Pages

Sunday, December 12, 2010

டிக்கெட் டிக்கெட் .....


இந்த பதிவில்  பேருந்தில் நான் சந்தித்த அனுபவங்களையும் கேட்ட செய்திகளையும் உங்களிடம் பகிர்கிறேன் .......


சாதாரணமாக டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் கூட்டமாக இருந்தாலும் கூட்டம் இல்லாவிட்டாலும் அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் வழக்கம் மறைந்தே போய்விட்டது .. குறிப்பாக சென்னையில் மற்ற ஊர்களில் கூட இப்படி இல்லை .

அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை விட்டு அவர் நகருவதே இல்லை அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் மிகவும் சிலரே உள்ளனர் .

ஆனால் மீதம்மிருக்கும் நடத்துனர்களால் எல்லார் மேலும் ஒரு வெறுப்பு வருகிறது .

கூட்டமா இருக்கு அப்டியே பாஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டு உக்காந்திருப்பார் பயணிகளும் வேறு வழியின்றி பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிகொல்கிறார்கள்.
 
சில சமயம் டிக்கெட் வரும் சில்லறை வருவது இல்லை 
சில சமயம்  சில்லறையா கொடு இல்ல அடுத்த நிறுத்தத்துல இறங்கிக்கோன்னு  சொல்லிடுறாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு பயணிகள் மேல வெறுப்பா ?

ஆனா பல சமயங்கள்ல இதுக்கு பயணிகளும் ஒரு காரணமா இருக்காங்க நடத்துனர்கள் உட்காந்திருந்தா அவங்க கிட்டயே போய் டிக்கெட் வாங்கிட்டு வாரங்க !
சரி அவங்களும் எவ்ளோ நேரம்தான் நடபாங்கன்னு நினைக்கலாம் ஆனா வேலைநேரம் முழக்க உகார்ந்தே  வேலை செய்ய அவுங்க ஏன் நடத்துனர் வேலைக்கு வரணும் ?

சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் :
ஒரு பள்ளிச்சிறுவன் பேருந்தில் முன் பக்கத்தில் ஏறியிருக்கிறான் பேருந்து கூட்டமாக இருந்ததுனால நடத்துனர் வருவார்ன்னு காத்திருக்க அடுத்த நிறுத்தத்துல பரிசோதகர் எறியிருக்கார் இவனிடம் டிக்கெட் இல்லை . அவன் சிறுவன் என்றும் பார்க்காமல் அவனை உலுக்கி இருக்கிறார்கள் அவன் நடத்துனர் வருவார்ன்னு இருந்தேன் அவர் வரல என்கிட்டே பணம் இருக்குன்னு சொல்லி காட்டின பிறகும் அவர்கள் அவனை அந்த கூட்டத்துலயும் சட்டைப்பையில் துலாவி இருக்கிறார்கள் பிறகு ஒன்னும் "தேராததால்"  திட்டி விட்டு சென்றுவிட்டனர்  பிறகு நடத்துனர் வந்து அவர் பங்குக்கு நாலு திட்டு திட்டிவிட்டு  டிக்கெட் கொடுத்து செல்ல அவன் கூனி குறுகி அழுதுகொண்டே சென்றிருக்கிறான் .

அவர்களுக்குள்ளயே பல சங்கங்களாக இருகிறார்கள் , அதிலும் திமுக மற்றும் ஆதிமுக என இரு சங்கங்கள் போன மாதம் போக்குவரத்து கழகதுகுள்ளயே தேர்தல் போல் வைத்து உறுபினர்களை தேர்ந்தெடுத்தார்கள் அதில் தவறில்லை ஆனால் அந்த பரபரப்பில் பேருந்தை ஒரு சிலமணிநேரம் இயக்கவில்லை இதனால் பல பயணிகள் வேறு வழியின்றி ஆடோவிலும் லாரியிலும் சென்றனர் .

கேட்பதற்கு ஆள் இல்லாமல் ,இது போல் தினம் தினம் பல சம்பவங்கள் நடக்கிறது .
 மக்களின் நிலை ஒரு குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டுள்ளது அதிலும் ஒவ்வொரு
துறையினரும் விளையாடுகிறார்கள் .

இது போல் பல ரணங்களை சந்திக்கும் மக்களின் நிலை


                                                                    ?


இங்கு உங்களுடன் பகிர்ந்த அனைத்தும் எனது அனுபவங்கள் மட்டும்தான் ..

பிடித்திருந்தால் இன்ட்லியிடம் சொல்லுங்கள் பிடிக்கலன்னா  பின்னூட்டத்துல சொல்லுங்க மறக்காம !