Pages

Saturday, October 9, 2010

101010-ஒரு நாள் மந்திரன்

நேத்து எந்திரன் பாத்தேன் ஆனா அதுக்கு முன்னாடி இங்க நிறைய பேரோட பதிவ படிச்சேன் நல்லவேளை நான் படம் பாக்கும்போது அதெல்லாம் நினைவுக்கு வரல ! :)

ஆனா எந்திரன்க்கு எதிர்மறை பதிவு போட்டு நல்லா ஹிட்ஸ் வாங்குனாங்க !
அவுங்க எல்லாரோட பதிவுலயும் காலநதி மாறன் , சன் பிக்சர்ஸ் மேல  இருக்கும் கோவத்தை கட்டுறாங்கன்னு தெளிவா தெரியுது அத  ஏன் படத்து மேல கட்டுனாங்கன்னு புரியல ! அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற அளவுக்கு நான் இன்னும் வளரல :) .  நானும் ஒத்துகிறேன்
 டீவீல அவுனுங்க பண்ணுறது கொஞ்சம் ஓவர்தான் ஆனா படத்துல  குறை சொல்ல முடியாது ! சில பேர்  எதிர்மறை பதிவு ஹிட்சுகாக போடுறதையும் சில பேர்  சன் பிக்சர்ஸ்க்காக போடுறதையும் தெளிவா பாக்க முடியுது !
  

சரி அத விடுங்க எனக்கு படம் புடிச்சிருக்கு . நேத்து எந்திரன் பாக்குறதுக்கு  முன்னாடியே நான் மந்திரன் பாத்தேன்
இங்க எதனை பேர் போரூர் பக்கம் போனீங்கன்னு தெரியல போனா பாத்திருக்கலாம் !
போனா வாரம் புதன் கிழமை மாலை போருர்ல பேருந்துக்கு நின்னபோ என்னையறியாம ஒரு பெரிய சைஸ் கட்அவுட் என்ன கவர்ந்துச்சு "அது என்னன்னா நம்ம தளபதி அதான்பா நம்ம துணை முதலமைச்சர் அவுரோட கட்அவுட்தான் அது" செம காமெடி பாஸ் !

எந்திரன் பட ரஜினி ஸ்டில்ல போட்டோஷாப்ல மாத்தி தளபதி  போட்டோவ போட்டு இருந்தாங்க ! உடனே எடுத்துடோம்ல  கிளிக்கு :)

இத அவரே பாத்துட்டு கடுப்பாகி எடுக்க சொல்லிருப்பார்ன்னு நினைக்கிறேன் அடுத்தநாளே இந்த ஒரு கட்அவுட் மட்டும் காணமல்போச்சு !! நமக்கு ஒரு மேட்டர் மாட்டுச்சு அது போதும் !!:)அப்புறம் இன்னக்கி என் நண்பனோட பிறந்தநாள்    !


போன வருஷம் ரொம்ப சிறப்ப கொண்டாடினோம் ஆனா இந்த வருஷம் சில காரணங்களால் சிறுசா கொண்டாடபோறோம் !  என் பிறந்தநாள் வாழ்த்த முதல் முறையா பதிவுமூலமா தெரிவிக்கிறேன் :)
அவனுக்காகதான் பதிவின் பெயரில்  நம்பர் !  

அப்புறம் சில கமெண்டுகளை பெற்ற என் மொக்கைகளை இங்கு போட்டு உங்களோட கம்மேன்டையும் வாங்கனும்னு ஒரு ஆசை !

* வழிகள் வழிபோக்கனை மறந்தாலும் என் கல்லூரிச்சாலையில் என் பதிவுகள் ஒட்டியிருக்கும் ரத்தமாய் #தடுக்கி விழுந்த நான்

* அவளை விட அழகாகவே கேட்கிறாள் உனக்கு எத்தனை "பெண் தோழிகள்" நீ மட்டும்தான் என்று அவளிடம் கூறியதைவிட தெளிவாக கூறினேன் :)#தங்கை மொழி

* வந்துவிட்டாள் அவளின் தங்கை அவளிடம் பேசிய பழைய கவிதைகளை நினைவுகூரவேண்டும் #தங்கை மொழி வேறென்றாலும் பெண்கள் மொழி ஒன்றுதான்:)

* இன்னும் எவ்வளவு நேரம் அவளிடம் பேசுவது அவள் தங்கை வரும் நேரம் ஆகிவிட்டது :(
அட்டவணை போட்டு பேச வேண்டியுள்ளது #தங்கை மொழி

* அவளை நினைக்கும்போதெல்லாம் மனதில் மன்மத ராகம் ரெண்டாய் கேட்கிறது அவள் தங்கைக்கும் சேர்த்து #தங்கை மொழி

* வண்டியில் குருக்கள் மந்திரம் ஊதிக்கொண்டே போகிறார் கைபேசியில் #கூடிய சீக்கிரம் அவருக்கு திதி ஓத ஆள் தேவைன்னு நினைகிறேன்#வண்டியோட்ட கைபேசி தேவையில்லை

* பாலகாண்டம் நிறைவடைந்து சுந்தரகாண்டம் தொடங்கும் என் நான் நினைத்திருந்தபோதுதான் யுத்தகாண்டம் டிஸ்கோ டான்ஸ் ஆடியது #காண்டபெயற்சி 

* இப்போதெல்லாம் அவள் கண்களை பார்த்தால் கவனம் சிதறுகிறது #தங்கையின் நினைவு

 *  இனி அவளுக்காக நான் எழுதும் குறுஞ்செய்தி அனைத்தும் forward செய்யப்படும் அவள் தங்கைக்கும் #தங்கை மொழி

 

 இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஆனா இப்போ கொஞ்சம் வேலை இருக்கு அடுத்த பதிவுல பாப்போம் !

நீங்க என்ன நினைச்சாலும் கமெண்ட் போடுங்க !

அத வச்சுதான் அடுத்த பதிவ அப்கிரேட் பண்ண முடியும்.  டாட்

 

 

 

16 comments: