்ச்சு கமலாவை காதலிப்பதாக கூறியதும் பைத்தியக்காரன்போல் உடனே அந்த பெண்ணிடம் போட்டு கொடுத்துவிட்டான்,அந்த பெண் குமாரை நார் நாராய் கிழித்ததுதான் மிச்சம்.அது போதாதென்று அந்த பெண் வீட்டிலிருந்து வேறு வந்து கிழித்து விட்டனர் பள்ளியை ,இதனால் ஹரிக்கும் அவன் நண்பன் குமாருக்கும் பெரிய சண்டை எல்லாவற்றிற்கும் சேர்த்து பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தனர் இருவரையும் , கடைசியாக குமாரு ஹரியிடம் கூறிய வார்த்தைகளை ஹரி எப்போதும் மறந்தது இல்லை "சத்தியமா  சொல்றேன் உனக்கெல்லாம் வாழ்க்கைல லவ்வே வராது அப்படியே வந்தாலும் அவ கையாள செருப்படிதான் வாங்குவ" 
இந்த வார்த்தைகளை ஹரி மறந்ததே இல்லை எப்போதும்.

Sunday, July 21, 2013

ண்ணா ..கிங்க்ஸ் ஒன்னு கொடுங்க !

விடியற்காலை ஆன்ட்ராய்டை தடவியவாறே மணியை பார்க்கின்றான் ராம்,பிறகுதான் தெரிகிறது அது விடியற்காலை இல்லை விடிந்தகாலை என்று,
அப்போதும் எந்த ஒரு பரபரப்பும் இன்றி எழுந்து பேஸ்புக்,ட்விட்டர் எல்லாவற்றிலும் ஒரு அரைமணி வேடிக்கை பார்த்து ஒரு காலை வணக்கம் ஸ்டாடஸ் போட்ட பிறகு மற்ற வேலைகளை செய்ய தொடங்கினான் .

தம் அடித்தல்-காலை கடன் முடித்தல்-பல்விலக்குதல்-குளித்தல்-சாப்பிடுதல் போன்ற மிகவும் கடுமையான வேலைகளை தவிர வேறு எந்த வேலையும் இல்லை ராமிற்கு ,எழுந்ததும் ஸ்மார்ட்போனில் செய்ததை இப்போது கணினியில் தொடர்ந்தான் இன்னொரு தம்முடன் இது காலை உணவிற்காக !

கூடவே வேலை தேடுகிறேன் என்று நாக்குரி,மான்ஸ்டர் போன்ற வலைத்தளத்தில் இருந்த வரும் மெயில்கலை சரிபார்த்து முடித்தான் மதியமாயிற்று ,இப்போது எழுந்திருப்பது மதிய உணவிற்கு அருகிலுள்ள சிற்றுண்டியில் கிடைக்கும் புளியோதரை அல்லது தயிர் சாதத்தை ஒரு ரெண்டு கட்ட்டி அறைக்கு வந்து தின்றுவிட்டு தம்மடித்ததும் திரும்பவும் ஒரு தூக்கம் .

மாலை எழுந்து புத்துனற்சியுடன் ஒரு டீ தம் அக்கவுண்டில் முடித்தவுடன் அப்படியே அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் ஒரு மணி நேரம் கழிப்பான் 

திவ்யாவிர்காக ...(அது வேறு கதை பின்னாடி சொல்லுறேன்),அதை முடித்து மீண்டும் அறையில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பான் ,அப்போது ஒரு 2 தம் போகும் 2மணியில் ,திரும்பவும் உணவிற்கு முன் பின் என தவறாமல் ஒரு தம், உண்டபிறகு கணினியில் ஒரு படம் தூங்குவதர்க்கு முன் ஒரு தம் ,இப்படியாக ஒரு நாளைக்கு 7 அல்லது 8 ஓடியிருக்கும் .

பின்னாடி...அதாங்க திவ்யா கதை  
கல்லூரியில் இருந்தே திவ்யாவை லவ்வுகிறான் ராம்,லவுன்னா  ஒரு லவ்வு அவ்ளோ லவ்வு(நீ சொன்னா இந்த பில்டிங் மேல இருந்து கூட குதிப்பேன் மச்சி ன்னு ஒரு படத்துல வருமே அதுபோல்),திவ்யாவும் செமையா இருப்பா(கல்லூரி பட தமண்ணா போல்), இவனை போய் லவ் பண்றாளான்னு எல்லாரும் ஷாக் ஆகி போனாங்க இந்த விஷயம் கல்லூரியில் தெரிஞ்சதும் .என்ன செய்ய குறு பகவான் ராமின் ரூமிற்கு பக்கத்தில் ரூம் போட்டு அவனுக்கு உதவுவது போல இருந்துது இருவரின் லவ் மேட்டர்.
இவனின் அணைத்து அசைமென்ட்,ரெகார்ட் மற்றும் எல்லா எழுத்து வேலைகளையும் முடிப்பது  திவ்யாதான் .வார இறுதின்னா ரெண்டுபேரும் மெரீனா கடற்கரையை நடந்தே அளப்பார்கள் ,மெரினாவில் தனியாக அல்லது பசங்களோட வந்த எல்லாரும் சொல்லுற இல்ல பேசிக்கிற ஒரே வசனம் இதுதான் "நச்சு கேர்ள்லுக்கு அட்டு பாய் தான் கெடைபான் போல"ன்னு . 

இதெல்லாம் காதுல விழுந்தாலும் எதுவும் நடக்காத மாதிரியே போவ்வாங்க இருவரும் பேசிகிட்டே ,ராமின் வீட்டிற்கு இது தெரிந்தாலும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் , திவ்யா,ராமின் குடும்பம் என அனைவரும் எதிர்நோக்குவது ராமின் வேலையைத்தான் .

திவ்யா படித்த கல்லுரியிலேயே பாடம் நடத்த கிளம்பிவிட்டாள் ,அதன்பிறகு ராமின் செலவுக்கும் வழி பிறந்து விட்டது ,
"எழுந்ததும் அடிக்கும்  தம்மிலிருந்து இரவு தூங்குவதற்கு முன் அடிக்கும் கடைசி தம் வரை " இப்போ திவ்யாவின் தயவில் .

ராமின் புகையை வன்மையாக கண்டித்த திவ்யாவிடம் எப்பொழுதும் கூறும் ஒரே பதில் "ஒரு வேலை கிடைக்கட்டும் சத்தியமா விட்டுர்றேன்" இப்போ கூட கம்மி பண்ணிட்டேன் திவ்யா உனக்காக "4லு தான் ஒரு நாளைக்கு" ,திவ்யாவும் வேறு வழியின்றி சில மணி நேரம் பேசிவிட்டு வீடிற்கு கிளம்பிடுவாள் .

ராமின் வீட்டிற்கும் புகைவிஷயம் தெரியும் அவர்களும் மறைமுகமாக சொல்வார்கள் அதற்க்கு நேரடியாக அதே பதிலை கூறி விட்டு சென்றிடுவான் !

ராம்  கிங்க்ஸ் ரசிகன் பணமில்லாதபோது காஜா பீடி கூட பிடிப்பான் ஆனால் கிங்க்ஸ் தான் மிகவும் பிடித்தது,மத்த பிராண்டுகளில் இல்லாத ஒரு சுகம் கிங்க்சில் இருப்பதாக நம்புவான்,கல்லூரி முதல்வருட  ஆரம்பித்த இந்த புகைநட்பு நாலு வருடம்  தொடர்ந்து 5ஆவது வறுடத்தை நோக்கி சென்றுகொண்டிருகிறது ,அதுவும் பரிச்சை நேரத்தில் கணக்கிலாமல் புகைப்பான், நைட்ஸ்டடியில்  தீவிரமாக படிப்பவனை போல் உக்காந்திருபான்,ஆனால் புகைப்பதர்க்கு நடிவில் கொஞ்சம் கொஞ்சம் படித்திருப்பான்,  ராம் அடிக்கடி புகைப்பதை  குறைப்பதுண்டு குறிப்பாக வெளியில் செல்லும்போது படி ஏற நேர்ந்தால் மூச்சிரைக்கும் போது ஒரு பயம் அவனை தொற்றிக்கொள்ளும் ஒரு வாரத்திற்கு மொத்த கணக்கில் 5% சதவீதம் குறைத்திடுவான்,அது போக படம் பார்க்க செல்லும்போது அங்கே ஒளிபரப்பும் முகேஷின் கதை அறவே பிடிக்காது ராமிற்கு,அதுவும் அந்த குரல் கர கரவென்று ராமை பயமுறுத்தும் (நான் தான் முகேஷ்.... ),அல்லது திவ்யா எப்போதாவது ரொம்ப திட்டிநாலோ இல்ல கவலை பட்டாலோ இந்த புகை குறைப்பு படலம் நடக்கும்.

படிப்பு முடிந்த பிறகு ராம் அதிகம் புகைப்பது வேலை இல்லையே என்ற சோகத்தில் தான்,புகைப்பவனுக்கு காரணமா சொல்லித்தரவேண்டும் தடுக்கி விழுந்தாலும்,டென்ஷன்ஆனாலும் ,சும்மா இருந்தாலும் ,வேலையாக இருந்தாலும் என ஏதாவது  காரணம் கிடைத்திடும். சிகரெட்,சுருட்டு,பீடி என எல்லா வகையான புகையையும் டேஸ்ட் பார்த்திடுவான் லோக்கல் கடையில் கிடைக்கும் பீடி(பணவீக்க நேரங்களில்),கிங்க்ஸ்(பஞ்சு வச்சதில் இது மட்டும்தான்,ப்லேவர்கள் தவிர்த்து),பெசன்ட் நகர் பீச்சில் கிடைக்கும் சாக்லேட் சுருட்டு(பெருசா லட்சுமி வெடி போல இருக்கும் ),ஆப்பில்,ஸ்ட்ராபெர்ரி இப்படி எண்ணற்ற சிகரெட் வகைகளை அடித்திருக்கிறான் .
இப்படியாக சென்ற ராமின் வாழ்க்கை திரும்புவர்க்கான நேரம் வந்தது .... 

அனைவரும் எதிர்பார்த்தது போல் ராமிற்கு ஒரு வேலை கிடைத்தது,
அதுவும் ஒரு பிரபல மென்பொருள் கம்பெனியில்,நல்ல வருமானத்துடன், மாதமாதம் வீட்டிற்கு அனுப்புவது இல்லாமல் கையில் ஒரு கனமான தொகை நின்றது ராமிற்கு,அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர் .

திவ்யாவிற்கு இன்னமும் கோபம் ராமிடம், முன்பைவிட இப்போது ராம் இன்னும் அதிகமாக தம்மடிக்க ஆரம்பித்துவிட்டான்,திவ்யாவை சந்திக்கும் போதெல்லாம் சண்டைதான் சாரி ஊடல்தான்(அப்டித்தான சொல்லுவாங்க ?)

கோபத்துடன் கவலையும் அதிகரித்தது திவ்யாவிற்கு , அதற்காக அவளின்  ஆயுதம்தான் "முகேஷ் விளம்பரம் "அந்த அருவருப்பான காட்சிகள் ராமிற்கு துளியும் பிடிக்காது ,அடிக்கடி படத்திற்கு அழைத்து செல்வாள்(நம்ம ஆள்தான் அவ சொன்னா பில்டிங் மேல இருந்து கூட குதிப்பானே ) திவ்யாவின் நோக்கமறிந்தும் அவன் மறுக்கவில்லைஅவளுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியும் ராமிர்க்கு சொர்கம்தான், ஒரு படம் விடாமல் இருவரும் பார்த்தார்கள் குறிப்பாக இடைவேளையின் போது ராமை அடித்து திட்டி துன்புறத்தி என்னனோவோ செய்து அந்த விளம்பரத்தை பார்க்கவைத்தாள் (ஆனா சோகம் என்னன்னா முகேஷ எங்களால காப்பாத்த முடியல),ஒரு கட்டத்தில் ராமிற்கு அருவருப்புடன் பயமும் சேர்ந்து புகைப்பதை வெறுக்க ஆரம்பித்தான் ஆனால் அதற்காக ராம் புகிப்பதை நிறுத்தவில்லை ,திவ்யாவிர்காக நிறுத்தினான் , அது  அவ்வளவு சுலபம் இல்லை ,ஒரு வாரம் கழித்து ஒன்று பிறகு ஒருமாதம் கழித்து ஒன்று திரும்ப எப்போதும்போல் 4,5 என சில நாட்களில் இப்படியே ஆறு மாதம் 7 மாதம் என கடைசியாய் அவனையறியாமலே புகைப்பதை  நிறுத்தியிருந்தான் .
எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வேகம்,சுறுசுறுப்பு தனக்குள் வந்ததாக கருதினான்,சோதித்து பார்க்க லிப்ட் இல்லாமல் நடந்தே போவான் ,இப்போது முன்பளவிற்கு இல்லன்னு மகிழ்ச்சியானான்.
அனைத்தும் நலம் பிறகென்ன திருமணம்தான் (இப்பவும் பக்கத்து ரூமில் குரு பாய் கால் மேல் கால் போட்டு உதவிகொண்டிருகிறது ராமிர்க்கு)
திவ்யா வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்  .

இனி புகையாது !

Sunday, July 14, 2013

டேவிட்டின் மர்மக்கொலைகள்

டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி .இவனெல்லாம் டிகிரி முடிபானென்று யாரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள் ,உண்மையில் டேவிட்ட்டை பொறுத்தவரை அது ஒரு கனவுதான் . வாரமுழுக்க படம் பார்ப்பதும் தூங்குவதுமாக இருப்பவன் வார இறுதியில் வேறு ஒருவனாக இருப்பான் (ஒரு படத்தில் ஆறு மணிக்கு மேல் வடிவேலு இருப்பாரே அது போல்),என்ன நடந்தது நடக்குது நடக்க போவது எதுவுமே தெரியாது இரண்டு நாட்களுக்கு ,எப்படியாவது ரெண்டு நாட்களுக்கான "பெட்ரோலை" உசார் பண்ணிருவான்  .

டேவிட் ஒரு ஆங்கில பட பைத்தியம் குறிப்பாக ஹார்ரர் படமென்றால் அவனுக்கு சோறு தண்ணி எதுவுமே வேண்டாம் ,அவன் வருடமுழுக்க பார்ப்பது saw  படத்தை திரும்ப திரும்ப பார்ப்பான் இல்லையெனில் final  destination  இவ்விரு படங்களின் அணைத்து பாகங்களும் அவனுக்கு மனப்பாடம் அவ்வளவு முறை பார்த்திருக்கிறான் .

அந்த இரு படங்களின் தாக்கத்தால் அவன் ரோட்டில் நடக்கும் போது பேருந்தில் பயணிக்கும் போது நண்பனுடன் வண்டியில் செல்லும்போது இப்படி அவன் பயணிக்கும் எல்லா நேரத்திலும் அதே சிந்தனையில் இருப்பான் 

யாரவது நன்றாக நடந்து செல்லும் போது அவரை கடக்கும் லாரி டயரில் அவர் சிக்கி அவர் தலை சிதறி கிடப்பது போல் ஒரு விஸ்வல் தோன்றும் ,வண்டியில் செல்லும் போது அவனையறியாமல் அருகில் செல்லும் லாரி அல்லது பேருந்து டயரை பார்த்தாலும் மண்டையில் படம் ஓடும் டேவிடுக்கு

சில நேரத்தில் யாரையாவது அதுபோல் கொள்ள வேண்டும் இல்லை கொள்வதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓடும் .

இது எண்ணத்தோடு முடிய வில்லை இதை அவன் நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் அவனை கலாய்த்தார்கள் "உன் மூஞ்சிய கிட்டகக்க பாத்தாலே ஆள் க்ளோஸ் மச்சி என்று"

ஆனால் டேவிட் கொஞ்சம் தீவிரமாகவே இருந்தான்,கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் ஆனால் தன்னை பாதித்துவிடகூடதென்பதில் தெளிவாக இருந்தான்.

அன்று அது நடந்தது ,
வழக்கம் போல், சனி இரவு செம டைட்டா இருந்த டேவிட் உருண்டு பொரண்டு அரைக்கு வந்தபோது நள்ளிரவு டேவிட்டின் சட்டை மேல் படுத்திருந்தான் அவன் டேவிட்டுக்கு கோபம் தலைகேறியது அவனிடம் சண்டையிடவில்லை பார்த்துவிட்டு உடனே வெளியே வந்து யோசிக்க ஆரம்பித்தான் போதையில் தான் பார்த்த படங்களின் காட்சிகளும் கடைசியாக பாரில் பாட்டிலால் அடித்து மண்டையில் ரத்தம் வழிய ஒருவன் சென்றதும் கண்முன் தோன்றி மறைந்தது .

மேலும்கீழுமாக மூச்சை இழுத்தவன் விறு விறுவென போய் ரோட்டோரமாக கிடந்த கறுங்கல்லை தூக்கிகொண்டு அரையை  நோக்கி விரைந்தான் கதவை தன் கை தொள்பட்டையால் மெதுவாக திறந்து அவனருகில் சென்றான்(கையில் துப்பாக்கியுடன் போலீசார் நுழைவார்களே அதுபோல் ), நன்றாக உறங்கிகொண்டிருந்தான் அவன்.  தனது தலையை  சிலுப்பி லேசான தெளிவு பெற்று  கல்லை ஓங்கி அவன் தலையில் போட்டான் ரத்தம் காலில் தெரித்தது  அவன் துடிதுடிக்க தொடங்கினான் மேலும் அவன் கை கால்கள் அடங்கும் வரை அடித்துகொண்டிருந்தான்(உரல்களில் நெல் குத்துவது போல்).
அவன் கண்கள் அதனிடத்தை விட்டு வெளியே வந்திருந்தது அதை பார்த்து பார்த்து ரசித்தான்,ரத்தம் பிசுபிசுத்தது,அவனை சாரி "அதை" இப்போ அவனரையில் ஒரு மூலையில்  யார்கண்ணிலும் படாதவாறு ஒளித்து வைத்தான்.

 இதோடு நிற்கவில்லை மேலும் டேவிட் தினம் தினம் இதை தொடர்ந்தான்  ஒருநாள் தனது அலுவலகத்தில் ஒருவனை பிடித்து அவன் முகத்தில் ஹிட் அடித்தான் அவன் சாகும் வரை மூக்கிலும் வாயிலும் அடித்தான் மூச்சுதினறி அவன் இறப்பதை கண்ணிமைக்காமல் கண்டு ரசித்தான் ,பழைய பைல்கள் மற்றும் ஓனர் வீட்டு பழைய பொருட்களெல்லாம் போடும் ஸ்டோர் ரூமில் போட்டு மறைத்தான் .ஒவ்வொன்றும் டேவிட்டிற்கு உற்சாகம் தந்தது .

தினம் தினம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என விளையாடினான் டேவிட்,  முதல் கொலையை செய்து இன்றோடு ஒரு வருடம் , இப்போதெல்லாம் டேவிட்டிற்கு கொலை செய்வது பழகிப்போயிருந்தது, ஹார்ரர் படங்களையும்  பார்ப்பதில்லை இவன் செய்தவற்றையே படம்பிடித்து வைத்திருந்தான் .

இன்றோடு நூறு கொலைகள், ஒவ்வொன்றையும் செய்ததும் பலத்டரியாவின்   ஆறு கால்களையும் பிச்சிவிடுவான் பிறகு அவை தலை இல்லாமல் இருவாரம் வாழும் என அறிந்து சிதைத்து விடுவான்,வெள்ளை ரத்தம் அரைமுழுக்க தெளித்திருக்கும்,அணுகுண்டு போட்டால் கூ ட அழியாது என்பார்கள் டேவிட் கொன்ற ஒன்று கூட அப்படி இருந்தது இல்லை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருந்தான்,இப்போதெல்லாம் அவன் அரையில் அந்த இனமே இல்லை, குடும்பம் குடும்பமாக கொன்றிருக்கிறான் எப்படி இருக்கும்.
(பலத்டரியா(Blattaria) கரப்பான்களின் இன்னொரு பெயர் )


ஆம் கரப்பான்கள் ஆனால் அவன் முதல் முதலில் செய்தது கொலைதான் ரசித்து ரசித்து செய்தான் போதையில், அந்த வெள்ளை ரத்ததை காணும்போதுதான் அவனுக்குள் இருந்த அந்த இனம்புரியாத ஆசை தீர்ந்தது .அதன் பெயர் blattaria வாக இருந்தாலும் டேவிட்டிர்க்கு இருந்த நோயின் பெயர்தான் தெரியவில்லை .

டேவிட் இப்போதெல்லாம் ஹார்ரர் படங்கள் பார்ப்பதில்லை ஒன்லி ரொமான்ஸ் :-) தவிர இப்போது டேவிட்டுக்கு வேலையும் கிடைத்துவிட்டது
அதனால் கொலை செய்ய நேரமும் இல்லை !Sunday, July 7, 2013

திரும்ப திரும்ப எழுதுற நீ ....

அன்று சனவரி மாதம் முதல் வார சனிக்கிழமை இதே வருடம்

 அதி காலை ராமின் அரை ,

ராம் இன்று மலருக்கு காதல் கடிதம் கொடுக்க முடிவெடுத்திருந்தான் ,இன்றோடு 3 மாதம் ஆகிறது மலரை சந்தித்து , இருவரும் ஒரே கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணுகிறார்கள் பிரபல நிறுவனத்தில்,
கமா செமிகோலன் தவரை எல்லாம் சரிசெய்ய உதவி நட்பாகினான்.அவளும் ராமை நல்ல நண்பனாகவே எண்ணினாள் .

நாட்கள் செல்ல செல்ல நட்பு செடியில் காதல் பூக்க தொடங்கியது ராமிற்கு ,என்னதான் நட்பாக பழகினாலும் காதல் கடிதம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் .கொஞ்சம் பழைய ஸ்டைல்தான் என்றாலும் ராமிற்கு பிடித்தமான ஒன்று கடிதம் எழுதி காதலை சொல்வது .

நேற்றிரவே யோசித்து அதிகாலை அலாரம் வைத்து அதற்க்கு முன்பே எழுந்து திரு திருவென்று சுவரையே வெறித்து கொண்டிருந்தான் ...1 ..2...3...4...5 நிமிடம் முடிந்து அலாரம் அலறியது அதை நிறுத்த எகுறி தடுக்கி விழுந்து பெரிய காயமில்லாமல் தூக்கம் மட்டும் தெறித்திருந்தது !

முகம்கழுவி பேப்பர் பேனாவெல்லாம் எடுத்து எழுத தொடங்கினான் ஒரு மணி நேரம் யோசித்து எழுதி எழுதி கசக்கி கசக்கி கடைசியில் ஒரு 5நிமிஷத்தில் எழுதி முடித்தான் 

அன்புள்ள மலருக்கு 

 ராம் எழுதுவது , 
உன்மீதிருக்கும் என் அன்பை சொல்ல விருப்பம் ,எப்படி சொல்வதென்று தெரியாமல் கூகிளை நாடினேன் (love letter in tamil) தேடி தேடி data  pack முடிந்ததுதான் மிச்சம் ஒன்றும் கிடைத்த பாடில்லை ,கடைசியாக ஒன்று மட்டும் புரிந்தது என் அளவற்ற அன்பு கூகிளின் data centerரை விட பெரிது .உன்னை மணந்து என் வாழ்நாள் முழுவதும் உனக்கென வாழ விருப்பம் ,அவசரமில்லை நம் கோர்ஸ் முடிய இன்னும் மூணு மாதம் இருக்கிறது சிந்தித்து சொல் என்னை அழ வைக்காத ஒரு பதிலாக சொல் ,தயவு செய்து குழப்பாமல் பைனரியில் பதில் சொல் !

உன் வருங்காலத்தை என் எதிர்காலமாய் நினைக்கிறன் யோசித்து முடிவெடு !

                                                                                                  உன் நினைவுகளுடன்  
                                                                                                                  ராம் 

என்று எழுதி முடித்து வழக்கம் போல் கிளாஸ்க்கு போனான் ,மலர் இன்று இன்னும் அழகாக இருந்தாள் வெள்ளை சுடியில், மிகவும் படபடப்புடன் இருக்கிறான் ராம் ,
இன்றும்  எதற்கோ உதவ சென்று கடிதத்தை அவள் நோட்டில் செருகி வைத்து விட்டு வந்துவிட்டான் . இரவு தூக்கம் வரவில்லை பொரண்டு பொரண்டு படுத்தாலும் யாரோ அடிப்பதுபோல கனவு வருகிறது ,உண்மையிலேயே இது ஒரு ஒரு பெரிய இரவு போல் இருந்தது ராமிற்கு .

மறுநாள் காலை என்ன நடக்க போகிறதென்று யோசிக்க இயலாமல் வகுப்பில் போய் அமர்ந்திருந்தான் , மலர் வருகிறாள் ராமை நோக்கி அதுவும் முறைத்து கொண்டே , நம்மாளுக்கு அல்லு இல்ல திரு திருன்னு முளிச்சிகிட்டு அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் , வேகமாய் அருகில் வந்தவள் உனக்கெல்லாம் அறிவு இருக்கா வீட்ல யாரவது பாத்தா என்ன ஆகிருக்கும் என்றாள்

கேட்டதும் துள்ளி குதித்தான் ராம் ....
.
.
.
.
.
.
.
.

 அதி காலை ராமின் அரை

என்னங்க எழுந்திருங்க உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க,அப்படியே மலரையும் எழுப்புங்க ஸ்கூல்க்கு கிளம்பனும் ...


கலைந்த கனவுடன்(காதலுடன்) எழுந்தான் ராம் .


கேவலாமா இருக்கா ?
 ம்ம் ஆமா !
 நானும் அப்பவே சொன்னேன் இவன்ட இந்த லவ் மேட்டர் எல்லாம் செட்டாவாது மச்சின்னு கேட்டானா 
 இல்ல நான் பதிவு போட்டே தீருவேன்னு ஓத்த கால்ல நின்னான்,கத எழுதுறானாம் கத .