Pages

Wednesday, July 11, 2012

த்ரிஷாவை தேடி !

நானும் திரிஷாவும் அந்த வெளி வராத படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தோம், திடீர்னு அந்த சத்தம் த்ரிஷா இப்போ இல்லை அவளையும் காணும் பாட்டு மட்டும் ஓடிகொண்டே இருந்தது இப்போ மனம் கொத்தி பறவை படத்தில இருந்து போ போ போ !அந்த சத்தமும் நிற்காமல் அசரீரீ போல் ஒலித்துகொண்டே இருந்தது !
என்னால் அதை கவனிக்க முடியவில்லை த்ரிஷாவை வேறு தேடவேண்டும் 
, இருட்டிவிட்டது எங்கும் இருள் (தமிழகம்தான்) தேடி அலுத்து அரைக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசித்துகொண்டே தூங்கிபோனேன் ,என் காதுகளுக்குள் அந்த சத்தம் கேட்பது நிற்கவேயில்லை அதோடு இப்போ ஜல் ஜல் ஜலோசை பாடல்   !

கனவில் நேற்று பார்த்த அந்த வெளிவராத படத்தின் நாயகி இரண்டே ஆடைகளுடன் ஆடிகொண்டிருந்தாள் ,திடீரென சத்தம் அதிகமாகியது !
அந்த சத்தத்துடன் என் பெயரும் ஒலித்தது !விழித்து து த்ரிஷாவை தேடுவதில் தீவிரமானேன் எந்த சத்தத்தையும் சட்டை செய்யாமல் பாடல்களையும் கண்டுகொள்ளாமல் தேடினேன் !
நாங்கள் இருவரும் சேர்ந்து போன இடமெல்லாம் ,பிறகு அவளின் தோழியின் வீடு ,பூங்கா ,அவளுக்கு பிடித்த அணைத்து இடங்களிலும் , தேடி தேடி என ரணம் சுகம் பாடல் வேறு என்னை வெறுப்பேற்றியது அந்த சத்தத்தையும் பாடல்களையும் எப்படி நிறுத்துவது இப்போ கலியுகம் எடா கூட பாடல்  !

சத்தம் வலுத்தது என்னால் தாங்க முடியவில்லை , த்ரிஷா வேறு யாரிடம் மாட்டிகொண்டாளோ  தெரியவில்லை , பயமும் வெறியும் அதிகரித்தது - 

இந்த சத்தம் தாங்க முடியாமல் ஓடினேன் நிற்காமல் ஓடினேன் ,இரவுக்கு பேர் போன அந்த நெடுஞ்சாலையில் தலைதெறிக்க ஓடினேன் என்னை பின்தொடர்ந்து ஒரு இருசக்கரவாகனம் அதில் என் நண்பன் அருணும் த்ரிஷாவும் !


த்ரிஷா என்னை இப்படி ஏமாற்றுவாள்  என்று எதிர்பார்கவே இல்லை !
என்னை கடந்து என்னை கண்டுகொள்ளாமல் சென்றார்கள் இருவரும் !
எனக்கு இப்போ த்ரிஷாவை விட அந்த சத்தம் தான் அதிக கோபத்தை அதிகரித்தது , இவ்வளவு பிரச்சனைகளில் மழை வேறு ,முட்டாள் தனமாக ஓடினால் தப்பித்து விடலாம் என ஓடிக்கொண்டே இருந்தேன் இப்போ மயக்கம் என்ன பட ஓடி ஓடி தூரம் பாடல் !


 ,எதுவோ வந்து என் தலையில் விழுந்தது , பயங்கரமான வலி , இப்போது மயக்கம் என்ன தீம் பாடல் !மயக்கமானதுபோல் உணர்ந்தேன் !

உண்மையாகவே நனைந்து காலில் பயங்கரமான வலியை உணர்தேன் 
கண் விழித்து  பார்த்தால் நண்பன் அருண் என் அறைக்கு வெளியே!
 பதறி போய்  திறந்தேன் வண்டை  வண்டையாய் கேட்டான் !

அதன் பிறகு தெரிய வந்த தகவல்கள் பின்வருமாறு 


1.நண்பன் அருண் இருபது நிமிடமாய் கதவை தட்டி இருக்கிறான் 
2.காதில் ஹெட் செட் இருந்ததால் எனக்கு கேட்கவில்லை 
3.இரவு படுக்கும்  முன் த்ரிஷாவின்  எடா கூட பாடல் பார்த்தது நினைவிற்கு வந்தது 
4.திறக்காததால் தண்ணி எடுத்து ஊற்றி பார்த்திருக்கிறான் -திராணி இழந்ததுதான் மிச்சம் 
5.கடைசியாய் எங்கிருந்தோ கற்களை எடுத்து வந்து அடித்திருக்கிறான் 
6.த்ரிஷாவை எங்க டா கூட்டிட்டு போன என்று கேட்டு அவன் கோபத்தை இன்னும் 2 வாங்கி கட்டி கொண்டேன் !
7.மேல் கண்ட அணைத்து பாடல்களும் என் ப்ளேலிஸ்ட்டில் உள்ளவை !


உடையை மாற்றி கொண்டு திரும்பவும் வந்து தூங்க தொடங்கினேன் கைபேசியை தூர எறிந்துவிட்டு !

என்ன கொடாம சார் இது !


Tuesday, May 29, 2012

யாரும் படிக்காதீங்க !

படிக்காதீங்க !படிக்காதீங்க!


வேணா படிக்காதீங்க !வளர்மதி வயசுக்கு வந்துடுச்சு :)திட்டாதீங்க ! Saturday, May 26, 2012

அவள் !

காண துடிக்கிறேன்  !
தேடி அலைகிறேன் ! 
எழுதி தீர்க்கிறேன் !
என்னுள்
வரைந்து பார்கிறேன் !
ஒளியில் ரசிக்கிறேன் !
ஒலியில் கேட்கிறேன்  !
காற்றில் நுகர்கிறேன் !
ஒன்றிற்கு இருமுறை
கண் முன் தோன்றி மறைகிறாய் !
தேடினால் கிடைக்க மறுக்கிறாய்  !
உன் நிழல் கூட கேலி பேசுதே !
என் திருடு போன இதயத்துடன் தொலைந்து சிரிக்கிறாய் !
நீ கூட வேண்டாம் உன்னையே பொழுதுக்கும் முனகும்
என்  இதயம் வேண்டுமே !
தேடி அலுத்து வெறுத்து போகிறேன்
கூட நடக்க கால்கள் தவிக்குதே !
நொடிக்கொருமுறை கண்முன் தோன்றி இருளில் மறைகிறாய் !
அனைத்தையும் தேடும் கூகுளும் தேட மறுக்குதே !
முகநூளில் என் ஸ்டேடஸ் உம்   மொக்கையாகுதே !
என் கண்களில் ஜூமிங் இல்லையே !
கூகிள் எர்த்தில் கூட உன்னை காணவில்லையே !
இருகைகளும் இயங்க மறுக்குதே
உன் விரல் தேடி காற்றில் வண்ணம் தீட்டுதே !
இறுதியில்
அவள் வருவாளா என பாடி திரிகிறேன் !
என் மனமும் என்னை போடா காமெடி பீசு
என ஹர்ட் பண்ணுது !
 செகண்ட் ஹான்டில் இதயம் வாங்கும் ஆப்ஷன் இல்லையே !
தினமும் உனையே கூவி திரிகிறேன் !
இதை பார்த்து சிரிக்க என்னை சுற்றி கூடம் கூடுது
கூட்டத்திலும் என் கண்கள் உன்னை தேடுது !
அருகில்  இருந்த குப்பை தொட்டியில் உன் சத்தம் கேக்குது !
ஓடிசென்று எட்டி பார்கையில் என் இதயம் துடிக்குது
தூக்கிபோட்ட உடன் சொல்லியிருக்கலாம்
நீ இல்லையென்றால் இறக்க மாட்டேன் !
சத்தியமாய் !
உன் பக்கத்துக்கு வீட்டில் மலர் இருக்கிறாள் !
உன்னை போல் அவளுக்கு அண்ணன் இல்லை !
உன்னை போல் அவளுக்கு அழகு இல்லை ,
இனி அவளுக்கு உயிராய் நான் இருக்கிறேன்
என் இதயத்தை மட்டும்தான் எடுத்தேன்
நீ இன்னும் அந்த குப்பையில்தான் !
எனக்கு  மலர் இருக்கிறாள் !
அவளும் கூட தேட வைக்கிறாள்
இனியும்  எவளும் தேவை இல்லை !
இறுதியில் நான் திருந்த போகிறேன்
பெண்களே வேண்டாம் என முடிவு செய்கிறேன் !
இன்று முதல் படிக்க போகிறேன் :)


உன்னிடம் நான் கற்ற பாடம் போதுமே
ஒன்பதிற்கு மேல் என் அரியர் இருக்குது !
அனைத்தையும் முடிக்க திராணி இருக்குது !


இது நாளை முதல் குடிக்க மாட்டேன் போல் ஆகக்கூடாது
நிச்சயம் ஆகவிடமாட்டேன் !
 
"தாத்தா" சொன்ன வசனம் தெரியுமா ?

"கூட நட்பு கேடாய் முடியும்"

 #நிச்சயம் தவறு இருக்கும்
எதுவானாலும் கூறி செல்லவும் !
மறுமுறை தவிர்க்க முயல்கிறேன் !
கொசுறு :
தாத்தா இந்த வசனம் கூறிய இடம் :
பத்திரிக்கையாளர்கள் கனிமொழி வழக்கு பற்றி  கேட்ட கருத்திற்கு கூறியது
 :)