Pages

Thursday, October 28, 2010

பயடேட்டா

ஏங்க நீங்களே கேளுங்க, குத்தாலத்தானுக்கு செமஸ்டர் வந்துட்டாம் அதனால ஒரு ரெண்டு மாசத்துக்கு ட்விட்ட மாட்டானாம்,யார் பதிவும் படிக்க மாட்டானாம், கேட்டா சின்சியரா படிக்கிறானாமா(உன்னய பத்தி எனக்கு தெரியும்டி)

தீபாவளிக்குகூட ஊருக்கு வந்து கொண்டாடமாட்டானாம், ஏண்டான்னு கேட்டா இந்த முறை பரிட்சையே தீபாவளியா கொண்டாவேங்கிறான்(முடியலடா சாமீ)

சரி அவன் தான் இந்த பக்கம் வரமாட்டேனே, அவன பத்தி புட்டு புட்டு வக்கிறேன் கேளுங்க :)


உண்மையான பெயர்     :     பிரபாகரன்(விடுதலை புலி இல்ல)

வயசு                                     :        வாலிப வயசு 21

தற்போதைய தொழில்       :  பொறியியல் படிப்பை கருமமே கண்ணாக
                                                        படிப்பது(மச்சி படிக்கிற தானே)

பொழுதுபோக்கு                   :      இணையத்தோடு இனைந்தே இருப்பது,                                                                                     என்னோடும்   நண்பர்களோடும் மொக்கை                                                                             போடுவது

நண்பர்கள்                               :        என்னையும் சேத்து ஒரு ஆயிரம் பேராவது                                                                           இருப்பாங்க

எதிரிகள்                                  :        பூச்சிகள்(உன்னைய கடிக்காத பூச்சே                                                                                        இல்லல்ல   மாமா )

ஊருக்குள்                              :        நான் அவன் இல்ல


ரொம்ப பிடித்தது                  :         சோனி எரிக்சன் மொபைலும் வகை                                                                                             வகையாய்   டீ-சர்ட்டுகளும்

பிடிக்காதது                              :         சீன் போடுவது,உண்மையையே                                                                                                 பேசுவது(இது   உண்மை இல்லீங்கோ)

அடிக்கடி செய்வது               :       தன்னையே வித்யாசம் வித்யாசமாக போட்டோ                                                                 எடுப்பது

இதுவரை செய்யாதது         :      செய்யாத தில்லாலங்கடியே இல்ல

செய்ய நினைப்பது                :       ஊருக்கு எதாவது நல்லது செய்யனும்னு                                                                               நினைக்கிற நல்ல மனசு

சமீபத்திய சாதனை              :       சுழிய  சுருட்டிகிட்டு படிக்க உட்கார்ந்திருப்பது                                                                       (படிக்க புத்தகத்த எடுத்துட்டான் அடுத்த ப்ளான்                                                                   புத்தகத்த திறக்கனும்)

நீண்டகால சாதனை          :        ஊருக்குள் நல்லவன் போலவே நடமாடுவது

வருங்கால சாதனை          :         மச்சி இந்த மைக்ரோசாஃப்ட்,கூகுள் போன்ற                                                                         சின்ன கம்பெனிகளை ஓரங்கட்ட ஒரு பெரிய                                                                       கம்பெனி நீதான் ஆரம்பிக்கனும்டா

பெண்கள்                      :                  எல்லா இளம் பெண்களும் இவனுக்கு அக்கா                                                                          தங்கச்சி  மாதிரி(மச்சான் எப்புடி)

காதல்                                    :         வந்துச்சி ஆனா போகல (என்ன வாந்தியா)

கவிதை                                 :         இவன் கிறுக்குறது கூட கவித                                                                                  ( கழுத இல்ல கவித கவித )

ஏமாந்தது                               :         ட்விட்டர் மீட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்து ஏமாந்தது

புதுசு                                       :    டெல் லேப்டாப்

பழசு                                       :     பழசையெல்லாம் தூர போட்டுட்டு எல்லாம்                                                                           புதுசுதான் (எல்லாமே தான்)

கடைசியா  உனக்கு         :     மச்சி நீ கேளேன் , நீ கேளேன்



                                    

4 comments:

செல்வா said...

பயோடேட்டா நல்லாத்தான் இருக்கு மாப்பு ..!!

செல்வா said...

அப்புறம் வருங்கால சாதனை செமயா இருக்கும் போல ..

சி.பி.செந்தில்குமார் said...

குட் காமெடி மக்கா

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

பயோடேட்டா நல்லாத்தான் இருக்கு மாப்பு ..!!

யோவ் செல்வா ,எல்லாருமே உங்களுக்கு மாப்பா?