Pages

Thursday, September 2, 2010

என்னயா கல்வி ?

 அனைவருக்கும் என் வணக்கம் !
 இன்னக்கி  நான் கல்லூரி முடிஞ்சு வருகிறபோது   என்னை  மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி   அதன் மூலமே இந்த பதிவு !

என்னவோ குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்ன்னு அறிக்கைலாம் விடுறாங்க tollfree  நம்பர்லாம் குடுக்குறாங்க
எந்த அளவுக்கு அதுல வேல நடக்குதுன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னக்கி பாத்த அந்த சம்பவத்த பொருக்க முடியல !!!

என்னடா இவன் சம்பவம் சம்பவம்ன்னு சொல்றானே என்ன சம்பவம்ன்னு ரொம்ப யோசிக்காதீங்க இதுதான் ........
கல்லூரி முடிஞ்சு வீடு திரும்போது பேருந்தை விட்டு இறங்கி பத்தடி வைத்திருப்பேன் ஒரு 13 இல்ல 14 வயசு இருக்கும் ஒரு சிறுவன் "அண்ணா ஆப்பிள் வேணுமான்னா ?"

ஒரு சிறிய சாலையோர பழக்கடை வழக்கம்போல் நானும் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன் !
ஒரு நொடி திரும்பிய நான் கடையருகில் சென்று பார்த்தேன் அவனை பார்த்தால் தெளிவான சென்னை சிறுவன்
"காதில் கடுக்கனும் , முக்கால் டௌசரும் ,டி.ஷர்ட்டும் " அணிந்து ஏனென்று தெரியவில்லை அவனை கண்டதும் எதாவது வாங்க தோன்றியது அவனிடம் வாழைபழம் கேட்டுவிட்டு "என்ன படிக்கிறாய் என்று கேட்டேன் "
 அதற்கு  அவன் "இல்லன்னா நான் நிறுத்திட்டேன் !" என்றான் . ஏன் என்றேன் ? "இல்ல படிக்கல !" என்றான் .
எதனாலன்னு கேட்டேன் ? "நான் பள்ளிகூடதிர்க்கே போனதில்ல !" என்றான் ஒரு நொடி அதிர்ந்தேன் !

எனக்கு வார்த்தை வரவில்லை ! அங்கிருந்து என் உடல் மட்டும் நகன்றது .... மனதை விட்டு !
 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாம் ?!
 எத்தனையோ பேர் கல்வி அமைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆனாலும் இந்த அவல நிலை ஏன் ?
எனக்கு யோசிக்க பொறுமையில்லை திட்டிதீர்த்துவிட்டேன் !

இலவச ஆரம்ப கல்வின்னு சொல்றாங்க ....
இலவச சாப்பாடுன்னு  சொல்றாங்க.....
இலவச சீருடை , நோட்டு புத்தகம்,செருப்பு ,முட்டை ,.
இவ்ளோ இருந்தும் இன்னும் இப்டி நிறைய பேர் இருக்காங்க !

இதுல்லாம் கொடுத்தா இன்னும் நிறைய பேர் படிக்க வருவாங்கன்னு நினைச்சேன் ...
ஆனா நம்ம ஆளுங்க என்னக்கி  சாப்பாடு போடுறாங்களோ அன்னகி மட்டும் போய் சாப்டு வராங்க ?!
சரி கொடுக்குறது தான் ஒழுங்கா கெடைக்குத இல்ல!
எங்க ஊர்ல முட்டைலாம் பக்கத்துக்கு கடைல விதுடுறாங்க !
எல்லா துறையும் இப்டிதானா ?
(எப்டி பாத்தாலும் அவுங்க குடும்பம் மட்டும் கோடிகள்ள வளருதே  ?)

இன்று உலகில் எல்லா மூலையிலும் கல்வி மட்டும் தான் நட்டமில்லா தொழில் !
சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !





இதுக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க ?

14 comments:

ஜில்தண்ணி said...

me the firstuuuuu

படிச்சிட்டு வாரேண்....

சுவாசிகா said...

யோசிக்க வைத்த பதிவு..


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஜில்தண்ணி said...

இலவசமா கொடுத்தாலும் நாமதான் போய் வாங்கிக்கோணும்

அனுப்பாதது பெற்றோர் தானே ???

Unknown said...

@ஜில்தண்ணி - யோகேஷ்


ஆமா நான் இல்லன்னு சொல்லலியே !

Unknown said...

@சுவாசிகா

நன்றி தல !

ஜில்தண்ணி said...

ம்ம் நாம ஒன்ணே ஒன்னும் தான் செய்ய முடியும்

அந்த சிறுவனின் பெற்றோரிடமோ/பாதுகாவலரிடமோ பேசி புரிய வைக்கலாம்

ஜில்தண்ணி said...

எந்த பெற்றோரும் தன் பிள்ளைகளை இது மாதிரி வேலைக்கோ அல்லது தங்கள் தொழிலுக்கோ அவ்வளவு சீக்கிரத்தில் ஈடுபடுத்துவதில்லை

வேறு வழியில்லாமல் தான் இதை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்ன சொல்ற ?

மதுரை சரவணன் said...

சமூகம் பெரிசு... அதுல வாத்தியார் வேலை பெரிசு... வேறு இலவசங்களில காட்டும் தீவிர மோகத்தை இலவச கல்வியில் மக்கள் காட்டுவதில்லை.. எனெனில் நிரந்தர வருமான இழப்பு, கால் வயிற்றுக் கஞ்சிக்கு பிள்ளைகளின் வருமானத்தை நம்பும் பெற்றோர்கள் அதிகம்... பாவம் குழந்தைக்கள்... சமூக மாற்றம் வர அனைவரும் பாடு பட வேண்டும்... படிக்கும் போதே வருமானம் கொடுக்கும் கல்வி முறை ஏற்படுத்த வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Unknown said...

@மதுரை சரவணன் said...


நன்றி தல !

Chitra said...

சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !

..... எனது மனதில் ஆதங்கமும் வருத்தமும் பல யோசனைகளும் வருகின்றன.... தீர்வு மட்டும் காண முடியவில்லை.

RAVI said...

அன்பு குத்தாலத்தான்ஸ் வணக்கம் தல,
என்னுடைய வாழ்க்கையில் அப்பா
அம்மா படிச்சவங்க.அவங்களை நான் இதுவரை ஒருமையில் பேசியதே கிடையாது.
ஆனால் சிறு வயது 5-வயதிலிருந்து என்னை கடைக்கு அனுப்பியதிலிருந்து பால் வாங்குவதுவரை
என்னை வீட்டில் ஒரு அடிமையாகவே நடத்தினார்கள்.எனக்கு இரண்டு அக்கா,ஒரு அண்ணன்.அவர்களும் வேலைக்கு டிமிக்கி கொடுத்து என்னை அடித்து வேலை வாங்குவார்கள்.
விளையாடும் வயது,உலகம் தெரியாத வயதில் உருவான வைராக்கியத்தால்
வீட்டை விட்டு பிரிந்து தற்போது எந்த ஆதாரம் இன்றி நான் முன்னேறி உலகின் சிறந்த(!)
விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளேன்.
இதற்கு ஒரே தீர்வு குழந்தையை வேலைக்கு அனுப்பும் பெற்றோரை தண்டிப்பதுதான்.
வேறு தீர்வே கிடையாது.சட்டம் மாற வேண்டும்.
சமுதாயம் நிறைய பீல் பண்ணும் பாஸ்.ஒன்றும் செய்யாது.
நான் டீ கடையில் வேலை செய்த சில சிறுவர்களை மெக்கானிக்குகளாக சொந்த
தொழில் செய்பவர்களாக மாற்றியுள்ளேன்.
உங்கள் கட்டுரை அருமை.
புதியன பதியும்போது தகவல் கொடுங்கள்.
நன்றி.

(பி.கு.)தல,
கிண்டல்,ஆரோக்கியம்,தங்கிலீஷ்,புதிய வார்த்தைகள்(கொத்தனாரே),தமிழ் ஆராய்ச்சி,
பொழுதுபோக்கு மற்றும் இன்னும் பிற சொல்லமறந்த அருமையான twitter தற்போது கெட்ட வார்த்தைகளின் களமாக மாறி வருகிறது.இதை தடுக்க ஏதாவது உங்கள் பாணியில்
கட்டுரை எழுதி போடுங்கள்.

Anonymous said...

குத்தாலத்தான்,

நல்ல பதிவு...

மதுரை சரவணன் அவர்கள் சரியா சொல்லிடாரு - //படிக்கும் போதே வருமானம்//

இதை பல அலுலவகங்கள் ஊக்குவிக்கின்றன (learn while you earn!) மேல படிக்க ஆசையிருப்பவர்களை இப்படித்தான் சொல்லி வேலைக்கு அழைக்கிறார்கள்.

இது பள்ளி அளவிற்கு கொண்டுவருவதற்கு முயற்சி செய்யவேண்டும்.

இரண்டாவது யோசனை - பெற்றோர்களின் அறியாமையை போக்குதல். வழிகள் பல இருந்தாலும் இது கடினமானது.

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

இலவசக் கல்வி எல்லாம் சும்மாங்க. உண்மையில் அதனால் பெரும் பயன் எதுவும் இல்லை. இந்த மாதிரி பசங்க நிறைய பேர் இப்பல்லாம் டீக்கடை, சைக்கிள் கடையில் வேலை செய்யறத பார்க்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே வருமானம் பற்றாத நிலையில் கல்விக்கு பணம் செலுத்த அவர்களால் எப்படி முடியும்?

NS Manikandan said...

மிகவும் சிந்திக்க வைக்கும் அற்புதமான பதிவு..


உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி