Pages

Wednesday, July 11, 2012

த்ரிஷாவை தேடி !

நானும் திரிஷாவும் அந்த வெளி வராத படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தோம், திடீர்னு அந்த சத்தம் த்ரிஷா இப்போ இல்லை அவளையும் காணும் பாட்டு மட்டும் ஓடிகொண்டே இருந்தது இப்போ மனம் கொத்தி பறவை படத்தில இருந்து போ போ போ !



அந்த சத்தமும் நிற்காமல் அசரீரீ போல் ஒலித்துகொண்டே இருந்தது !
என்னால் அதை கவனிக்க முடியவில்லை த்ரிஷாவை வேறு தேடவேண்டும் 
, இருட்டிவிட்டது எங்கும் இருள் (தமிழகம்தான்) தேடி அலுத்து அரைக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசித்துகொண்டே தூங்கிபோனேன் ,என் காதுகளுக்குள் அந்த சத்தம் கேட்பது நிற்கவேயில்லை அதோடு இப்போ ஜல் ஜல் ஜலோசை பாடல்   !

கனவில் நேற்று பார்த்த அந்த வெளிவராத படத்தின் நாயகி இரண்டே ஆடைகளுடன் ஆடிகொண்டிருந்தாள் ,திடீரென சத்தம் அதிகமாகியது !
அந்த சத்தத்துடன் என் பெயரும் ஒலித்தது !



விழித்து து த்ரிஷாவை தேடுவதில் தீவிரமானேன் எந்த சத்தத்தையும் சட்டை செய்யாமல் பாடல்களையும் கண்டுகொள்ளாமல் தேடினேன் !
நாங்கள் இருவரும் சேர்ந்து போன இடமெல்லாம் ,பிறகு அவளின் தோழியின் வீடு ,பூங்கா ,அவளுக்கு பிடித்த அணைத்து இடங்களிலும் , தேடி தேடி என ரணம் சுகம் பாடல் வேறு என்னை வெறுப்பேற்றியது அந்த சத்தத்தையும் பாடல்களையும் எப்படி நிறுத்துவது இப்போ கலியுகம் எடா கூட பாடல்  !

சத்தம் வலுத்தது என்னால் தாங்க முடியவில்லை , த்ரிஷா வேறு யாரிடம் மாட்டிகொண்டாளோ  தெரியவில்லை , பயமும் வெறியும் அதிகரித்தது - 

இந்த சத்தம் தாங்க முடியாமல் ஓடினேன் நிற்காமல் ஓடினேன் ,இரவுக்கு பேர் போன அந்த நெடுஞ்சாலையில் தலைதெறிக்க ஓடினேன் என்னை பின்தொடர்ந்து ஒரு இருசக்கரவாகனம் அதில் என் நண்பன் அருணும் த்ரிஷாவும் !


த்ரிஷா என்னை இப்படி ஏமாற்றுவாள்  என்று எதிர்பார்கவே இல்லை !
என்னை கடந்து என்னை கண்டுகொள்ளாமல் சென்றார்கள் இருவரும் !
எனக்கு இப்போ த்ரிஷாவை விட அந்த சத்தம் தான் அதிக கோபத்தை அதிகரித்தது , இவ்வளவு பிரச்சனைகளில் மழை வேறு ,முட்டாள் தனமாக ஓடினால் தப்பித்து விடலாம் என ஓடிக்கொண்டே இருந்தேன் இப்போ மயக்கம் என்ன பட ஓடி ஓடி தூரம் பாடல் !


 ,எதுவோ வந்து என் தலையில் விழுந்தது , பயங்கரமான வலி , இப்போது மயக்கம் என்ன தீம் பாடல் !



மயக்கமானதுபோல் உணர்ந்தேன் !

உண்மையாகவே நனைந்து காலில் பயங்கரமான வலியை உணர்தேன் 
கண் விழித்து  பார்த்தால் நண்பன் அருண் என் அறைக்கு வெளியே!
 பதறி போய்  திறந்தேன் வண்டை  வண்டையாய் கேட்டான் !

அதன் பிறகு தெரிய வந்த தகவல்கள் பின்வருமாறு 


1.நண்பன் அருண் இருபது நிமிடமாய் கதவை தட்டி இருக்கிறான் 
2.காதில் ஹெட் செட் இருந்ததால் எனக்கு கேட்கவில்லை 
3.இரவு படுக்கும்  முன் த்ரிஷாவின்  எடா கூட பாடல் பார்த்தது நினைவிற்கு வந்தது 
4.திறக்காததால் தண்ணி எடுத்து ஊற்றி பார்த்திருக்கிறான் -திராணி இழந்ததுதான் மிச்சம் 
5.கடைசியாய் எங்கிருந்தோ கற்களை எடுத்து வந்து அடித்திருக்கிறான் 
6.த்ரிஷாவை எங்க டா கூட்டிட்டு போன என்று கேட்டு அவன் கோபத்தை இன்னும் 2 வாங்கி கட்டி கொண்டேன் !
7.மேல் கண்ட அணைத்து பாடல்களும் என் ப்ளேலிஸ்ட்டில் உள்ளவை !


உடையை மாற்றி கொண்டு திரும்பவும் வந்து தூங்க தொடங்கினேன் கைபேசியை தூர எறிந்துவிட்டு !

என்ன கொடாம சார் இது !






No comments: