Pages

Thursday, February 17, 2011

கைபேசியும் கைக்குழந்தையும் !!!

பதிவெழுதி நீண்ட நாள் ஆச்சு !
திடீர்னு இந்த செய்தியை பதிவேழுதியே  தீரணும்னு தோனுச்சு இது பல பேருக்கு பெரிய விஷயமா தெரியல ஆனா கவனிக்க வேண்டிய செய்தி !

அண்மையில் உறவினர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது அங்கு அவர்களின் குழந்தை  விளையாடிக் கொண்டிருந்தான் . விளையாடுவதில் தவறில்லை ஆனால் அவனின்  விளையாட்டு பொருள் ஒரு கைபேசி !




கைபேசியில் இருந்து வரும் கதிர்வீச்சு பெரியவர்களையே பாதிக்கும்போது சிறுகுழந்தைகள் நிலை என்னாவது ?'
சிட்டுகுருவி இனம் இருந்ததற்கு அடையாளம் கூட குறைந்துவிட்டது ! காரணம் கைபேசி கதிர்கள்தான் !!

சன்னலை திறந்தால் பசுமையாய் தெரியும் மரங்கள் இன்று இல்லை , கைபேசி கோபுரங்கள் மட்டும்தான் தெரிகிறது !! எங்கு சென்றாலும் அமைதி இல்லை கைபேசி சிணுங்கலும் "ம்ம்" கொட்டும் சத்தமும்தான் கேட்கிறது !


""ட்விட்டர் குருவி "" தெரிஞ்சஅளவு கூட யாருக்கும் இன்னக்கி "சிட்டுகுருவி" நியாபகத்தில் இல்லை இதுதான் இன்றைய நிலை !! 


 
இதன் தாக்கம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அதிகஅளவில் இருக்கும்.நண்பன் வீட்டில் பிறந்தகுழந்தையின் அருகிலயே ஒரு கைபேசி எப்போதும் இருக்கிறது ஏன் என்று கேட்டால் பத்திரமாக இருக்குமாம் ?!


இப்படி பிறந்ததிலிருந்தே கைபேசியும் கையுமாக இருந்தால் வளர்ந்து மூன்றாம் வகுப்பு போகும் போதே கையில் கைபேசியுடன்தான்  அனுப்ப வேண்டும் .... இதன் விளைவு கண்டிப்பாக மோசமாக இருக்கும் !

சில பேர் தன குழந்தை இந்த வயசிலயே கைபேசியை கையாளுகிறான்னு பெருமைபடுகிறார்கள் ஒரு நாளாவது உணர்வார்கள் !!

சில பெற்றோர்களை  கேட்டால் அடுத்த தலைமுறை என்று சொல்கிறார்கள் !
அப்படியென்றால் அடுத்த தலைமுறையினர் அனைவரும் தலையில் கட்டியுடனும் , கான்செருடனும்தான் இருக்க முடியும் !

நாம் அலட்சியமாக இருக்கும் ஒவ்வொரு சிறுவிஷயத்திற்கும் கண்டிப்பாக விளைவு இருக்கிறது அதை உணரும்போது அது கட்டுக்கடங்காத நிலையில் இருக்கும் என்பது உறுதி !!


முடிந்த அளவு இந்த செய்தியை நாம் நம் நெருங்கியவர்களுக்காவது சொல்வோம் !
 என் பதிவை படிக்க ஆள் சேர்க்கவில்லை படிப்பவர்கள் அடுத்தவரிடம்  கூறினால் கூட போதுமானது !

(பதிவ படிச்சிட்டு இவனுக்கு யார் டா கணினிய உபயோகிக்க கத்துகொடுத்ததுன்னு நினைக்காதீங்க :) )

புதிவு பிடித்தால் நண்பர்களிடம் சொல்லுங்க பிடிக்கலன்னா பின்னூடத்தில சொல்லுங்க !!!



10 comments:

ராஜா said...

சொக்கா சொன்ன அன்னாத்த.....

Chitra said...

http://www.i-sis.org.uk/MPVB.php

Whenever you have time, please read that research finding... It is alarming!

செல்வா said...

உண்மைதான் .. அடுத்த தலைமுறை அடுத்த தலைமுறைன்னு என்னத்த எல்லாம் பண்ணப்போறாங்களோ ? எது எப்படியோ நாம கொஞ்சம் தெளிவா இருக்கணும் .. செல் போன் தேவைதான் , ஆனா மூணு வயசு குழந்தைக்கு தேவைன்னு நினைக்கிறவங்கள என்ன பண்ணுறது ? அது பாதுகாப்புக்கு செல் போன கொடுத்திட்டு இவுங்க என்ன பண்ணுறாங்க ?

ஜில்தண்ணி said...

////பதிவெழுதி நீண்ட நாள் ஆச்சு ! ///

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாள் ஆச்சு டா :)

= YoYo = said...

சரி விடு உன் புள்ளைக்கு பொம்ம செல்போன் வாங்கி கொடுத்துடலாம் :)

Unknown said...

@Chitra
நன்றி

Unknown said...

@கோமாளி ..
correct machi

Unknown said...

@ஜில்தண்ணி
kaalakkodumai

Unknown said...

+யோகி+
no mobile toys :)

'பரிவை' சே.குமார் said...

Very Good and Important Article.