Pages

Sunday, August 25, 2013

கூரைய பிச்சிகிட்டு ...


          பொழுது சாய்ந்த நேரம் மதி அறக்க பறக்க ஓடி வந்தான் ,கொலையை கண்டவனைப்போல் தலைதெறிக்க உள்ளே நுழைந்தவன்,அறையினுள் நுழையும்போதே படியில் கால் இடறி சமாளித்து மேலேறினான், ரவியை கண்டதும் சற்று நிதானமாகி ரவியிடம் அந்த விஷயத்தை கூறினான் , கூறும் போதே அவசரத்தில் உளறினான் மதி. அவசரம்,பயம்,வெறி என கலந்த மனநிலையில் கூறினான்.இதுவரை அமைதியாய் இருந்தவன், மதி கூறியதை கேட்டதும் பயந்து போனான் முகமெல்லாம் அதிர்ச்சியில் வெளுத்து வேர்த்துபோயிருந்தது  ரவிக்கு ,தீவிரமானான் என்ன செய்வதென்று சிந்திக்க தொடங்கினான் பத்து விரல்களிலும் உள்ள நகங்கள் அனைத்தும் கடித்து துப்பப்பட்டன ,நிரப்பி வைத்த 1 லிட்டர் தண்ணீரும் காலியானது,100கவிதைகள் எழுதும் அளவு யோசித்திவன் போல் அமர்ந்திருந்தான் அமைதியாய்,வெற்று சுவற்றை வெறித்து பார்த்தவாறு .மதியும் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி புகைத்துகொண்டிருந்தான் .
 
 திடீரென்று ரவியின் முகம் பிரகாசமானது குண்டுபுல்ப்பு போல முகமலர்ச்சியோடு சிரித்தான் மதியை கண்டு, இருவரும் கலந்தாலோசித்து அவரவர் கைபேசியில் சேமித்து இருந்த எண்களையெல்லாம் வரிசையாக அழைக்க ஆரம்பித்தனர்,ரவி அவன் கைபேசியில் மேலிருந்து கீழும்,மதி கீழிருந்து மேலும் தொடங்கினர் .ஒவ்வொரு அழைப்பை தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் பேசிய சில நொடிகளில் முகம் வாடிவதங்க தொடங்கும்,தொடர்ந்து தொர்புகொண்டு பேசினர் இடைவிடாமல் உயிர்நண்பன்,மச்சி,மாப்ள,நண்பன்டா என்று  சொன்னவனெல்லாம் தடம் தெரியாமல் போனார்கள்,ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் கோவமும்,ஏமாற்றமும், எரிச்சலும், வெறுப்பும்  மட்டும்தான் கிடைத்தது இருவருக்கும்.கூடவே ஒரு பாக்கெட் சிகரெட்டும் தீர்ந்து போனது மதிக்கு,கேட்பது பணம் என தெரிந்தால் பொனமும் தெறித்து ஓடாதா என்ன :)

கடைசியாக கைபேசியில் இருந்த தொகையும் காலியாகி போனது .எரிச்சலுடன் ரவி கைபேசியை தூக்கி வீசினான் எதிரில் தலையணை இருக்கும் தையிரியத்தில் ஆனால் சுவற்றில் அடித்த பந்து போல் தலையணையில் பட்டு தரையில் தாறுமாறாக பல்டி அடித்தது ரவியில் தொடுதிரை கைபேசி, சுதாரித்து எடுப்பதற்குள் கைபேசியில் ஒரு முனை தரையில் பலமாக பட்டு விரிசல் விட்டிருந்தது கடுப்பில் தலையில் அடித்து கொண்டவன் கைபேசியை எடுத்து வேலை செய்கிறதா என ஆராய தன் திரையை கோலம் போட்டு திறந்ததும் தானாக ஒரு எண் அழைக்கப்பட்டது அது சேமிக்கபடாத எண்,நம் பழைய பொத்தான்கள் உள்ள கைபேசி என்றால் டக்டக்டக் என அழுத்தி நிறுத்திவிடலாம் தொடுதிரைகள் திடீர் திடீரென தன்னிச்சையாக செயல்படுகிறது என்ன தொட்டபோதும் தேய்த்தபோதும் தவிற்க்க முடியாமல் அந்த எண் அழைக்கபட்டிருந்தது எதிர்முனையில் ஒருவர் மிகவும் கரகரப்பான குரலில்
ஹலோ என்றார் ஒரே இரைச்சலாய் இருந்தது அந்த எதிர்முனை, விமானம் பக்கத்தில் பறப்பதுபோலும்,காற்று பலமாக அடிப்பது போலும் இருந்தது ,ரவி விழிபிதுங்கி செயலற்று போனான்,எதிர்முனையில் இருந்து பல ஒலிகள் கேட்டது, சற்றும் எதிர் பாராமல் மதி அந்த கைபேசியை பிடுங்கி குரலை சற்று கோரமாக்கி கணீரென பேசதொடங்கினான்.

தெரிந்த நபரிடம் பேசுவதுபோல் யார் எவர் என்று கேட்காமல் இவ்வளவு நேரம் தெரிந்த நபர்களிடம் பேசியதை கட கடவென மூச்சி விடாமல் பேசிமுடித்தான் மனப்பாடமாய்
எதிர்முனை என்ன நினைத்ததென்று தெரியவில்லை அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது  ....

சோகமாய்  ரவியை பார்த்து நமக்குமட்டும்தானா இல்ல எல்லாருக்கும் இப்படிதான் நடக்குதா புரியல என்று புலம்பினான் எல்லாத்தையும்  மேல இருக்குறவன் பாத்துப்பான் என்றான் ரவி,தற்செயலாய் கைபேசியில் அந்த எண்ணை கண்டு அதிர்ச்சியானான் அதில் கண்பித்த எண் +0000000000000,இதை பார்த்து யார்தான் அதிர்ச்சியாக மாட்டார்கள், மதியும் அதிர்ச்சியானான் எப்படி இதுபோல் ஒரு எண் உபயோகத்தில் இருக்கிறது ,அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டது தான் இப்படி ஒரு தருணத்தில் சற்று நிம்மதியான செய்தியாக இருந்தது .

திடுதிடுவன கதவை யாரோ தட்டும் சத்தம்,இல்லை யாரோ கதவை உடைக்கும் சத்தம், கூடுதல் அதிர்ச்சியாய் கட கடவென நடந்தது அனைத்தும்
யோசிக்க விடாமல் தாக்குவதுபோல் இருந்தது இருவருக்கும் .

கதவை திறக்காமல் வெறிக்க பார்த்து கொண்டிருந்தனர் அதே நேரத்தில் அந்த மர்ம எண்ணிலிருந்தும் அழைப்பு வருகிறது ரவிக்கு ,ரவியில் விழி இரண்டும் சற்று நேரத்தில் கிழே விழுந்துவிடுவது போலிருந்தது ,சற்றும் எதிர்பாராமல் சத்தமும் அழைப்பும் ஒருசேர நின்று போனது ,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் .இருவரின் இதயதுடிப்பும் சத்தமாக கேட்டது இருவருக்கும்.

சற்று நேரத்தில் திரும்பவும் கதவை இடிக்கும் சத்தம் "டேய் கதவ தொரங்கடா " என்று குரலும் கேட்டது மிகவும் பரிச்சயமான குரல் மதி சுதாரித்தான் டேய் நம்ம ரகு டா என்று கதவை திறந்தான் , ரகு கையில் இரண்டு பெரிய பாட்டில்கள் வைத்திருந்தான் "நெப்போலியன் பைநெஸ்ட் பிராண்டி" என  பெயர் பொரித்திருந்தது மதி அதை வாரி அள்ளி கொஞ்சி பொறுமையாக அறையின் ஒரு மூலையில் போர்வை மேல் வைத்துவிட்டு ஓடிவந்து ரகுவை கட்டி அணைத்தான் மச்சான் நீ தெய்வம்டா என்றான் ,ரகுவும் சிரித்துகொண்டே என்ன மச்சி இதுக்குபோய் என நெளிந்தான் ரவி நடந்ததை ஏதோ கனவு போல் பார்த்துகொண்டிருந்தான்  .

கடந்த ஒரு மணி நேரமா ஒரு குவாட்டர் வாங்க ஒருத்தன் ஒருத்தனுக்கா கூப்ட்டு அசிங்கபட்டோம்,இந்த வருஷம் சுகந்திரதினமே வீனா போய்டுமேன்னு  பயந்துகிட்டு இருந்தோம் மச்சான் நீ தெய்வம் டா , என்ன மச்சான் திடீர்னு ரகுவிடம் கேட்க, ரகு வெக்கபட்டுகொண்டே அவ ஒத்துகிட்டா மச்சான் என்றான் ,மதி ,ரவி இருவரும் ரகுவை வாழ்த்திவிட்டு சற்று நேரத்தில் ஒரு நெப்போலியனை சிறப்பாக முடித்து மூவரும் காற்றில் மிதக்க ஆரம்பித்தனர் .

ரவி கண்ணை சுருக்கி கொண்டே இமைகளை விரித்தான் சூரிய ஒலி சன்னல் வழியாக சுகந்திரமாய் கண்களில் அடித்தது பொறுமையாக எழுந்து கைபேசியை தேடினான் அது மதியின் வயிற்றிற்கு அடியில் இருந்தது அவனை உருட்டி கைபேசியை எடுத்து தொடுதிரையில் கோலம் போட்டு நேரத்தை பார்த்தான் சரியாக பத்து மணி ரகுவை காணவில்லை சரி கலையிலே  எழுந்து சென்றிருப்பான் என்று மத்த வேலைகளை பார்த்துவிட்டு பக்கத்து டீ கடைக்கு நடந்தான் ,ரவிக்கு புகைக்கும் பழக்கம் இல்லை அதனால் டீ அடித்துவிட்டு மதிக்கு ஒரு சிகரெட் வாங்கி வைத்துகொண்டு பத்து  ரூபாய் கைபேசிக்கு கொஞ்சம் சோறு போட்டுகொண்டு அரைக்கு வந்தான் ,மதியை காலால் எத்தி எழுப்பி விட்டு சிகரெட்டை அவன் மூஞ்ஜியில் எறிந்தான்  மூகினருகே விழுந்த இரு புகையிலை துகள்கள்  தும்மலை வரவழைத்தது எழுந்ததும் ரவியை அசிங்கமாய் கேட்டான் ,பின் சிகரெட்டுடன்  காலைகடனை முடித்தான்,
 ஏதோ யோசித்தவனாய் வந்து ரவியிடம் டேய் ரகுவுக்கு கால் பண்ணு என்றதும் ரவி கைபேசியை எடுத்து தடவ ஆரம்பித்தான் மணி அடித்து கொண்டே இருந்தது துண்டித்து விடலாம் என என்னும்போது ஹெலோ என்றான் ரகு ,டேய்  எப்படா கெளம்புன என்றான்,ரகு கூறியதை கேட்டு ரவி அதிர்ச்சியில் உறைந்து போனான் அழைப்பை துண்டித்துவிட்டு பேய் பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் ,மதி அசிங்கமாய் திட்டி கூப்பிட்டதும் தான் திரும்பினான் .

என்னடா சொன்னான் ரகு என்னாச்சு உனக்கு சொல்லிதொலை

இல்ல மச்சான் ரகு ஊருக்கு போய் நாலு நாள் ஆச்சாம்,சொந்த ஊர்ல இருக்கானாம்,அவன் ஆள பாத்து ரெண்டு வாரம் ஆகுதாம், இன்னும் அவ ஒத்துக்கல !

மதியும் அதிர்ச்சியில், அப்போ நேத்து வந்தது யாரு டா ?

பேசிகொண்டிருக்கும்போதே மறுபடியும் அந்த மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வந்தது ,ரவி பயந்து போனான் மதியிடம் கொடுத்துவிட்டான் கைபேசியை

மதியும் அந்த தொடுதிரையில் கை நடுங்கியவாறே தடவி காதில் வைத்தான் எதிர்முனையில் அதே சத்தம் இறைச்சல் கூடவே அந்த குரலும்

"நீங்கதான மேல இருக்குறவன் பாத்துக்குவான்னு சொன்னீங்க அதான் பாத்துகிட்டேன்" என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

திரும்ப அழைத்தபோது தவறான எண் என்று ஒரு பெண்ணின் குரல் .

அரையெங்கும் அமைதி !




டேய் ரவி அந்த இன்னொரு பாட்டில எடு !