Pages

Saturday, July 31, 2010

மச்சி ட்ரீட்...(இன்பத்திலும்! துன்பத்திலும்! )

என்னங்க நமீதா எப்டி இருந்தாங்க (முந்தய பதிவு )?
இப்ப வரைக்கும் என்ன எழுதபோறேன்னு தெரியல கடந்த ஒரு மாசமா என்னோட எல்லா வேலையும் இப்படிதாங்க போகுது முன்னாடியே முடிவு பண்ணினா நாசமா போய்டுது அதான் எதுமே முடிவு பண்ணாம எரங்குறதா  முடிவு பண்ணிட்டேன் !!

இந்த ட்ரீட் மேட்டர் கூட நம்ம சில்லோட பதிவ படிச்சப டொய்ங் நு மண்டகுள்ள ஒரு புலப் எரிஞ்சது வேற என்ன எல்லாம் ஒரு பிளாஷ்பாக்தான்
(தலைவரோட பாடு கூட இருக்கே "நினைவோ ஒரு பறவை அது டொய்ங் நு  அடிக்கும் சிறகை !!")


கல்லூரி  சேந்த பிறகு மூனாமாண்டு நிறைவுலத்தான் நிறைய லீவே விட்டாங்க ஒரு மாசம் வீட்டுக்கு போய் உட்கார்ரதுகுள்ள மச்சி ட்ரீட்னு வந்துட்டானுங்க வேற யாரு உயரிலும் மேலான நண்பர்கள் !!

வீட்டுக்கு தெரியாம சுட்டு வச்ச துட்டுலாம் "தண்ணியா" போகுது பாஸ் என்ன செய்ய !!
சரி விடுன்னு வச்சா தினம் தினம் தீபாவளியா இருக்கு நல்ல வேல தினமும் நான் இல்ல சங்கத்துல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் டௌசெர் அவுக்குரானுங்க !!!

இதுல என்ன ஒரு கொடுமைனா இதுக்கு இவங்க சொல்ற காரணம்தான் பாஸ் !
(கான்செப்ட் கிடைச்சுடுச்சு  யே.......)


இதுக்காக ரூம் இல்லங்க வீடு புடிச்சி யோசிக்கிறாங்க !!

நண்பன் : மச்சி இன்னக்கி உன்  ட்ரீட்டு டா லைசென்ஸ் எடுத்ததுக்கு !
நான்: சரி மச்சி !
நண்பன்:அப்ப நாளைக்கும் நீதான் மச்சி ட்ரீட்டு !
நான் :எதுக்கு டா ?
நண்பன் :இன்னக்கி ட்ரீட் வைக்கபோறல்ல அதுக்கு டா !
நான் : ?! :(\

அட அத விடுங்க சந்தோசமான விஷயம் அட சோகத்துக்கும் கேக்குறாங்க பாஸ்! 

வண்டில இருந்து கீழ விழுந்தா ட்ரீட்டு  !
நான் :மச்சி இன்னக்கி வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்டா :(

நண்பன்:சரி கவலை படாத டா சாங்காலம் ட்ரீட் வச்சிபோம் எல்லாம் சரியா போய்டும் !
நான் : என்ன கொடும சார் இது ?!
நண்பன்:சரி கோச்சுக்காத டா நாளைக்கி வச்சா கூட  பரவாஇல்ல !


ட்ரீட்  கேக்கும் காரணங்கள் சில :

 • அறியர் விழுந்தா ட்ரீட்!
 • புது படத்துக்கு டிக்கெட் கிடச்சுதுன்னா தியேட்டர் உள்ளயே ட்ரீட் !
 • பஸ் பாஸ் எடுத்த ட்ரீட் அத புதுபித்தால் ட்ரீட் !
 • புது டிரஸ் போட்டா ட்ரீட் !
 • ஊருக்கு போன ட்ரீட்டு திருபி வீட்டுக்கு வந்தா ட்ரீட்டு !
 • ட்ரீட்டு வச்சா ட்ரீட் !
 • டாக்டர்கிட்ட போனா ட்ரீட்டு !
 • கோயிலிக்கு போனா ட்ரீட்டு !
 •  பிகுற பாத்தா ட்ரீட்டு  !
 • அவள்ட பேசுனா ட்ரீட்டு  !
 • அவ மதிக்காம ஓட ஓட விரடுனா ட்ரீட்டு  !
 • கல்லூரிக்கு  போனா ட்ரீட்டு  !
 • போகாம இருந்தா ட்ரீட்டு !

 ஒவ்வொரு விசயத்துக்கும் ட்ரீட்டு கேக்கும் நண்பர்கள் ஒரு நாள் இல்லனா
அது செம கான்டுங்க!
அதனால இப்ப என்ன சொல்ல வரேன்னா
"நல்ல நட்புக்கு ட்ரீட்டு"

அப்புறம் இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்!
மத்தவங்களுக்கு குட்டி ட்ரீட்டு !

மறக்காம வோட் போடுங்க !!!

10 comments:

குத்தாலத்தான் said...
This comment has been removed by the author.
ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னடா உனக்கே நீ ட்ரீட் கேக்குற ???

rk guru said...

intha pathivukku oru treet...

குத்தாலத்தான் said...

@rk guru
கண்டிப்பா தல வச்சுடலாம்

Gayathri said...

அடக்கடவுளே...டிரீட் ஒரு பெரிய இம்சை...தமாஷா இருக்கு..இனி டிரீட் நா இனிமே நான் தன சமைபேன்ன்னு சொல்லிடுங்க..நான் படிச்சப்போ அதன் செஞ்சேன்

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

ப.செல்வக்குமார் said...

சரி சரி இந்தமாதிரி பதிவு போட்டதுக்கு எப்ப ட்ரீட் வைக்கப் போறீங்க ..??

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

raju.r said...

hai machi nalla irukkiya ,i am raju da... ithu friend website da konjam publish pannu n un friends kitta solli traffic a increase pannu da

http://downloadgprs.blogspot.com

By
Raju.R
Mayiladuthurai