Pages

Tuesday, July 13, 2010

நான் கல்லூரி செல்லும்போது....

நான் இருக்குற இடத்துல இருந்து ஒன்ற மணி நேரம் ஆகும் ... ஆறு மணிக்கு எந்துரிச்சா சரியாய் இருக்கும் ...ஆனா நமக்கு எட்டுக்கு முளிகிறது தான் பழக்கம் ?! என்ன செய்ய அலாரம் கிலாரம் வச்சு ரொம்ப கஷ்டப்பட்டு ஆறு முப்பதுக்கு முழிச்சி பேருந்து நிறுத்தத்திற்கு  போறப்ப மணி ஏழு பத்து ஆகும் "12b"  வரும் போய் வடபழனி பேருந்து நிலையத்திற்கு போனா "525"ய விட்டுருப்பேன் சரி குன்றத்தூர் போய் லிப்ட் வாங்கி போய்டலாம்னு "88"ல ஏறி குன்றத்தூர் போறப்ப எட்டேமுக்கால் தாண்டிடும் லிப்டு வாங்கிடலாம்னு போனா ஒரு பய நிறுத்தமாட்டான் அப்டியே ரூமுக்கு போலாம்னு தோணும் திரும்பி போன அண்ணா உதைபாங்க .அதனால லாரி ய  குறுக்க மடக்கி நாங்க ஒரு மூணு பேர் ஒம்போதேகால்கு  பதிலா   ஒம்போதே முக்கல்கு  உள்ள போவோம் நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வர்றத பாத்துட்டு என்ன நேனைச்சங்கன்னு தெரியல ஒரு வாரமா ஒரு பய  கூட  பாடம் எடுக்க வரல ...
என்ன சிவாஜி இப்டி ஆகி போச்சேன்னு!!! போய் வாகுபரைல உட்காந்தா ரெண்டு மணி நேரம் மொக்க மொக்க மரண மொக்க போட்டுட்டு எடுத்துட்டு வந்த எல்லா சோத்து மூடியும் முடிச்சிட்டு அங்கயே ஒரு தூக்கம் தூங்கிட்டு எந்திரிச்சா மணி மூணு சரி கேளம்பலம்னா திரும்பவும் லிப்டு !!!
அப்துல் கலாம் சொன்ன "கனவு காணுங்கள் " டயலாக் எங்க கலூரிக்கு சூட் ஆகும் எப்படி தெரியுமா
இந்த வருசமாவது பிகர்  வரும்னு கனவு காணுவோம்!!!
நல்ல டேலண்டன டீச்சர் வருவாங்கன்னு கனவு காணுவோம் !!
எல்லாமே கனவா போச்சு !!!
இன்னொரு டயலாக் சூட் ஆகும் அடு என்ன நா "௨௦௨௦ இல் இந்திய வின் வல்லரசு "
அது போல எங்க கலூறியும் ௨௦௨௦ தான் வளரசு ஆகும் போல
எப்புடியும் நா இருக்கும்போது ஆகாது அது மட்டும் புரிஞ்சுபோச்சு !!!
முடிச்சிட்டு டிகிரி வாங்குனா சரி ?!
(டீ ஆத்த விற்றுவான்களோ ?!@ பயமா இருக்கு )
தல சொன்ன மாதிரி கனவு காணுவோம்
(தல பல அர்த்தத்தோடதான்   சொல்லிறுக்காறு )

1 comment:

Prasanna said...

//அதனால லாரிய குறுக்க மடக்கி //

அவ்வளவு பெரிய லாரியவே குறுக்கால மடக்கிட்டீங்களா? ஏயப்பா :)